எமோஜி தமிழ் வெப் சீரீஸ் விமர்சனம் : எமோஜியின் ஏழு எபிசோட்களும் ரசிகர்களை சூடேற்றி கவர்ந்திழுக்கும் | ரேட்டிங்: 3/5

0
357

எமோஜி தமிழ் வெப் சீரீஸ் விமர்சனம் : எமோஜியின் ஏழு எபிசோட்களும் ரசிகர்களை சூடேற்றி கவர்ந்திழுக்கும் | ரேட்டிங்: 3/5

நடிகர் மஹத் தற்போது நாயகனாக நடித்திருக்கும் ‘ஈமோஜி’ என்ற புதிய வெப் சீரிஸ். தேவிகா சதீஷ் கதாநாயகியாகவும் நடிக்க, மானசா மற்றொரு நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், வி.ஜே ஆஷிக், பிரியதர்ஷினி ராஜ்குமார் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இசை: சனத் பரத்வாஜ் ஒளிப்பதிவு: ஜலந்தர் வாசன்
என். சந்திரசேகர் தயாரிப்பு பணியாற்ற ஏ.எம் சம்பத் தயாரித்துள்ளார்.
ஆஹா ஓடிடி தளத்தில் தொடரை சென்.எஸ்.ரங்கசாமி எழுதி இயக்கியுள்ளார்.
மக்கள் தொடர்பு: யுவராஜ்

ஆதவ் (மஹத்ராகவேந்திரர்) ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்கிறார். யதார்த்தமாக பிராத்தனா (மானசா சௌத்ரி) பார்க்க, மானசாவின் உடலமைப்பிலும், அழகிலும் மயங்கி அவளை காதலிக்கிறார். சில நாட்களுக்குப் பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக பிரிகின்றனர். பிரிந்ததால் மஹத் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். அதே போல், இவர்களின் எதிர் ப்ளாட்டில் தீக்ஷா (தேவிகா சதீஷ்) மற்றும் அவரது காதலனோடு லிவ்விங் டுகெதரில் வாழும் இவர்களும் ஒரு நாள் ப்ரேக் அப்பில் விழுகின்றனர். பிறகு இந்த மனஅழுத்தத்திலிருந்து வெளியே வரமுடியாமல் மகத் தவிக்கிறார். அப்போது எதிர் ப்ளாட்டில் ப்ரேக் அப் ஆன தேவிகாவைச் நட்புடன் பழகி அவளுடன் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்குகிறார். அவருடன் பேசும்போது மன அழுத்தத்திலிருந்து சற்று வெளியே வருவதை உணர்ந்த நாயகன் மகத் அவரிடமும் காதலை வெளிப்படுத்தி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமண வாழ்க்கை சுமூகமாக நடந்து கொண்டிருக்கும் போது, திடீரென இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார்கள். அவர்கள் ஏன் பிரிந்து செல்ல விரும்புகிறார்கள்? அவர்கள் விவாகரத்து செய்தார்களா? இல்லையா? என்பதை உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் காதல் கதை.

அலட்டிக் கொள்ளாத ஆர்ப்பாட்டம் இல்லாத யதார்த்த நடிப்பில் மகத் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நடிப்பிலும் திரைக்கதை தேர்விலும் அபரிதமான வளர்ச்சியடைந்துள்ளார்.

தேவிகா – மானசா இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். ரொமான்ஸிலும் சரி கவர்ச்சியிலும் சரி ஓடிடி தளத்தின் ரசிகர்களின் (அதை எதிர்பார்க்கும்) எதிர்பாரப்பை பூர்த்தி செய்து கச்சிதமான நடிப்பை கொடுத்துள்ளனர்;. குறிப்பாக தேவிகா வேற லெவல்ல ரசிகர்களை ஈறக்கிறார்.
இவர்களுடன் சின்ன சின்ன கேரக்டர்களில் வரும் ஆடுகளம் நரேன், ஏது ஆஷிக், பிரியதர்ஷினி ராஜ்குமார் மற்றும் நண்பர்கள் என அனைவரும் படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரும் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு, சனத்பரத்வாஜ் இசை ஈர்க்கின்றன.

இன்றைய கார்ப்பரேட் உலக காதலையும் திருமண வாழ்க்கையையும் திரைக்கதையாக அமைத்து கவர்ச்சியை புகுத்தி ரொமான்டிக்கான காதல் வெப் சீரியஸாக சென்.எஸ்.ரங்கசாமி இயக்கியுள்ளார்.

மொத்தத்தில் எமோஜியின் ஏழு எபிசோட்களும் ரசிகர்களை சூடேற்றி கவர்ந்திழுக்கும்.