கலகத்தலைவன் விமர்சனம்: கலகத்தலைவன் மக்களின் மனதை கொள்ளையடித்து தெறிக்க விடும் சஸ்பென்ஸ், க்ரைம் நிறைந்த தனி ராஜ்ஜியத்தின் தலைவன் | ரேட்டிங்: 3.5/5

0
314

கலகத்தலைவன் விமர்சனம்: கலகத்தலைவன் மக்களின் மனதை கொள்ளையடித்து தெறிக்க விடும் சஸ்பென்ஸ், க்ரைம் நிறைந்த தனி ராஜ்ஜியத்தின் தலைவன் | ரேட்டிங்: 3.5/5

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், கலையரசன், ஆரவ், அங்கனாராய், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், அனுபமாகுமார், ஜீவா ரவி ஆகியோர் நடித்துள்ள படத்தை இயக்கியுள்ளார் மகிழ் திருமேனி. இணை தயாரிப்பு: எம்.செண்பக மூர்த்தி, ஆர்.அர்ஜூன் துரை, இசை:-ஸ்ரீகாந்த் தேவா, அரோல் கரோலி, ஒளிப்பதிவு: கே. தில்ராஜ், பி.ஆர்.ஒ: ஏய்ம் சதீஷ்.

பெரிய கார்ப்பரேட் கம்பெனியான வஜ்ராவிற்கு சிலரால் முக்கிய ரகசியங்கள் கசித்து நஷ்டத்தை ஏற்படுத்துவதை தடுத்து அவர்களை கண்டறிய அண்டர்கிரவுண்ட் வேலை பார்த்து அழிக்கும் வலுவான ஆரவ்வை நியமிக்கின்றனர். ஆரவ் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக முடிக்க தன் ஆட்களுடன் களமிறங்குகிறார். அதன் பின் நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் என்ன? உளவு பார்க்கும் நபரை கண்டுபிடித்தாரா? இதற்கு காரணம் என்ன? இறுதியில் யார் வெற்றி பெற்றார்கள்? என்பதே படத்தின் அதிரடியான மீதிக்கதை.

திருவாக ரகசியங்களை திருடும் நபராக, அச்சு அசலான யதார்த்தமான நடிப்பில் உதயநிதி ஸ்டாலின், காதலியாக, மனித நேயமிக்க டாக்டராக நிதி அகர்வால், செய்யும் வேலைக்காக குடும்பத்தை தியாகம் செய்து உயிரை விடும் நண்பராக கலையரசன், எந்த காரியத்தை எடுத்தாலும் வன்முறை கலந்து சாதிக்கும் அசத்தல் அழகான வில்லன் ஆரவ், அங்கனாராய், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், அனுபமாகுமார், ஜீவா ரவி ஆகியோர் படத்திற்கு உயிர்நாடிகள்.

படம் முழுக்க ஆச்சர்ய உணர்வைத் தருகிறது ஒளிப்பதிவாளர் தில்ராஜின் கேமரா. ஆக்ஷன் காட்சிகளுக்குத் தேவையான எடிட்டிங்கில் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார் எடிட்டர் என்.பி.ஸ்ரீPகாந்த். ஒரு த்ரில்லருக்குத் தேவையான பின்னணி இசையை ஸ்ரீகாந்த் தேவா வழங்க, இரண்டு பாடல்களில் ஆரோல் கரோலி மனதை கொள்ளை கொள்கிறார்.

கார்ப்பரேட் ரகசியங்களை உளவு பார்த்து திட்டம் போட்டு சாமர்த்தியமாக ரகசியங்களை கச்சிதமாக வெளிப்படுத்தும் இளைஞருக்கு எதிராக கார்ப்பரேட் கம்பெனி எடுக்கும் நடவடிக்கை, அமர்த்தும் பவர்புல் நபர், எடுக்கும் முயற்சிகள், அதன் பின் நடக்கும் சம்பவங்கள் படத்திற்கு மேலும் மெருகேற்றி வித்தியாசமான கோணத்தில் திருப்பங்களுடன் கொடுத்து வசூலில் அபார வெற்றியுடன் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. சில குறைகளும் இருந்தாலும் வழக்கமான கதையை சுவாரஸ்யமான திரைக்கதையாக்கிய விதத்தில் கலகத்தலைவனை திரையரங்குகளில் பார்த்து ரசிக்கலாம்.வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கலகத்தலைவன் மக்களின் மனதை கொள்ளையடித்து தெறிக்க விடும் சஸ்பென்ஸ், க்ரைம் நிறைந்த தனி ராஜ்ஜியத்தின் தலைவன்.