ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் சினிமா விமர்சனம் : ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் ஒரு பரபரப்பான ஹைப்பர் லிங்க் த்ரில்லர் | ரேட்டிங்: 3.5/5
நடிகர்கள் :
பரத் – ராஜா
அபிராமி – சாவித்திரி
தலைவாசல் விஜய் – நாதன்
ராஜாஜி – அருள் ஜோதி
கனிகா – கௌசி
ஷான் – கதிர்
கல்கி – இஸ்மாயில்
பவித்ரா லக்ஷ்மி – அனிதா
அஞ்சலி நாயர் – மதி
பிஜிஎஸ் – மூர்த்தி
அரோல் டி சங்கர் – சுப்ரமணி
எம்.ஜெகன் கவிராஜ்
தொழில்நுட்ப கலைஞர்கள்:
எழுத்து – இயக்கம் – பிரசாத் முருகன்
தயாரிப்பு – ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி.ஆனந்த்
இணை தயாரிப்பு – ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் பி.ஜி.சரவணன்
ஒளிப்பதிவு – கே.எஸ்.காளிதாஸ் மற்றும் கண்ணா.ஆர்
இசை – ஜோஸ் பிராங்க்ளின்
படத்தொகுப்பு – ஷான் லோகேஷ்
கலை இயக்குநர் – வி.கே.நடராஜன்
வசனம் – பாடல்கள் – எம்.ஜெகன் கவிராஜ்
சண்டை பயிற்சி – சுகன்
நடனம் – ஷாம்
மக்கள் தொடர்பு – கே.எஸ்.கே செல்வகுமார், மணிமதன்
சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒரு சிறுவனை சுட்டுக் கொன்று அந்த கைத்துப்பாக்கியை கூவம் ஆற்றில் வீசுகிறார். கூவம் ஆற்றில் தூக்கி எறிந்த கைத்துப்பாக்கி கரை ஒதுங்கி, தற்செயலாக ஓருவரால் கண்டுபிடிக்கப்பட்ட அந்த துப்பாக்கி, தொடர்ந்து நான்கு வெவ்வேறு கதைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளின் சங்கிலியாக கதைக்களம் தொடங்குகிறது.
ஒரு நல்ல குடும்பத்தில் திருமணம் செய்து கொண்ட மதி (அஞ்சலி நாயர்), தன் கணவரும் மாமியாரும் தனக்கு எதிராக சதி செய்வதை கண்டு பிடிக்கிறார். கணவன் தன்னுடன் நேரம் செலவழிக்காத போது, கணவனின் தகாத உறவைப் பற்றி தெரிந்து கொண்ட பின் எதிர்கொள்ளும் போராட்டம்.
தனது திருநங்கை மகள் கார்த்தியை (கீச்சா) மருத்துவம் படிக்க வைக்க போராடும் துப்புரவுத் தொழிலாளியான சாவித்ரி (அபிராமி) கந்து வட்டிக்காரன் மதியின் (பிஜிஎஸ்) பாலியல் தாக்குதலை எதிர்கொள்ளும் தன் மகளை பாதுகாக்க போராடுகிறார்.
தனது காதல் மனைவியின் சிகிச்சைக்கு பணம் தேவைப்படும் ராஜா (பரத்) ஒரு கொலையில் ஈடுபடுகிறார்.
தன் மகள் அனிதாவின் (பவித்ரா லட்சுமி) காதலை எதிர்க்கும் சாதி வெறி பிடித்த தந்தை நாதன் (தலைவாசல் விஜய்), தவறான புரிதலின் அடிப்படையில் வன்முறைக் கொலையைச் செய்கிறார்.
இந்த நான்கு தொடர்பற்ற கதை அமைப்புகளுக்குள் நடக்கும் கொலைகளின் தொடர்ச்சியில் துப்பாக்கி ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது, மேலும் அது சுற்றி சுழன்று ஒரு கட்டத்தில் எதிர்பாராத திருப்பத்துடன் இணைகிறது. இந்த துப்பாக்கி ஒவ்வொரு கதையுடனும் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன? நான்கு கதைகள் முடிவு என்ன? ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் பதில் சொல்லும்.
பரத்தின் குழப்பமான கிரிமினல் தோற்றமும் பாவனைகளும் கச்சிதம். உயிருக்கு போராடும் காதல் மனைவியை காப்பாற்ற பணத்திற்காக ஒரு பெண் போராளி கௌசியை (கனிகா) கொலை செய்த பின் தான் யாரை கொலை செய்தோம் என்ற செய்தி தொலைக்காட்சியில் பார்க்கும் இடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
மகன் திருநங்கை என்று தெரிந்தும் கணவனால் கைவிடப்பட்ட துப்புரவுத் தொழிலாளி சாவித்திரியாக வரும் அபிராமி, மகளுக்கு ஆதரவாக நின்றது, மகளின் கல்விக்காக கஷ்டங்கள் மற்றும் அவமானங்களை சந்தித்து, போராடுவது போன்ற காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். சமூக விரோதி களிடமிருந்து தன் மகளை காப்பாற்ற முடிவெடுக்கும் காட்சிகளில் அவரது நடிப்பு அபாரம்.
சாதி வெறி பிடித்த அப்பாவாக தலைவாசல் விஜய், அவரது மகள் அனிதாவாக வரும் பவித்ரா லக்ஷ்மி, காதலர் கதிராக வரும் ஷான், புகுந்த வீட்டில் அதிர்ச்சியான சம்பவங்களை சந்திக்கும் இல்லத்தரசி மதியாக அஞ்சலி நாயர், அருள் ஜோதியாக ராஜாஜி, இஸ்மாயிலாக கல்கி, கந்துவட்டிக்காரன் மூர்த்தியாக பிஜிஎஸ், சுப்ரமணியாக அரோல் டி சங்கர், அடியாளாக எம்.ஜெகன் கவிராஜ், திருநங்கை மகள் கார்த்தியாக நடித்திருக்கும் கீச்சா, குறைவான காட்சிகளில் போராளி கௌசியாக வரும் கனிகா உட்பட அனைத்து நடிகர்கள் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வழங்குகிறார்கள்.
ஒளிப்பதிவு – கே.எஸ்.காளிதாஸ் மற்றும் கண்ணா.ஆர், இசை – ஜோஸ் பிராங்க்ளின், படத்தொகுப்பு – ஷான் லோகேஷ், கலை இயக்குநர் – வி.கே.நடராஜன், வசனம் – பாடல்கள் – எம்.ஜெகன் கவிராஜ், சண்டை பயிற்சி – சுகன், நடனம் – ஷாம் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் பரபரப்பை ஏற்படுத்தி திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளது.
“மனிதர்களின் வாழ்க்கையில் அவரவர் சூழ்நிலையை பொறுத்து கிடைக்கும் சந்தர்ப்பம் தான் ஹீரோ, அது தான் வில்லன். காரணம் ஒரு பொருள் ஒரு மனிதன் கையில் எந்த சந்தர்ப்பத்தில் கிடைக்கிறது என்பதை பொறுத்துதான் அவன் அதை நன்மைக்கோ, தீமைக்கோ பயன்படுத்துவது. எப்படி 4 பேர் கைகளில் எதிர்பாராத விதமாக ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. அவர்கள் வாழ்க்கையை, அந்த துப்பாக்கி எப்படி மாற்றுகிறது என்ற கதையை, நன்கு வடிவமைக்கப்பட்ட திருப்பங்களுடன் விறுவிறுப்பை கூட்டி திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் பிரசாத் முருகன்.
மொத்தத்தில் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி.ஆனந்த் தயாரித்துள்ள ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் ஒரு பரபரப்பான ஹைப்பர் லிங்க் த்ரில்லர்.