காதலிக்க நேரமில்லை சினிமா விமர்சனம் : காதலிக்க நேரமில்லை வசீகரமான நடிப்புடன் காதல் நகைச்சுவை கலந்த நவீன கிளாசிக் | ரேட்டிங்: 3.5/5

0
749

காதலிக்க நேரமில்லை சினிமா விமர்சனம் : காதலிக்க நேரமில்லை வசீகரமான நடிப்புடன் காதல் நகைச்சுவை கலந்த நவீன கிளாசிக் | ரேட்டிங்: 3.5/5

நடிகர்கள் :
ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு, வினய் ராய், டிஜே பானு, ஜான் கொக்கன், லால், லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, வினோதினி, ரோகன் சிங்
தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்குனர் : கிருத்திகா உதயநிதி
தயாரிப்பு பேனர் : ரெட் ஜெயண்ட் மூவிஸ் பிரைவேட் லிமிடெட்
இணை தயாரிப்பாளர்கள் : எம்.செண்பக ​மூர்த்தி, ஆர்.அர்ஜுன் துரை
இசை : ஏ ஆர் ரஹ்மான்
ஒளிப்பதிவு : கேவெமிக் ஆரி
பாடலாசிரியர் : சினேகன், விவேக், ​மஷூக் ரஹ்மான், கிருத்திகா நெல்சன்
எடிட்டர் : லாரன்ஸ் கிஷோர்
நடனம் : ஷோபி பால்ராஜ், சாண்டி, லீலாவதி
தயாரிப்பு வடிவமைப்பாளர் : லதா நாயுடு
கலை இயக்குனர் : சண்முகராஜா
தயாரிப்பு நிர்வாகி : ஈ.ஆறுமுகம்
விநியோக மேலாளர் : சி.ராஜா
ஒலி வடிவமைப்பாளர் : விஜய் ரத்தினம்
ஒலிக்கலவை : ரஹமத்துல்லா
விளம்பர வடிவமைப்பாளர் : கோபி பிரசன்னா
ஸ்டில்ஸ் : ஆர் எஸ் ராஜா
ஆடை வடிவமைப்பாளர் : கவிதா ஜே, திவ்யா லக்ஷனா
ஒப்பனை : ராஜ் கென்னடி
DI : பிக்சல் லைட் ஸ்டுடியோ
வண்ணம் : ரங்கா
VFX : ஆர்.ஹரிஹரசுதன்
டப்பிங் இன்ஜினியர் : என். வெங்கட பாரி
வசனங்கள் : சஜித் அலி
பத்திரிக்கை தொடர்பு : AIM சதீஷ்

பெங்களூரில் கட்டடக்கலை பொறியாளராக பணி புரியும் சித்தார்த் (ரவி மோகன்), ஒரு மகிழ்ச்சியான இலட்சிய நோக்கம் கொண்ட இளைஞன், சித்தார்த்துக்கு திருமணத்தின் மீதும்  குழந்தைகள் மீதும் விருப்பம் இல்லை. அவருடைய சிறந்த நண்பர்கள் சேது (வினய்), மற்றும் கவுடா (யோகி பாபு). சேது ஒரு ஓரினச்சேர்க்கையாளர், அவர் ஒரு குழந்தையை பெற விரும்புகிறார். தனது நண்பன் சேதுவின் வற்புறுத்தலால் மருத்துவமனை ஒன்றில் சேதுவுடன் சோந்து சித்தார்த் மற்றும் கவுடா தங்கள் விந்தணுவை தானம் செய்கிறார்கள். சித்தார்த் தனது காதலி நிருபமாவுடன் (டி.ஜே. பானு) நிச்சயதார்த்தம் நடக்க இருக்கும் நாளில் காதலி கடைசி நேரத்தில் வராமல் போனதால் நிச்சயதார்த்தம் நின்று போகிறது. சித்தார்த் மிகவும் மனமுடைந்து போனாலும் தனது வாழ்க்கையைத் தொடர்கிறார். மறுபுறம், கட்டிடக் கலைஞர் ஸ்ரேயா (நித்யா மேனன்) மற்றும் கரண் (ஜான் கொக்கன்) இருவரும் நான்கு ஆண்டுகளாக காதலிக்கிறார்கள். இப்போது அடுத்த கட்டத்தை எடுக்கத் தயாராக நிலையில் இருவரும் முறைப்படி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் ஏற்பாடு நடக்கும் போது, விசா நோக்கங்களுக்காக தங்கள் குடும்பத்தினருக்கு தெரியாமல் அவர்கள் பதிவு திருமணம் செய்து கொள்கிறார்கள். பதிவுத் திருமணம் செய்து கொண்ட பிறகு  கணவர் தனது உயிர் தோழியுடன் படுக்கையில் இருப்பதைக் காண்கிறாள், அதன் பின் ஸ்ரேயா அவரிடம் இருந்து பிரிந்து செல்கிறாள். சித்தார்த் மற்றும் ஸ்ரேயா, தத்தமது காதல் வாழ்வில் பிரிவு ஏற்பட மனம் உடைந்த இரண்டு பேரும் தைரியத்தைத் திரட்டி, ஓரு புதிய பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்கிறார்கள். இந்நிலையில், சித்தார்த் மற்றும் ஸ்ரேயா ஒரு சந்தர்ப்பத்தில்  நேரில் சந்திக்கும் போது நட்பு ஏற்படுகிறது. காதல் மற்றும் ஆண்கள் மீது நம்பிக்கை இழந்து கடும் மன விரக்தியில் இருக்கும் ஸ்ரேயா, IVF கர்ப்பத்திற்கு உட்பட்டு ஒற்றை பெற்றோராக மாற முடிவு செய்கிறார். அதனால் பெற்றோர் கோபத்துக்கு ஆளாகி வீட்டை விட்டு வெளியேறுகிறார். குழந்தை பிறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரேயா எதேச்சையாக சித்தார்த்தை பெங்களூருவில் சந்திக்கிறார். அதன் பின் ஸ்ரேயாவின் மகன் மூலம் இருவருக்கும் ஒரு பிணைப்பு உருவாகுகிறது. அதன் பின்னர் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

சித்தார்த்தின் வசீகரமான மற்றும் வேடிக்கையான ஆளுமையை ரவி மோகன் சிரமமின்றி சித்தரிக்கிறார். அவரது நகைச்சுவை  மற்றும் நித்யா மேனனுடனான அவரது கெமிஸ்ட்ரி காதல் துணைக் கதைக்கு நம்பகத்தன்மையை சேர்க்கிறது. மேலும் அவருக்கும் ஸ்ரேயாவின் மகனுக்கும் இடையிலான காட்சிகளில் திரையில் ஒரு உண்மையான தந்தை-மகன் உறவை உணரக்கூடியதுபோல் இருக்கிறது.

ஒரு துணிச்சலான பெண் ஒற்றை பெற்றோராக மாற முடிவு செய்யும் போது, குடும்ப எதிர்பார்ப்புகளுக்கும் தனது சொந்த ஆசைகளுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒரு நவீன பெண்ணான ஸ்ரேயாவாக, நித்யா மேனன் ஒரு தாயாக வேண்டும் ஒற்றை பெற்றோராக வேண்டும் என்ற ஏக்கத்தையும் உயிர்ப்பிக்கிறார்.  தனது நடிப்பால் ஒரு அழுத்தமான தன்மையுடன் சமநிலைப்படுத்தி அவரது கதாபாத்திரத்தை தனித்து நிற்க வைக்கிறது.

ஓரினச்சேர்க்கையாளர் சேதுவாக வினய் ராய் விசுவாசமான மற்றும் குறும்புக்கார நண்பராக நகைச்சுவையிலும் ஜொலிக்கிறார்.

சித்தார்த்தின் முன்னாள் காதலி நிருபமாவாக டி.ஜே.பானுவின் இளமைத் துடிப்பும்,  நடிப்பும் கதைக்கு புதிய ஆற்றலைக் கொண்டு வருகிறது.

சித்தார்த்தின் தந்தையாக லால், நண்பர் கவுடாவாக யோகி பாபு, ஸ்ரேயாவின் காதலன் கரணாக ஜான் கொக்கன், அம்மாவாக லட்சுமி ராமகிருஷ்ணன், அப்பாவாக பாடகர் மனோ, சித்தியாக வினோதினி, 8 வயது மகனாக ரோகன் சிங் உட்பட அனைவரும் கதாபாத்திரத்திற்கு வசீகரத்தை கொண்டு வருகிறார்கள், அதே நேரத்தில் மிகையான எதிர்வினைகள் மூலம் நகைச்சுவை சூழ்நிலைகளுக்கும் பங்களிக்கிறார்கள்.

கேவெமிக் ஆரி ஒளிப்பதிவு மற்றொரு தனித்துவமான அம்சமாகும். துடிப்பான காட்சியமைப்புகள் சென்னை மற்றும் பெங்களூரின் அழகிய இடங்களின் ஆடம்பரத்தை காட்டுகிறது.

சினேகன், விவேக், மஷூக் ரஹ்மான், கிருத்திகா, நெல்சன் ஆகியோரின் பாடல் வரிகளுக்கு ஏ.ஆர். ரஹ்மானின் கவர்ச்சிகரமான மெல்லிசை மற்றும் பின்னணி இசை துடிப்பான கதைக்கு உணர்ச்சி ஆழத்தை சேர்க்கிறது.

லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு காதல், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையின் சிக்கலான தன்மையை நிலையான வேகத்தில் பராமரிக்கிறது.

கிருத்திகா உதயநிதி தற்போதைய நவீனத்துவத்தின் இறுக்கமான தலைமுறையின் குழப்பத்தை பிரதிபலிக்கும் ஒரு காதலை தைரியமாக புதுமையின் கலவையுடன் நவீன பார்வையாளர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக மாற்ற துணிச்சலான படைப்பு சுதந்திரங்களும், ஐவிஎஃப் சிகிச்சைகள் மற்றும் விந்தணு தானத்தின் தேர்வை தொலைநோக்குப் பார்வையுடன் இயல்பாகவும் சாதாரணமாகவும் வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் சொல்லி முற்போக்கான படத்தை படைத்துள்ளார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.

மொத்தத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எம்.செண்பக மூர்த்தி, ஆர்.அர்ஜுன் துரை இணைந்து தயாரித்திருக்கும் காதலிக்க நேரமில்லை வசீகரமான நடிப்புடன் காதல் நகைச்சுவை கலந்த நவீன கிளாசிக்.