கிங்ஸ்டன் சினிமா விமர்சனம் : கிங்ஸ்டன் தொழில்நுட்ப ரீதியாக சிலிர்ப்பூட்டும் கடல் சாகச த்ரில்லர் | ரேட்டிங்: 3/5

0
563

கிங்ஸ்டன் சினிமா விமர்சனம் : கிங்ஸ்டன் தொழில்நுட்ப ரீதியாக சிலிர்ப்பூட்டும் கடல் சாகச த்ரில்லர் | ரேட்டிங்: 3/5

நடிகர்கள் :
கிங்ஸ்டன் – ஜி.வி. பிரகாஷ் குமார்
ரோஸ் – திவ்யபாரதி
சாலமோன் – சேத்தன்
ஸ்டீபன் போஸ் – அழகம் பெருமாள்​
மார்டின் – இ. குமரவேல்
தாமஸ் – சாபுமோன்
அப்துசாமத் லிபின் – ஆண்டனி
காட்ஸன் – ராஜேஷ் பாலாசந்திரன்
பிலிப்ஸ் – அருணாசலேஸ்வரன். ப
பென்ஜமின் – பிரவீன்
CREATURE – FIRE கார்த்திக்

தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்குனர் – கமல் பிரகாஷ்
ஒளிப்பதிவு – கோகுல் பினாய்
இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
படத்தொகுப்பு – சான் லோகேஷ்
கலை இயக்குனர் – எஸ்.எஸ்.மூர்த்தி
சண்டை இயக்குனர் – திலிப் சுப்பராயன்
ஆடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி
PROSTHETIC MAKEUP – பிரதீப் விதுரா
தயாரிப்பு – ZEE STUDIOS, PARALLEL UNIVERSE PICTURES
தயாரிப்பாளர்கள் – ஜி.வி. பிரகாஷ் குமார், உமேஷ் கே.ஆர்.பன்ஸல், பவானி ஸ்ரீ
மக்கள் தொடர்பு – யுவராஜ்

1982 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் தூவத்தூர் என்ற கடலோர கிராமம் ஒரு அமானுஷ்ய சக்தியால் சபிக்கப்பட்டு. அதைச் சபிக்கப்பட்ட கடல் பகுதி என்று நம்பும் அவர்கள், மீறிச் சென்றால் சடலமாக கரை ஒதுங்குகிறார்கள். தொடர் மரணங்கள் கிராமத்தை வேதனையிலும் பயத்திலும் ஆழ்த்துகின்றன.  இந்த மரணங்களுக்கு பின்னால் ஸ்டீபன் போஸ் (அழகன் பெருமாள்) தான் காரணம் என்று கிராம மக்கள் கணித்து அவரைக் கொன்றுவிடுகிறார்கள். அவரது ஆன்மா தங்களுக்கு எதிராக பழிவாங்குவதாகவும் கிராம மக்கள் கணிக்கின்றனர். அவரது உடல் கடலில் வீசப்படுகிறது. இதனால் அங்கு மீன் பிடிக்க அரசு நிரந்தரமாக தடை விதிக்கிறது. கிராம மக்கள் 43 ஆண்டுகளாக கடலில் மீன்பிடிக்கச் செல்லவில்லை. நிகழ்காலத்தில், கிங் (ஜி.வி.பிரகாஷ் குமார்) என்று அழைக்கப்படும் கிங்ஸ்டன், தூத்துக்குடியில் தாமஸ் (சபுமோன் அப்துசமத்) தலைமையிலான ஒரு கடத்தல் கும்பலுக்காக வேலை செய்யும் ஒரு பேராசை கொண்டு பண வெறி பிடித்த மனிதர். இருண்ட ரகசியங்களை அவர் வெளிப்படுத்தும்போது, கிங் அந்தக் கும்பலை விட்டு வெளியேற முடிவு செய்கிறார். தனது கிராமத்தின் இழந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கத் தீர்மானித்த அவர், கிராமவாசிகளின் எச்சரிக்கைகளை மீறி சபிக்கப்பட்ட அந்த கடலில் பயணம் செய்கிறார். இருப்பினும், கடலின் கொடிய சாபம் அவரது வழியில் நிற்கிறது. கிங் கடலுக்குள் நடக்கும் அமானுஷ்யங்களின் தாக்குதல்களை முறியடித்து, மீண்டும் தூவத்தூர் கிராம மீனவர்கள் பழையபடி மீன் பிடிக்க எப்படி உதவுகிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

ஜி.வி.பிரகாஷ் குமார் தனித்துவமான ஸ்கிரிப்ட்டை தேர்வு செய்து நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கிங் கதாபாத்திரத்திற்காக அவரின் கச்சிதமான உழைப்பு பராட்டுக்குரியது. தனது திறமைக்கு ஏற்றவாறு  கடல் சாகச காட்சிகளில் நடக்கும் சில சிலிர்ப்பூட்டும் தருணங்களில் பார்வையாளர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கின்றார்.

திவ்ய பாரதி வழக்கமான காதலி கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

வழக்கமான வில்லன் கதாபாத்திரத்தில் சேதன் அசத்தி உள்ளார்.

அழகம் பெருமாள், ஷபு மோன், குமரவேல், சாபுமோன், ஆண்டனி, அப்துசமத், ஆண்டனி, ராஜேஷ் பாலாசந்திரன், அருணாச்சலேஸ்வரன் மற்றும் பிரவீன் ஆகியோர் சிறப்பாக நடித்து தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை அருமையாக உள்ளது, பின்னணி இசை படத்தின் உணர்ச்சி மற்றும் சிலிர்ப்பூட்டும் தருணங்களை உயர்த்தியுள்ளது.

கோகுல் பினோயின் ஒளிப்பதிவில் ஆழ்கடல் நீலம் பளிச்சென தெரிவதுடன், பிரம்மிப்பான  காட்சியமைப்புகள் படத்திற்கு மதிப்பை சேர்த்தது. VFX மற்றும் CGI கடல் காட்சிகளின் நம்பகத்தன்மையை  உணர வைத்துள்ளது. காட்சி ரீதியாக, கிங்ஸ்டன் ஒரு பயங்கரமான மற்றும் ஆழமான அனுபவத்தை உருவாக்குகிறது, புயல் நிறைந்த கடல்களும் மூடு பனியில் நனைந்த தண்ணீரும் படத்தின் தொனியை அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

முதல் பாதி மந்தமான வேகத்தில் நகர்கிறது, இரண்டாம் பாதி சற்று முன்னேறினாலும், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் எடிட்டிங்கில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

இயக்குனர் கமல் பிரகாஷ் தனது அறிமுகப் படத்தில் கடலில் மீன்பிடித்தல், கடத்தல், ஜாம்பிக்கள் மற்றும் கடலில் உள்ள செல்வம் பற்றிய தொடர் கதைகளைக் கொண்டு வித்தியாசமான ஒன்றை முயற்சித்திருக்கிறார். மேலும் கடலின் தனிமை மற்றும் மர்மத்தை திறம்பட காட்சிப்படுத்தி உள்ளார். குறிப்பாக இரவு நேர காட்சிகளில், அவை கிட்டத்தட்ட வேறொரு உலகத்தைப் போல உணரப்படுகின்றன. எலும்புக்கூடு உருவங்களும், பேய் உருவங்களும் ஆழத்திலிருந்து வெளிப்படும் இயற்கைக்கு அப்பாற்பட்ட காட்சிகள் பார்வைக்கு பிரமிக்க வைக்கின்றன. இருப்பினும், அவற்றின் உண்மையான அச்சுறுத்தல் இல்லாததும், ஆவிகள் எதுவும் எந்த உறுதியான ஆபத்தையும் ஏற்படுத்தாததும் பெரிய குறை. இயக்குனர் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் கிங்ஸ்டன் மிரட்டலான கடல் சாகச த்ரில்லராக வந்திருக்கும்.

மொத்தத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், உமேஷ் கே.ஆர்.பன்ஸல், பவானி ஸ்ரீ இணைந்து தயாரித்துள்ள கிங்ஸ்டன் தொழில்நுட்ப ரீதியாக சிலிர்ப்பூட்டும் கடல் சாகச த்ரில்லர்.