குடிமகான் விமர்சனம் : ‘குடிமகான்’ சிரிக்க வைத்து சிந்திக்க வைத்திருக்கும் அருமையான படத்தை அனைவரும் குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியோடு பார்க்கலாம் ரசிக்கலாம் மனம் மகிழலாம் | ரேட்டிங்: 4/5

0
565

குடிமகான் விமர்சனம் : ‘குடிமகான்’ சிரிக்க வைத்து சிந்திக்க வைத்திருக்கும் அருமையான படத்தை அனைவரும் குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியோடு பார்க்கலாம் ரசிக்கலாம் மனம் மகிழலாம் | ரேட்டிங்: 4/5

சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில்; எஸ்.சிவகுமார்; தயாரித்துள்ள படம் ‘குடிமகான்’. படத்தில் விஜய் சிவன், சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது ராமன், , ஜி.ஆர் கதிரவன், கேபிஒய் ஹானஸ்ட் ராஜ், லவ்லி ஆனந்த், விஜய் ஆனந்த், யுகன், டெனிஸ், மாஸ்டர் அஜய் கிருஷ்ணா, இவியா தரணி, அர்விந்த் ஜானகிராமன், பரத் நெல்லையப்பன், மணி சந்திரா, பார்த்தசாரதி, மனோகர் பலர் நடித்துள்ளனர்.

நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ்.என் இயக்கியிருக்கிறார். இசை-தனுஜ் மேனன்,ஒளிப்பதிவு – மெய்யேந்திரன், படத்தொகுப்பு-ஷிபு நீல், தயாரிப்பு நிர்வாகி –ஜி.ஆர்.கதிரவன், ஆடை-பிரியா கரன், பிரியா ஹரி, கலை-சுரேஷ் விஷ்வா, தயாரிப்பு வடிவமைப்பு-பிரேம் கருத்தமலை, நடனம்-அமீர், சண்டை-பயர் கார்த்திக், மக்கள் தொடர்பு-ஜான்.

மனைவி சாந்தினி, பள்ளிpயில் படிக்கும் மகன், மகள் மற்றும் குடிகார தந்தை சுரேஷ் சக்கரவர்த்தியுடன் ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வேலை செய்யும் விஜய் சிவன் வசிக்கிறார். எப்பொழுதும் நொறுக்கு தீனி திண்பதை வழக்கமாக கொண்டதால் அரிய வகை நோயால் பாதிக்கப்படுகிறார். தன் தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது பாதிப்பு ஏற்பட இந்த நோய் பற்றி தெரிந்து கொள்கிறார். துரித உணவு உட்கொண்டவுடன் போதை உண்டாகி குடித்தவர்கள் செய்யும் அமர்களங்களை செய்ய தொடங்குகிறார். இதனை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் விஜய் சிவன், ஒரு கட்டத்தில் ஏடிஎம்மில் தவறுதலாக 100 ரூபாய் கட்டுக்கு பதிலாக 500 ரூபாய் கட்டுக்களை வைத்து விட அதனால் எட்டு லட்சத்தை மக்கள் ஏடிஎம்யிலிருந்து எடுத்துச் சென்று விடுகின்றனர். இதனை தடுக்க முடியாமல் போலீஸ் தடுமாறுகிறது. சிசிடிவி கேமரா வேலை செய்யாததால் யார் எடுத்தனர் என்பதை கண்டறிய முடியாமல் பணம் நிரப்பும் ஏஜென்சியிலிருந்து விஜய் சிவனை வேலையை விட்டு தூக்கி விடுகின்றனர். எடுத்துச் சென்ற எட்டு லட்சத்தை மீட்டு மீண்டும் வேலையில் சேர முடிவு செய்கிறார் விஜய் சிவன். இவர்களை தேடும் முயற்சியில் இறங்கும் போது குடிமகன் சங்கத்தின் தலைவர் நமோ நாராயணின் நட்பு கிடைக்க, உதவியும் செய்ய சம்மதிக்கிறார். இவர்கள் அனைவரும் சேர்ந்து எட்டு லட்சத்தை மக்களிடமிருந்து மீ;ட்டார்களா? இவர்களை இழுபறியில் விடுபவர்களை எப்படி சமாளித்து சம்மதிக்க வைத்து பணத்தை வாங்கினார்கள்? வுpஜய் சிவன் பணத்தை மீட்டு வேலையில் சேர்ந்தாரா? என்பதே நகைச்சுவை கலந்த க்ளைமேக்ஸ்.

மதியாக புதுமுகம் விஜய் சிவன் படம் முழுவதும் தன் தோளில் சுமந்து நடுத்தர குடும்பத் தலைவனாக வாழ்ந்துள்ளார். வேலைக்கு போவது, வருவது என்று அன்றாடம் வாழ்க்கையை சிரமப்பட்டு நடத்தும் நேரத்தில் அரிய வகை நோயால் தன் வாழ்க்கை சின்னாபின்னாமாகிப் போக, அதிலிருந்து மீளும் முயற்சியில் நடக்கும் சம்பவங்களை தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் கவனிக்க வைத்து சிரிக்கவும் வைத்துள்ளார் விஜய் சிவன். வெல்டன்.

மனைவி பவித்ராவாக சாந்தினி தமிழரசன் யதார்த்தமான பேச்சு, நடை, உடை, பாவனை என்று தனது பங்களிப்பை திறம்பட கொடுத்துள்ளார்.

தந்தை சுந்தரமாக குடித்து விட்டு ரகளை பண்ணுவதும், பின்னர் மைனராக வலம் வந்து திருமணம் செய்து கொண்டு கவலை இல்லாமல் சுற்றி வருவது என்று  சுரேஷ் சக்கரவர்த்தி அமர்க்களம்.

குடிமகன் சங்கத் தலைவராக இரண்டாம் பாதி முழுவதும் போடும் திட்டங்கள் நமோ நாராயணன் முக்கிய பங்கு வகித்து படத்தை நகைச்சுவையோடு பயணிக்க வைத்துள்ளார்.

இவர்களுடன்  சேது ராமன், , ஜி.ஆர் கதிரவன், கேபிஒய் ஹானஸ்ட் ராஜ், லவ்லி ஆனந்த், விஜய் ஆனந்த், யுகன், டெனிஸ், மாஸ்டர் அஜய் கிருஷ்ணா, இவியா தரணி, அர்விந்த் ஜானகிராமன், பரத் நெல்லையப்பன், மணி சந்திரா, பார்த்தசாரதி, மனோகர் அனைவருமே முக்கிய புள்ளியாக இருந்து படத்தின் விறுவிறுப்பை கூட்டியுள்ளனர்.

தனுஜ் மேனன் இசையும், பின்னணி இசையும், மெய்யேந்திரன் ஒளிப்பதிவும் இரட்டை குழல் துப்பாக்கியாக படத்தின் அனைத்துக் காட்சிகளையும் ரசிக்கும்படியும், சிரிக்கும்படியும் திறம்பட கொடுத்து கை தட்டல் பெறுகின்றனர்.

படத்தொகுப்பு-ஷிபு நீல் , சண்டை-பயர் கார்த்திக் படத்திற்கு பலம்.

குடிமகன் என்றால் அனைவருக்கும் புரியும். குடிமகான் என்றால் அதற்காக அர்த்தத்தை இந்தப் படத்தை பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம். குடி, போதை பற்றி இருந்தாலும் குடியை மையப்படுத்தி இந்தப்படம் எடுக்கப்படவில்லை. துரித உணவால் போதையாகும் குடும்பத் தலைவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றி விரிவாக சொல்லி, அதனால் ஏற்படும் பாதிப்புக்களை சமாளித்து எப்படி வெற்றி காண்கிறான் என்பதை தனது  பாணியில் விவரித்து அசத்தலாகவும், நகைச்சுவை கலந்து குடும்பத்துடன் பார்க்கும் படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் பிரகாஷ்.என். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும், உணவே மருந்து இதை உணர்த்தும் படம். துரித உணவு உடலுக்கு கேடு என்பதை சிறந்த திரைக்கதையாக்கி, அனைவரும் ரசிக்கும் வண்ணம் திகட்ட திகட்ட இரண்டாம் பாதியில் காமெடி துரத்தலுடன் சிறப்பாக கொடுத்துள்ளார் இயக்குனர் பிரகாஷ்.என். நல்ல கருத்தை எப்படி கொடுக்க முடியுமோ அதை திறம்பட நகைச்சுவை ததும்ப கலந்து கொடுத்து முதல் படத்திலேயே சிறந்த திரைக்கதையோடு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் இயக்குனர் பிரகாஷ்.என். நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் சென்று ரசிக்கக்கூடிய படமாக வந்துள்ளது.

மொத்தத்தில் சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில்; எஸ்.சிவகுமார் தயாரித்துள்ள படம் ‘குடிமகான்’ சிரிக்க வைத்து சிந்திக்க வைத்திருக்கும் அருமையான படத்தை அனைவரும் குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியோடு பார்க்கலாம் ரசிக்கலாம் மனம் மகிழலாம்.