கல்லறை திரைப்பட விமர்சனம்: கல்லறை ஒருமுறை பார்க்கலாம் | ரேட்டிங்: 2/5

0
206

கல்லறை திரைப்பட விமர்சனம்: கல்லறை ஒருமுறை பார்க்கலாம் | ரேட்டிங்: 2/5

நடிகர்கள் : சகோ. ரமேஷ், தீப்தி திவான், ரதி ஜவகர், டி.ஜவஹர் ஞானராஜ், வி.யசோதா, பிரேம பிரியா, ரோஷிலா பாரதிமோகன், சுரேந்தர் ஹரிஹரன், புதுப்பேட்டை சுரேஷ் , ராம் ரஞ்சித், நந்தகுமார், அஜய் சுரேஷ் ஆகியோர்  நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பிரித்வி ராஜேந்திரன்
இசை – ஏ.கே ராம்ஜி
பாடல்கள் – ஆடூர் பாலா
நடனம் – சரண் பாஸ்கர்
எடிட்டிங் – கௌதம் மூர்த்தி
தயாரிப்பு – பொன்னேரி ரதி ஜவகர்
கதை, திரைக்கதை, வசனம், கலை, இயக்கம் – ஏ.பி.ஆர்
பாடல்கள்ஃ பாடியவர்கள்
1.ஒன்னோட வாழனும் ஆசை தான்….   வேலு
2. அடி எனக்கொரு ஆசை… ஏ.கே.ராம்ஜி, ஷைனி
3- புள்ளிமானே…ரவீந்திரதாஸ்
மக்கள் தொடர்பு : வெங்கட்

போதை பழக்கத்திற்கு அடிமையாகிய தன் இளைய மகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக தன் மூத்த மகள்களோடு மூவரும்  கொடைக்கானலில் உள்ள சொந்த சொகுசு பங்களாவில் வந்து தங்குகிறார்கள். அங்கிருக்கும் மருத்துவர் சொல்லும் ஒரு யோசனை என்னவென்றால் ‘உடனடியாக குணப்படுத்த முடியாது’ ஆனால் “கொஞ்சம் கொஞ்சமாக போதை காளான் மருந்துதாக கொடுத்து அதன் அளவை குறைத்து தான் நிறுத்த வேண்டும்’’ என்கிறார்அதனால் சட்டவிரோத செயலில் ஈடுபடும் தனது நண்பன் ஒருவன் மூலமாக போதை காளான்களை பெறுகிறார்;. அதை சப்ளை செய்யும் மூன்று ரவுடிகள் ஏற்கனவே போலீஸ் குற்றவாளி பட்டியலில் உள்ளவர்கள். இவர்கள் அந்த வீட்டுப் பெண்கள் மீதும் ஒரு கண் வைக்கிறார்கள். அத்துடன் அங்கு தங்கி அவர்கள் தான் அந்த சிகிச்சைக்கு உதவுகிறார்கள். இச்சூழலில் அந்த பங்களாவுக்குள் ஆவி இருப்பதும் தெரிய வருகிறது. அதன் பின் தொடர் கொலைகளை அந்த ஆவி நிகழ்த்துகிறது. ஏன் அந்த ஆவி கொலைகளை செய்கிறது? ரவுடிகளின் எண்ணம் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை. 
நாயகனாக வரும் ரமேஷ் ஜி  இன்ஸ்பெக்டர் பாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார். தீப்தி திவான் கதாநாயகியாக கொழுகொழு பொம்மையாக வலம் வருகிறார்.தயாரிப்பாளரான ரதி ஜவஹர் ஒரு பெண் மருத்துவர் வேடத்தில் திரைபிரவேசம் செய்கிறார். 
ரதி ஜவகர், டி.ஜவஹர் ஞானராஜ், வி.யசோதா, பிரேம பிரியா, ரோஷிலா பாரதிமோகன், சுரேந்தர் ஹரிஹரன், புதுப்பேட்டை சுரேஷ் , ராம் ரஞ்சித், நந்தகுமார், அஜய் சுரேஷ் ஆகியோரில் பெரும்பாலானோர் புது முகங்களாக இருப்பதால் தேர்ச்சியான நடிப்பு எதிர்பார்க்க முடியாது, இருந்தாலும்  தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். இரண்டு கான்ஸ்டபிள் கதாபாத்திரங்க்ள ஒன்று சேர்ந்து கொஞ்சம் கலகலப்பாக்கி இயிருக்கிறார்கள். 
ஆடூர் பாலாவின் பாடல் வரிகளுக்கு ஏ கே ராம்ஜியின் இசை கேட்கும் ரகம். இது ஒரு பட்ஜெட் படம் என்பதை பிரித்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவு தரம் உறுதி செய்கிறது.
ஹாரர், த்ரில்லர் பின்னணியில் உருவாகும் கதைப் படங்களுக்கு மினிமம் கியாரண்டி உண்டு. சினிமா ரசிகர்கள் எப்போதும் ஹாரர் த்ரில்லர் படங்களை விரும்புவார்கள் என்பதை மட்டும் மனதில் வைத்து வழக்கம் போல் பழிவாங்கும் கதையை மையமாக வைத்து திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குன் ஏ.பி.ஆர்.  திரைக்கதையில் சுவாரசியமான அம்சங்கள் கூட்டி, படப்பிடிப்பு லொக்கேஷன் மற்றும் தயாரிப்பு செலவில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் பேசப்பட்டிருக்கும்.

மொத்தத்தில் குட்நியூஸ் பிலிம்ஸ் பேனரில் பொன்னேரி ரதி ஜவகர் தயாரித்துள்ள கல்லறை ஒருமுறை பார்க்கலாம்.