காலங்களில் அவள் வசந்தம் விமர்சனம் : காலங்களில் அவள் வசந்தம் காதலையும், நிகழ்கால வாழ்க்கையும் பிரதிபலிக்கும் கம்பீரமான பிம்பம் | ரேட்டிங்: 3/5
ஸ்ரீ ஸ்டியோஸ் மற்றும் அறம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் கௌசிக்ராம், அஞ்சலி, ஹிரோஷினி, மாத்யூ வர்கீஸ், ஜெயா சுவாமிநாதன், சுவாமிநாதன், ஆர்.ஜெ.விக்னேஷ்காந்த், அனிதா சம்பத், அருண், தருண் பிரபாகர், விஜே.ராஜீவ், சவுந்தர்யா நஞ்சுண்டான், ராஜம்மா, டாக்டர் மணிகண்டன், டாக்டர் பாயல் மணிகண்டன் ஆகியோர் நடித்துள்ளனர்.
காலங்களில் அவள் வசந்தம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராகவ் மிர்தத்.ஒளிப்பதிவு-கோபி ஜகதீஸ்வரன், எடிட்டர்-லியோ ஜான் பால், இசை-ஹரி எஸ்.ஆர்;, உடை-ரிமேக்கா மரியா, கலை-எஸ்.கே, நடனம்-சாண்டி, சண்டை-ஹரி தினேஷ், லைன் தயாரிப்பாளர்-அருண் பராஜித் மற்றும் சிவகுமார், நிர்வாக தயாரிப்பு -அரவிந்த் சுரேஷ்குமார், தயாரிப்பு மேற்பார்வை-சி.வி.விஜயன், தயாரிப்பு நிர்வாகி-சந்துரு சி.வி, பிஆர்ஒ-நிகில் முருகன்.
சினிமாவால் ஈர்க்கப்பட்டு காதல் மன்னான தன்னை நினைத்து கொண்டு வலம் வரும் கௌசிக்ராம். புதிதாக ஹிரோஷினி என்ற பெண்ணை ஆறு மாத காலமாக துரத்தி காதலிக்க வைத்து செல்போன் நம்பரையும் வாங்கி வருகிறான். இந்த சமயத்தில் அவனுடைய வீட்டிற்கு தந்தையின் நண்பர் மகள் அஞ்சலி வருகிறாள். அஞ்சலிக்கு கௌசிக்கை பிடித்து விட திருமணமும் நடக்கிறது. திருமணத்திற்கு பின் சினிமாவில் வருவது போல் ரோமான்டிக் மூடிலேயே வலம் வரும் கௌசிக்கை முதலில் அஞ்சலி ரசித்தாலும், பின்னர் அவனின் டைரியை பார்க்க நேரும் போது அவளுடைய எண்ணம் மாறுகிறது. வாழ்க்கை சினிமா இல்லை, காதல் மட்டுமே வாழ்க்கையும் இல்லை என்பதை உணர வைக்க போராடுகிறாள். ஆனால் இதை புரிந்து கொள்ளும் மனநிலையில் கௌசிக் இல்லாததால் இருவருக்குள்ளும் சண்டை ஏற்படுகிறது. இதனிடையே காதலி ஹிரோஷினி கௌசிக்கை தொடர்பு கொண்டு காதலிக்குமாறு வற்புறுத்துகிறாள். காதலியிடம் தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை மறைக்கிறான் கௌசிக். இதனை கேள்விப்படும் அஞ்சலி கௌசிக்கை விட்டு விலகுகிறாள். இறுதியில் அஞ்சலி-கௌசிக் விரிசல் சரியானதா? காதலியா? மனைவியா? என்ற கேள்விக்கு பதில் படத்தின் க்ளைமேக்ஸ்.
புதுமுகமாக அறிமுகமானாலும் தேர்ந்த நடிப்பால் இளமை துள்ளலுடன் காதல் கனவுகளில் உலா வரும் கௌசிக்ராம், அழகு பதுமையாக புத்திசாலி மனைவியாக அஞ்சலி, அப்பாவி காதலியாக ஹிரோஷினி, அப்பாவாக மாத்யூ வர்கீஸ், அம்மாவாக ஜெயா சுவாமிநாதன், முதலாளியாக சுவாமிநாதன், நண்பராக ஆர்.ஜெ.விக்னேஷ்காந்த், தோழியாக அனிதா சம்பத், வில்லனாக அருண், நண்பராக தருண் பிரபாகர், விஜே.ராஜீவ், சவுந்தர்யா நஞ்சுண்டான், ராஜம்மா, டாக்டர் மணிகண்டன், டாக்டர் பாயல் மணிகண்டன் ஆகியோர் இந்த படத்தின் அசத்தலான காட்சிகளுக்கு உத்திரவாதமான நடிப்பை கொடுத்துள்ளனர்.
ஒளிப்பதிவு-கோபி ஜகதீஸ்வரன், எடிட்டர்-லியோ ஜான் பால், இசை-ஹரி எஸ்.ஆர்; படத்தின் காட்சிக் கோணங்களுக்கு ஏற்ற வகையில் முக்கியத்துவத்தை உணர்ந்து படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.
காதல் பட்டாம்பூச்சியாக சிறகடிக்கும் கணவனுக்கு யதார்த்த வாழ்க்கையை புரிய வைக்க நினைக்கும் மனைவியின் உணர்ச்சி போராட்டங்களை திரைக்கதையாகயமைத்து காதலை மையமாக வைத்து லாஜிக் இல்லா மேஜிக் செய்து படத்தை திருப்திகரமாக கொடுத்துள்ளார் இயக்குனர் ராகவ் மிர்தத்.
மொத்தத்தில் ஸ்ரீ ஸ்டியோஸ் மற்றும் அறம் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கும் காலங்களில் அவள் வசந்தம் காதலையும், நிகழ்கால வாழ்க்கையும் பிரதிபலிக்கும் கம்பீரமான பிம்பம்.