கடமை விமர்சனம் : கடமை தவறாத காவல் அதிகாரி | ரேட்டிங்: 2/5
கேஎஸ்என்எஸ் பலிம் இன்டர்நேஷனல் சார்பில் கே. சீராளன் தயாரித்திருக்கும் கடமை படத்தில் கே.சீராளன், சந்தியா, பீமாராவ், சுக்ரன் சங்கர், தேவராஜ் சுப்ரமணியம், பான் சி கோபி, டெலிபோன் தேவா, கோடம்பாக்கம் நாகராஜ், பிரபாகரன், சரோஜாதேவி, நிம்மி, சி.பி.அசோக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுக்ரன் சங்கர்.
தொழில்நுட்ப கலைஞர்;கள்:- ஒளிப்பதிவு பாபு, இசை-பிரசாத் கணேஷ், படத்தொகுப்பு-பன்னீர் செல்வம், சுக்ரன் சங்கர், பாடல்கள்-பாட்டரசன், சமரன், பாடியவர்கள்-பாலக்காடு ஸ்ரீராம், செந்தில் தாஸ், சுதா வள்ளி, பிஆர்ஒ- விஜயமுரளி, கிளாமர் சத்யா.
நேர்மையான ஆசிஸ்டென்ட் கமிஷனரான சீராளன் சமூக விரோதமான செயல்களை செய்யும் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார். ஆனால் தகுந்த சாட்சியங்கள் இருந்தும் போலீஸ் உயர் அதிகாரிகளின் சிபாரிசு மற்றும் நீதிபதியின் ஆதரவோடு பல குற்றங்கள் சாட்சிகளை மாற்றியமைத்து நிரூபிக்கப்படாமல் போகிறது. இதனால் மனவருத்தத்தில் இருக்கும் சீராளனால் தன் பதவியில் இருக்கும் போது சாதிக்க முடியாததை பதவி காலம் முடிந்தவுடன் சாதித்தாரா? குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுத்தாரா? என்பதே படத்தின் கதைக்களம்.
நாயகனாக கே.சீராளன், நாயகியாக சந்தியா, துணை கண்காணிப்பாளராக பீமாராவ், எக்ஸ் எம்எல்ஏ மகன் சரத்தாக சுக்ரன் சங்கர், குற்றவாளிகள் மகாதேவனாக தேவராஜ் சுப்ரமணியம், கோல்டு கோபியாக பான் சி கோபி, கோவிந்த மூர்த்தியாக டெலிபோன் தேவா மற்றும் தீனாவாக சி.பி.அசோக்குமார், சப் இன்ஸ்பெக்டராக கோடம்பாக்கம் நாகராஜ், சிபிஐடி ஆபிசராக பிரபாகரன், நீதிபதிகளாக சரோஜாதேவி மற்றும் நிம்மி ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து செய்துள்ளனர்.
ஒளிப்பதிவு பாபு, இசை-பிரசாத் கணேஷ், படத்தொகுப்பு-பன்னீர் செல்வம், சுக்ரன் சங்கர், பாடல்கள்-பாட்டரசன், சமரன், பாடியவர்கள்-பாலக்காடு ஸ்ரீராம், செந்தில் தாஸ், சுதா வள்ளி ஆகிய தொழில்நுட்ப கலைஞர்;கள் சிறிய படத்திற்கேற்றவாறு சிறப்பாக கொடுக்க முயற்சித்துள்ளனர்.
போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள், இடர்பாடுகள், காதல் மற்றும் சக அதிகாரிகளால் பழி வாங்கப்படுவதை ரிடையராவதற்கு முன்பு அதன் பின்பு என்ன நடந்தது என்பதை விவரிக்கும் கதைக்களமாக கொடுத்துள்ளார் சுக்ரன் சங்கர்.
மொத்தத்தில் கேஎஸ்என்எஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கே. சீராளன் தயாரித்திருக்கும் கடமை தவறாத காவல் அதிகாரி.