கலன் சினிமா விமர்சனம்: கலன் அதர்மத்துக்கும்-தர்மத்துக்கும் நடக்கும் காளியாட்டம் | ரேட்டிங்: 2.5/5

0
353

கலன் சினிமா விமர்சனம்: கலன் அதர்மத்துக்கும்-தர்மத்துக்கும் நடக்கும் காளியாட்டம் | ரேட்டிங்: 2.5/5

ராமலெட்சுமி புரொடக்ஷன்ஸ் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் கலன் திரைப்படத்தை, ‘கிடுகு’ படத்தை இயக்கிய வீரமுருகன் எழுதி இயக்கியிருக்கிறார்.

அப்புகுட்டி, தீபா சங்கர், யாசர், சம்பத் ராம், காயத்ரி, சேரன் ராஜ், மணிமாறன், ராஜேஷ், பீட்டர் சரவணன், வேலு, முகேஷ், மோகன், பாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.​

தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை-ஜெர்சன், படத்தொகுப்பு-விக்னேஷ் வர்ணம்.விநாயகம், ஒளிப்பதிவு-ஜெயக்குமார், ஜேகே, பாடலாசிரியர்-குருமூர்த்தி மற்றும் குமரி விஜயன், கலை- திலகராஜன், அம்பேத், நடனம்- வெரைட்டி பாலா, சவுண்ட் எஞ்சினியர் – சந்தோஷ், துணை இணை இயக்குனர் – ஜெகன் ஆல்பர்ட், துணை இயக்குனர்- பாலாஜி சாமிநாதன், மகேஷ், பத்திரிக்கை தொடர்பு – கார்த்திக்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கணவரை இழந்த வெட்டுடையார் காளி (தீபா சங்கர்) தன் தம்பி அப்புகுட்டி மற்றும் ஒரே மகன் வேங்கையனுடன் (யாசர்) கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார். வேங்கையன் அராஜகம் செய்பவர்களை தட்டிக் கேட்க்கும் குணம் படைத்தவன். அதே ஊரில் போலீஸ் தயவுடன் காயத்ரி அவரது தம்பி வேலு (சம்பத் ராம்) போதை பொருள் விற்பனை செய்து வருவதுடன் அராஜகம் செய்து வருகிறார்கள். தங்களது தொழிலில் குறிக்கிடுவர்களை ஒழித்து கட்டிவிடுகிறார்கள். இந்நிலையில் வேலுவிடம் வேலை பார்க்கும் வேங்கையின் நண்பன் ஒருவன் தன் தங்கையின் படிப்புக்காக போதை பொருள் விற்பனை செய்யும் வேலுவிடம் படிப்பு செலவுக்கு பணம் கேட்க, அதற்கு அவன் பணம் வேண்டும் என்றால் என் தங்கையை என்னிடம் அனுப்பி வை என்று கூறுகிறான். விஷயம் அறிந்த வேங்கையன் கோபம் அடைந்து கஞ்சா கும்பல் தலைவி காயத்ரி கழுத்தில் கத்தியை வைத்து எச்சரித்து விட்டு செல்கிறான். இந்த சம்பவத்தால் வேங்கையன் மற்றும் அவனது நண்பன் மீது கொலை வெறியில் வேலு இருக்கும் வேளையில், வேங்கையன் நண்பன் அந்த கும்பலுக்கு தெரியாமல் போதை பொருள் திருடி விற்கும் போது இந்த கும்பல் வசம் மாட்டிக் கொள்கிறான். ஆத்திரம் அடையும் அந்த கும்பல் வேங்கையன் நண்பனின் தங்கையை கடத்தி விடுகிறார்கள். தன் தங்கையை காப்பாற்ற அவன் வேலு தீட்டும் சதி திட்டத்திற்கும் சம்மதிக்கிறான். அவரது நண்பன் மூலமாக வேங்கையனை வேலுவின் கூட்டாளிகள் கொலை செய்துவிடுகிறார்கள். அநியாயத்தை எதிர்த்து நின்றதால் கொலை செய்யப்பட்ட தனது மகன் வேங்கையின் மரணத்திற்கும், கஞ்சா போதைப் பொருளால் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சீரழிவது, மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் வெறிபிடித்த கூட்டத்தை வேருடன் அழிக்க ஆக்ரோஷமாக வெட்டுடையார் காளியும், அவரது தம்பி அப்புக்குட்டியும் வெகுண்டெழுந்து வேட்டையாட என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

தீபா ஷங்கர் அம்மா காளியம்மாள் பாத்திரத்தில் கிட்டத்தட்ட முழு கதையையும் சுமந்துள்ளார். அமைதியின் சொரூபமாக பாசமிகு அம்மாவாக, அக்காவாக, வேட்டையாடும் காளியாகவும் ஒரு சில இடங்களில் மட்டும் ஓவர் ஆக்டிங் செய்தாலும் யதார்த்தமான அவரது நடிப்பு பாராட்டுக்குறியது.

தாய் மாமனாக அப்புக்குட்டிக்கு காட்சிகள் குறைவு என்றாலும் வழக்கம் போல் தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளார்.

வழக்கமான போலீஸ்காரராகவும், சிவ பக்தராகவும் நடித்திருக்கும் சேரன்ராஜ் நல்லவரா கெட்டவரா என்று யூகிக்க முடியாத கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சம்பத் ராம் மற்றும் காயத்ரி இருவரும் அசல் கஞ்சா கும்பல் குணாதிசயங்களைக் கொண்ட கதாபாத்திரங்களாக மாறி பார்வையாளர்களை பயமுறுத்தும் நடிப்பைக் கொடுத்துள்ளனர்.

யாசர், மணிமாறன், ராஜேஷ், பீட்டர் சரவணன், வேலு, முகேஷ், மோகன், பாலா உள்ளிட்ட அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு நேர்த்தியான நடிப்பு வழங்கி திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

இசை-ஜெர்சன், படத்தொகுப்பு-விக்னேஷ் வர்ணம்.விநாயகம், ஒளிப்பதிவு-ஜெயக்குமார், ஜேகே, பாடலாசிரியர்-குருமூர்த்தி மற்றும் குமரி விஜயன், கலை- திலகராஜன், அம்பேத், நடனம்- வெரைட்டி பாலா, சவுண்ட் எஞ்சினியர் – சந்தோஷ், உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தை கூறும் கதையை உணர்வு பூர்வமாகவும், தொய்வில்லாமல் நகர பெரும் பங்கு வகித்துள்ளனர்.

இன்றைக்கு தமிழகத்தில் சீர்கேட்டுக்கு காரணமாக இருப்பது போதை, அந்த போதையினால் தான் குற்றவாளிகள் உருவாகிறார்கள், அதனால் தான் சமூக பாதிப்பு ஏற்படுகிறது என்கிற முக்கிய பிரச்சனையை கையாண்டு, வருங்கால தலைமுறையை போதைப் பொருளில் இருந்து காப்பாற்றுவதற்கு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் இருந்து பெண் சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும் என்று பெண்களை மையப்படுத்திய கதைகளம். அதிகார வர்க்கம் பெண்கள் மீது அத்துமீறும் போது, அப்போது அந்த பெண் விஸ்வரூபம் எடுக்கும் போது அதிகாரவர்கத்துக்கு என்ன அழிவு ஏற்படுத்தும் என்பதை  திரைக்கதை அமைத்து தத்ரூபமாக கலன் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வீரமுருகன்.

மொத்தத்தில் ராமலெட்சுமி புரொடக்ஷன்ஸ் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்ஷன் இணைந்து தயாரித்திருக்கும் கலன் அதர்மத்துக்கும்-தர்மத்துக்கும் நடக்கும் காளியாட்டம்.