கல்கி 2898 ஏடி சினிமா விமர்சனம் : கல்கி 2898 ஏடி தொழில்நுட்ப பிரமிப்புகளின்  விஷுவல் ட்ரீட் | ரேட்டிங்: 3.5/5

0
1028

கல்கி 2898 ஏடி சினிமா விமர்சனம் : கல்கி 2898 ஏடி தொழில்நுட்ப பிரமிப்புகளின்  விஷுவல் ட்ரீட் | ரேட்டிங்: 3.5/5

நடிகர்கள் :
பிரபாஸ் – பைரவா
அமிதாப் பச்சன் – அஸ்வத்தாமா
கமல்ஹாசன் – சுப்ரீம் யாஸ்கின்
தீபிகா படுகோன் – சுமதி
திஷா பதானி – ரக்சி
ஷோபனா – மரியம்
பசுபதி-வீரன்
பிரம்மானந்தம் – ராஜன்
படக்குழு :
இயக்குனர் – நாக் அஸ்வின்
ஒளிப்பதிவு – ஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச்
இசை – சந்தோஷ் நாராயணன்
படத்தொகுப்பு – கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ்
தயாரிப்பு – வைஜெயந்தி பிலிம்ஸ்
தயாரிப்பாளர் – சி அஸ்வினி தத்
வெளியீடு – என்.வி. பிரசாத் – ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

மகாபாரத காலத்தில் நடந்த குருக்ஷேத்திரப் போரில் கதை தொடங்குகிறது. அஸ்வத்தாமா (அமிதாப் பச்சன்) பகவான் கிருஷ்ணரால் அழியா சாபம் பெற்றார். எனவே, எதிர்காலத்தில் 6000 ஆண்டுகளில் நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது கல்கியாக கடவுள் மறுபிறவி எடுக்கும் போது, குழந்தையைப் பாதுகாப்பதன் மூலம் அவர் தனது தவத்தை நிறைவேற்றுகிறார். 6000 ஆண்டுகளுக்கு முன்னோக்கி, கி.பி 2898 இல் உலகின் கடைசி நகரமான காசியின் டிஸ்டோபியன் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு, வளாகத்தின் ஆட்சியாளரான சுப்ரீம் யாஸ்கின் (கமல்ஹாசன்), ஒரு புதிய உலகத்தை கற்பனை செய்து, அதை உயிர்ப்பிக்க ஒரு கருவுறுதல் ஆய்வகத்தை நிறுவுகிறார். மக்கள்  தீய தளபதி மனாஸாசின் (சாஸ்வத சாட்டர்ஜி) துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, சுப்ரீம் யாஸ்கின் (கமல்ஹாசன்) உச்ச அதிகாரத்தால் ஆளப்படும் சொர்க்கத்தைப் போன்ற ஒரு இடமான காம்பளக்ஸ்  உருவாக்குகிறார்கள். 150 நாட்கள் கர்ப்பமாக இருக்கும் கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து சீரம் பிரித்தெடுப்பதில் கவனம் செலுத்தும் திட்டம், இப்போது யாஸ்கின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. திட்டத்தில் ஈடுபட்டுள்ள கர்ப்பிணிப் பெண்களில் ஒருவரான சுமதி (தீபிகா படுகோன்) அங்கிருந்து தப்பித்து ஷம்பாலா வந்தடைகிறார். இதற்கிடையில், பைரவா (பிரபாஸ்), ஒரு இரக்கமற்ற (பவுண்டி) பணத்தாசைக்காரர், ஒரு சிறந்த வாழ்க்கைக்காக காம்பளக்ஸ்ஸிற்குள் நுழைய வேண்டும் என்று கனவு காண்கிறார். அதே நேரத்தில், தான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கடவுளையே சுமதி கருவுற்றிருப்பதை அஸ்வத்தாமா (அமிதாப் பச்சன்) நம்புகிறார். புதிரான அஸ்வத்தாமா சுப்ரீம் யாஸ்கின் பிடியில் இருந்து சுமதியைக் காப்பாற்றும் நோக்கத்துடன் வெளிப்படுகிறார். 5 மில்லியன் யூனிட்களை வெகுமதியாக பெறுவதற்காக, வேட்டையாடும் பைரவா (பிரபாஸ்) சுமதியை மீட்டு காம்பளக்ஸிற்குத் திரும்பச் செய்வதாக உறுதியளிக்கிறார். பைரவா அஸ்வத்தாமாவை எதிர்கொள்வதால் கடுமையான மோதல் ஏற்படுகிறது. சுமதியை காம்ப்ளக்ஸில் ஒப்படைப்பதில் பைரவா வெற்றி பெற்றாரா? என்பதை மீதமுள்ள கதை இந்த கதாபாத்திரங்கள உள்ளடக்கிய கதைக்களத்தை சுற்றி சுழன்று 2-ம் பாகத்திற்கான லீட்டில் சுப்ரீம் யாஸ்கின் (கமல்ஹாசன்) அறிமுகத்துடன் திரைக்கதை முடிகிறது.

பிரபாஸ் பைரவா கதாபாத்திரத்திற்கு முதல் பாதி முழுவதும் மனதில் நிற்கும் படி அவரது கதாபாத்திரம் ஒட்டவில்லை. என்றாலும் இரண்டாம் பாதியில் அமிதாப் பச்சனின் ரீ-என்ட்ரி மூலம் படம் மீண்டும் வேகமெடுக்கிறது. அதன் பிறுகு தான் பைரவா கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் பிரபாஸ் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். கடைசி 20 நிமிடங்களில் பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் இடையேயான அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படத்தின் ஹைலைட்.

அஸ்வத்தாமா இளைஞனாகவும், கல்கியின் பிறப்புக்காக காத்திருக்கும் முதியவராகவும் அமிதாப் பச்சன் இடைவேளைக்குப் பிறகு கிளைமாக்ஸ் போதும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அமிதாப் பச்சன் தனது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து அஸ்வத்தாமாவின் கட்டுக்கடங்காத சக்திக்கு ஓரளவு யதார்த்தத்தை கொண்டு வருகிறார். இந்த வயதிலும் சூப்பர் ஸ்டார் நடிப்பில், அவரது பவர்ஃபுல் ஸ்கிரீன் பிரசன்ஸ் மற்றும் அற்புதமான நடிப்பு படத்தின் உயிர்நாடி என்று சொல்லலாம்.

2 காட்சிகளில் தோன்றினாலும் சுப்ரீம் யாஸ்கின் என்ற வித்தியாசமான வேடத்தில் கமல்ஹாசன் மீண்டும் வசீகரிக்கிறார். இரண்டாம் பாகத்தில் சுப்ரீம் யாஸ்கின் ஆட்டத்தை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்ணாக தீபிகா படுகோன் உறுதியான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

விவேகம் மரியமாக ஷோபனா, கமாண்டர் மானஸ் பாத்திரத்தில் சாஸ்வத சாட்டர்ஜி, விஜய் தேவரகொண்டா, மிருணால் தாக்கூர், துல்கர் சல்மான், எஸ்.எஸ். ராஜமௌலி, ராம் கோபால் வர்மா, ராஜேந்திர பிரசாத், பசுபதி, மாளவிகா நாயர், அன்னா பென், பிரம்மானந்தம் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தங்கள் பாத்திரங்களுக்கு மெருகேற்றி உள்ளனர்.

புஜ்ஜி கதாபாத்திரத்திற்கு கீர்த்தி சுரேஷின் குரல் அற்புதம்

சந்தோஷ் நாராயணன் இசையும் பின்னணி இசையும் படத்துக்கு பெரிய பலம்.

பிரமிக்க வைக்கும் படி ஒளிப்பதிவாளர் ஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது.

எடிட்டர் கோட்டா வெங்கடேஸ்வர ராவ் முதல் ஒரு மணி நேரத்திலேயே தேவையற்ற காட்சிகள் குறைத்து படத்தின் வேகத்தை இன்னும் கூர்மையாக மேம்படுத்தி இருக்கலாம்.

அனில் ஜாதவ், சந்தோஷ் ஷெட்டி, வேலு, ரெம்பன் ஆகியோரின் கலை இயக்கத்தின் உழைப்பும், பிரவீன் கிலாறுவின் வி.எஃப்.எக்ஸ் படத்திற்கு வலு சேர்க்கிறது.

மகாபாரதத்தில், கிருஷ்ணர் அஸ்வத்தாமாவை அழியாமையுடன் சபிக்கிறார், மேலும் கல்கியின் பிறப்புடன் மட்டுமே சாபம் நீங்குகிறது. இந்த கதையைப் பயன்படுத்தி, ரோபோக்கள், ஏ.ஐ போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் இணைத்து எதிர்காலத்தில் நடக்கும் ஒரு கற்பனைக் கதையில் ஹாலிவுட் பிளாக்பஸ்டர் களில் நாம் பார்த்த சூப்பர் ஹீரோ படங்கள் கூறுகளை திரைக்கதையில் இணைத்து தொழில்நுட்ப பிரமிப்புகள் உதவியால் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக திறம்பட இயக்கி உள்ளார் இயக்குநர் நாக் அஷ்வின்.

மொத்தத்தில் வைஜெயந்தி பிலிம்ஸ் சி அஸ்வினி தத் தயாரித்துள்ள கல்கி 2898 ஏடி தொழில்நுட்ப பிரமிப்புகளின்  விஷுவல் ட்ரீட்.