காஃபி வித் காதல் விமர்சனம் : காஃபி வித் காதல் இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டு தப்பிக்க நினைக்கும் தவிர்க்க நினைக்கும் காதல் | ரேட்டிங்: 3/5

0
219

காஃபி வித் காதல் விமர்சனம் : காஃபி வித் காதல் இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டு தப்பிக்க நினைக்கும் தவிர்க்க நினைக்கும் காதல் | ரேட்டிங்: 3/5

அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்  சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் அருண் குமார் தயாரித்திருக்கும் காஃபி வித் காதல் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகிபாபு, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, திவ்யதர்ஷினி (டிடி), சம்யுக்தா ஷண்முகம், ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். சுpறப்பு தோற்றத்தில் ஆர்யா நடித்துள்ளார்.

படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுந்தர்.சி. இசை – யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு- கிருஷ்ணசாமி, வரிகள் செல்வபாரதி குமாரசாமி, படத்தொகுப்பு -ஃபென்னி ஆலிவர், சண்டை பயிற்சி -தளபதி தினேஷ், கலை -குருராஜ், நடனம் -ராஜு சுந்தரம், ராபர்ட், சாண்டி, தீனாஇ நிர்வாக தயாரிப்பு- பால கோபி, மக்கள் தொடர்பு – ரியாஸ் கே. அஹ்மத்.

ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் மற்றும் நிறைமாத கர்ப்பிணி டிடி சகோதர சகோதரிகள். ஸ்ரீகாந்திற்கு தன் மனைவி மகளிடம் அன்பு இருந்தாலும் ரைசா வில்சனிடம் நெருக்கம் ஏற்படுகிறது. ஜீவா மூன்று வருட காதலியான ஐஸ்வர்யா தத்தா ஏமாற்றிவிட்டு சென்றவுடன், விரக்தியில் வீட்டிற்கு வருகிறார். ஜெய் ஆர்கனிக் ஹோட்டல் ஆரம்பிக்க நினைக்கும் இடத்தின் சொந்தக்காரரின் மகள் மாளவிகா சர்மாவை இடத்திற்காக திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். அதனால் ஜீவாவிற்கும் பெண் தேடி ரைசா வில்சனை நிச்சயம் செய்கிறார்கள். ஸ்ரீகாந்த் ஜீவாவிற்கு ரைசாவை திருமணம் செய்யாமல் இருப்பதற்கு பல தடங்கல்களை செய்கிறார். இதனிடையே ஜெய் தன் நீண்ட கால தோழி அம்ரிதாவை காதலிக்க தொடங்குகிறார். அம்ரிதாவிற்கு வேறு இடத்தில் நிச்சயம் செய்து திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. மாளவிகா சர்மாவிற்கு உதவி செய்யப் போகும் ஜீவாவிற்கு மாளவிகா மேல் காதல் வருகிறது. இப்படி திருமணம் செய்து கொள்ள நினைத்தவர்கள் வேறொருவரை காதலிக்க தொடங்கி திருமணம் செய்ய ஆசைப்பட இறுதியில் இவர்களின் எதிர்பார்த்த திருமணம் நடந்ததா? தடைபட்டதா? என்பதே க்ளைமேக்ஸ்.

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, திவ்யதர்ஷினி (டிடி), சம்யுக்தா ஷண்முகம், பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி என்று ஏகப்பட்ட நட்சத்திர குவியல்கள் படத்தின் காட்சிகளுக்கேற்ப சிறப்பு செய்திருக்கின்றனர். யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி நகைச்சுவையை வரவழைக்க முயற்சி செய்கின்றனர்.

இசை – யுவன் ஷங்கர் ராஜாஇ ஒளிப்பதிவு- கிருஷ்ணசாமி படத்தின் முக்கிய காட்சிகளுக்கு தூணாக இருந்து மெருகேற்றியிருக்கிறார்கள்.

படத்தொகுப்பு -ஃபென்னி ஆலிவர், சண்டை பயிற்சி -தளபதி தினேஷ், கலை -குருராஜ் ஆகியோர் படத்திற்கு கூடுதல் பலம்.

ஹாரர் படங்களை விட்டு தன்னுடைய டிரெட் மார்க் காமெடி களத்தை கையிலெடுத்து குடும்ப பின்னணியில் திருமணத்தை மையமாக வைத்து அதனுடன் காதலை கலந்து நட்பு, பிரிவு, பாசம் என்று அனைத்தையும் ஒரு கோப்பையில் வைத்து சுவையாக திரைக்கதையில் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. அதில் சில சுவையாகவும், சுவை குறைவாக இருந்தாலும் தோய்வில்லாமல்  படத்தை கொடுத்து இயன்றவரை முயற்சி செய்து சிறப்பாக செய்துள்ளார் சுந்தர்.சி.

மொத்தத்தில் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்  சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் அருண் குமார் தயாரித்திருக்கும் காஃபி வித் காதல் இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டு தப்பிக்க நினைக்கும் தவிர்க்க நினைக்கும் காதல்.