ஒத்த ஓட்டு முத்தையா சினிமா விமர்சனம்: ஒத்த ஓட்டு முத்தையாவுக்கு நோ ஓட்டு (நோட்டா) | ரேட்டிங்: 2/5

0
366

ஒத்த ஓட்டு முத்தையா சினிமா விமர்சனம்: ஒத்த ஓட்டு முத்தையாவுக்கு நோ ஓட்டு (நோட்டா) | ரேட்டிங்: 2/5

நடிகர்கள் : கவுண்டமணி, யோகிபாபு, ரவிமரியா, ஓ.ஏ.கே.சுந்தர், மொட்ட ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லஷ்மண், வையாபுரி, முத்துக்காளை, டி.ஆர்.சீனிவாசன், வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஸ் நாகேஷ், கூல் சுரேஷ், சென்ட்ராயன், சதீஸ் மோகன், இயக்குனர் சாய் ராஜகோபால், டெம்பிள் சிட்டி குமா​ர், ராஜேஸ்வரி, தாரணி, லேகா ஸ்ரீ, மணிமேகலை, மணவை பொன் மாணிக்கம்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : சாய் ராஜகோபால்..
ஒளிப்பதிவு – எஸ்.ஏ.காத்தவராயன்
எடிட்டர்- ராஜா சேதுபதி மற்றும் நோயல்
இசை: சித்தார்த் விபின்
தயாரிப்பு : சினி கிராஃப்ட் புரொடக்ஷன்ஸ் – ரவிராஜா எம்.ஈ.
பத்திரிக்கை தொடர்பு: நிகில்முருகன்

அரசியல்வாதியான முத்தையா (கவுண்டமணி) கடந்த பொதுத் தேர்தலில் ஒரே ஒரு ஓட்டை வாங்கி மாபொரும் தோல்வி அடைந்ததால் ஒத்த ஓட்டு முத்தையா என்று பட்டப் பெயரால் அழைக்கப்படுகிறார். முத்தையா தனது அரசியல் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை ஒரு பக்கம் சமாளித்தபடி, தனது மூன்று தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு தான் திருமணம் செய்து கொடுப்பேன் என்று திட்டவட்டமாக இருக்கிறார். ஆனால் மூன்று தங்கைகளும் வேறு ஒருவரை காதலிக்கும் சூழல் ஏற்படுகிறது. மூன்று சகோதரிகளும் ப்ளான் செய்து, தாங்கள் காதலிக்கும் மூன்று பேரை ஒரே குடும்பம் என சொல்லி பெண் கேட்க வர சொல்கின்றனர். அதே வேளையில் பேப்பரில் முத்தையா கொடுத்த விளம்பரத்தை பார்த்து, அவருடைய சொத்தை அபகரிக்க ப்ளான் செய்து,  முத்தையா வீட்டிற்கு பெண் கேட்டு திருட்டுக் குடும்பமான சிங்கமுத்து அண்டு கோ வருகிறது. மூன்று சகோதரிகளும் ப்ளான் செய்துபடி இவர்களும் முத்தையா வீட்டிற்கு பெண் கேட்டு வருகிறார்கள். இதனிடையே இடைத்தேர்தல் வருகிறது. தேர்தலில் கட்சி சார்பில் நிற்க அவருக்கு சீட் கொடுக்க ஒத்துக் கொண்ட மேலிடம், தேர்தல் நெருக்கத்தில் முத்தையாவிடம் கார் ஓட்டுனராக இருந்த யோகி பாபுவை வேட்பாளராக அறிவிக்கிறார்கள். இதனால் கோபம் அடைந்த முத்தையா சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுகிறார். அதோடு ஆளுங்கட்சி அமைச்சரான ஓ.ஏ.கே. சுந்தர், தன் அரசியல் மற்றும் குடும்ப எதிரி முத்தையாவை தோற்கடிக்க ரவி மரியாவை தன் கட்சியில் சேர்த்து அவரை வேட்பாளராக நிறுத்துகிறார். இந்நிலையில் முத்தையா குடும்பத்தையும், அரசியலையும் எப்படி எதிர்கொண்டார்? கடந்த தேர்தலில் ஒத்த ஓட்டு மட்டும் வாங்கிய முத்தையா இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாரா? தங்கைகளுக்கு தான் நினைத்தபடி திருமணம் நடத்தினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

மூத்த நடிகர் கவுண்டமணி ஒரு மரியாதைக்குரிய அரசியல்வாதியாக அரசியல் நய்யாண்டி, வசன உச்சரிப்பு மற்றும் காமெடி கவுண்டர், என அனைத்தும் அவருக்கே உரிய பாணியில் வெளிப்படுத்த முயற்சித்துள்ளார். ஆனால் வயது மூப்பு காரணமாக அவரது குரல் வலம் மற்றும் உடல் மொழி ஒத்துழைப்பு தரவில்லை என்பதை திரையில் தெளிவாக தெரிகிறது.
கவுண்டமணியும், யோகிபாபுவும் தோன்றும் காட்சிகள் ரசிக்கக் கூடியவை. அதே போல் சிங்கமுத்து அண்டு கோ செய்யும் அக்கப்போர் பார்வையாளர்களை கலகலப்பாக வைத்துள்ளது.

ரவிமரியா, ஓ.ஏ.கே.சுந்தர், மொட்ட ராஜேந்திரன், சித்ரா லஷ்மண், வையாபுரி, முத்துக்காளை, டி.ஆர்.சீனிவாசன், வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஸ் நாகேஷ், கூல் சுரேஷ், சென்ட்ராயன், சதீஸ் மோகன், இயக்குனர் சாய் ராஜகோபால், டெம்பிள் சிட்டி குமார், ராஜேஸ்வரி, தாரணி, லேகா ஸ்ரீ, மணிமேகலை, மணவை பொன் மாணிக்கம் தாங்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

சித்தார்த் விபின் இசையும், பின்னணி இசையும், படத்தொகுப்பாளர்கள் ராஜா சேதுபதி மற்றும் நோயல் எடிட்டிங் ஒட்டுமொத்த படத்திற்கு மைனஸ்.

காத்தவராயன் ஒளிப்பதிவு மட்டும் பாராட்டக்குரியது.

சமகால அரசியலில், ஒவ்வொரு அரசியல்வாதியும் வாக்குகளுக்காக மட்டுமே அதில் ஈடுபடுகிறார்கள், மக்களுக்குத் தேவையான எந்த முன்னேற்றத்தையும் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டி, பல அரசியல் படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. அதேபோல், இன்றைய சமகால அரசியலை கேலி செய்வதன் மூலமும், திரைக்கதையில் எந்த புதுமையும் இல்லாமல், முழு படத்தின் சுமையையும் நீண்ட கால அனுபவம் வாய்ந்த முன்னணி நடிகர் கவுண்டமணியின் தோள்களில் சுமத்துவதன் மூலம் படம் பெரிய அளவில் பேசப்படும் என்று இயக்குனர் சாய் ராஜகோபால் நினைத்ததாக தெரிகிறது.

மொத்தத்தில் சினி கிராஃப்ட் புரொடக்ஷன்ஸ் ரவிராஜா தயாரித்திருக்கும் ஒத்த ஓட்டு முத்தையாவுக்கு நோ ஓட்டு (நோட்டா).