ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது சினிமா விமர்சனம் : ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது நகைச்சுவை கலந்த ஹாரர் த்ரில்லர் | ரேட்டிங்: 3/5

0
215

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது சினிமா விமர்சனம் : ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது நகைச்சுவை கலந்த ஹாரர் த்ரில்லர் | ரேட்டிங்: 3/5

நடிகர்கள்
சத்யாவாக சத்தியமூர்த்தி
விஜய்யாக விஜயகுமார் ராஜேந்திரன்
கோபியாக கோபி அரவிந்த்
சுதாகராக சுதாகர் ஜெயராமன்
எம்.தர்மராஜாக முனிஷ்காந்த்
கிறிஸ்டோபர் கண்ணையனாக ஜார்ஜ் மரியன்
கீதாவாக ரித்விகா
ஹரிஜாவாக ஹரிஜா
இஷாவாக யாஷிகா ஆனந்த்
மைக்கேலாக ஆர்.எஸ்.கார்த்திக்
கோபியாக ஷா ரா
அப்துலாக அப்துல்
உத்தமராஜாவாக கிரேன் மனோகர்
பிரகாஷாக அகஸ்டின்
சின்ராசுவாக சந்தோஷ்
எஸ்.கேவாக ஜெய்சீலன்
நந்தாவாக நந்தா
டிரம்ப்பாக அஜித்
அரவிந்தனாக சாருகேஷ்தொழில் நுட்ப கலைஞர்கள் :
இயக்கம் – ரமேஷ் வெங்கட்
இசை – கௌசிக் கிரிஷ்
ஓளிப்பதிவு- ஜோஷ்வா ஜே பெரெஸ்
எடிட்டர் – கணேஷ் சிவா
ஒலி கலவை – ஹரிஷ் குமார்
கலரிஸ்ட் – நந்த குமார்
ஸ்டண்ட் – சுரேஷ் ஹர்ஸ் பாபு
கலை இயக்குனர்- வி.சசி குமார்
உதவி இயக்குனர்- ராஜா, ஞானவேல்
காஸ்ட்யூம்ஸ் – ரவீந்திரன்
ஒப்பனை – சண்முகம்
டப்பிங் இன்ஜினியர் – ராஜேஷ்
ஏகுஓ – அக்ஷா அனிமேஷன் (அசோக் குமார்)
ளுகுஓ – பிரேம் குமார்
தயாரிப்பு மேலாளர் – சிவகுமார்
பிஆர்ஓ – சதீஷ்குமார்
தயாரிப்பு : அக்ஷயா பிக்சர்ஸ் ராஜன்

ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் யாஷிகா ஆனந்த் மற்றும் ஹரிஜா தோழிகள். சினிமாவில் சாதிக்க விரும்பும் இளைஞர்கள் கோபி மற்றும் சுதாகர். மது பிரியர் கிரேன் மனோகர் என வெவ்வேறு இடத்தில் இருக்கும் இவர்கள் ஒரு திரையரங்கிற்கு படம் பார்க்க வருகின்றனர். ஆனால் திரைப்படம் தொடங்கியதும் அந்த திரையரங்கில் அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கிறது. அந்த அமானுஷ்யத்திடம் இருந்து தப்பித்து ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் திரையரங்கில் திகிலுடன் சுற்றி வந்த நிலையில் அவர்கள் ஒரு கட்டத்தில் வெளியேற முயற்சித்து, வெளியேறினாலும் மீண்டும் அவர்கள் திரையரங்கு குள்ளேயே வந்து சேர்கிறார்கள். தியேட்டரில் சிக்கிய அவர்களை அங்கிருக்கும் நான்கு பேய்கள் அச்சுறுத்தும் தவிர அவர்களை துன்புறுத்தாது. நான்கு பேயிடம் மாட்டிக்கொண்டவர்களிடம் பேய் தங்கள் கதையை கூறுகின்றன. அத்துடன் அந்த பேய்கள் சொல்படி செயல் பட்டால் தான் அவர்கள் மீண்டும் திரையரங்கை விட்டு வெளியேற முடியும் என்று எச்சரிக்கை விடுகிறது அந்த திரையரங்கில் உள்ள  4  பேய்கள்,  பேய் ஆன கதை என்ன? அந்த பேய்களுக்கு அவர்கள் எப்படி உதவினார்கள்? இறுதியில் திரையரங்கில் இருந்து எப்படி வெளியே வருகின்றனர் என்பதே படத்தின் மீதிக்கதை.
சத்யாவாக சத்தியமூர்த்தி, விஜய்யாக விஜயகுமார் ராஜேந்திரன், கோபியாக கோபி அரவிந்த், சுதாகராக சுதாகர் ஜெயராமன், வில்லன் எம்.தர்மராஜாக முனிஷ்காந்த், கிறிஸ்டோபர் கண்ணையனாக ஜார்ஜ் மரியன், கீதாவாக ரித்விகா, ஹரிஜாவாக ஹரிஜா, இஷாவாக யாஷிகா ஆனந்த், மைக்கேலாக ஆர்.எஸ்.கார்த்திக், கோபியாக ஷா ரா, அப்துலாக அப்துல், குடிகாரன் உத்தமராஜாவாக கிரேன் மனோகர், பிரகாஷாக அகஸ்டின், சின்ராசுவாக சந்தோஷ், எஸ்.கேவாக ஜெய்சீலன், நந்தாவாக நந்தா, டிரம்ப்பாக அஜித், அரவிந்தனாக சாருகேஷ் உள்ளிட்ட அனைவரும் கதாபாத்திரங்களுக்கு  இடையேயான சித்தரிப்பில் சிறந்து விளங்கி ஒவ்வொருவரும் உணர்ச்சி, காமெடி, வில்லத்தனம் என தனித்துவமான பங்களிப்பு தந்து கதைக்களத்திற்கு கூட்டாக தேர்ந்த நடிப்பால் ஆழம் சேர்க்கின்றனர்.
கௌசிக் கிரிஷ் இசை மற்றும் பின்னணி இசை காமெடி கலந்த திகில் அனுபவத்தை உணர்த்துகிறது.
ஜோஷ்வா ஜே பெரெஸ் ஒளிப்பதிவு அற்புதம்.
எடிட்டர் கணேஷ் சிவா பேயின் மர்ம பின்னணி சிறப்பாக வழங்குகிறது.
ஒரே இரவில் திரையரங்கில் நடக்கும் ஹாரர், காமெடி கதையை நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்து, பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் வைத்து கலகலப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரமேஷ் வெங்கட்.
மொத்தத்தில் அக்ஷயா பிக்சர்ஸ் ராஜன் தயாரித்துள்ள ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது நகைச்சுவை கலந்த ஹாரர் த்ரில்லர்.