‘ஒன் வே’ விமர்சனம் : ‘ஒன் வே’ அனைவரையும் உறைய வைக்கும் த்ரில்லர் படம் | ரேட்டிங்: 2.5/5
ஜி குரூப் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபஞ்சன் தயாரிப்பில், எம்.எஸ்.சக்திவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ஒன் வே’. இதில் கதையின் நாயகனாக பிரபஞ்சன் நடிக்க, கோவை சரளா, ஆரா, அப்துல்லா, சார்லஸ் வினோத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
முத்துக்குமரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அஷ்வின் ஹேமந்த் இசையமைத்துள்ளார். சரண் சண்முகம் படத்தொகுப்பு செய்ய, அபிஷேக் தர்ஷன் சவுண்ட் மிக்ஸ் பணியை கவனித்துள்ளார். கார்த்திக் டிஐ பணியை கவனிக்க, விக்கி சண்டை காட்சிகள் வடிவமைத்துள்ளார்.
இயக்கம் : எம்.எஸ்.சக்திவேல்.
மக்கள் தொடர்பு : ஹஸ்வத் சரவணன்
அம்மா கோவை சரளா, தங்கை ஆரா ஆகியோருடன் வாழ்ந்து வரும் ஹீரோ பிரபஞ்சன், சரியான வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறார். விவசாயத்திற்காக வாங்கிய கடனுக்கான வட்டி ஒரு பக்கம் அதிகரிக்க, மறுபக்கம் நிரந்தரமான வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்து கொண்டிருக்கிறார் நாயகன் பிரபஞ்சன். இதற்கிடையே, வட்டிக்கு பணம் கொடுக்கும் வினோத் சார்லஸ், கடனை திருப்பி கொடுக்க முடியாத குடும்பத்தில் இருக்கும் பெண்களை தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்துகிறார். அவரால் பல பெண்கள் பாதிக்கப்பட, நாயகனின் தங்கை மீது அவர் கண் வைக்கிறார். கடனை கொடுக்கவில்லை என்றால், பெண்ணை தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும், என்று அடாவடி செய்யும் சார்லஸ் வினோத்தின் கடனை அடைப்பதற்காக நாயகன் பிரபஞ்சன் வெளிநாட்டுக்கு வேலைக்கு போக முடிவு செய்கிறார். அதற்காக தனது அப்பாவின் நினைவாக வைத்திருந்த தாலியை அம்மா கோவை சரளா விற்று அவரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புகிறார். வெளிநாட்டுக்கு வேலைக்கு போக வேண்டிய நாயகன் பிரபஞ்சன், எதிர்பாராத சில பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வதால் வெளிநாட்டுக்கு போக முடியாமல் மும்பையில் சிக்கிக்கொள்ள, அதே சமயம் கையில் வைத்திருந்த பணத்தை இழந்துவிட்டதால் சொந்த ஊருக்கும் போக முடியாமல் தவிக்கிறார். இந்த நிலையில், நாயகன் பிரபஞ்சனுக்கு பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பால் அவரது வாழ்க்கை எப்படி மாறுகிறது. அது என்ன வாய்ப்பு? கடைசியில் சொந்த ஊருக்கு திரும்பி சென்று குடும்ப கடனை அடைத்தாரா? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை.