எமக்கு தொழில் ரொமன்ஸ் விமர்சனம் : எமக்கு தொழில் ரொமான்ஸ் – ஒரு டைம்பாஸ் படம் | ரேட்டிங்: 2.5/5
Emakku Thozhil Romance CCNEWS MOVIE REVIEW corrected
எமக்கு தொழில் ரொமான்ஸ் சினிமா விமர்சனம் :
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் :
எழுத்தாளர் – இயக்குனர் : பாலாஜி கேசவன்
நடிப்பு : அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா, ஊர்வசி, அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர், பகவதி பெருமாள், படவா கோபி
இசையமைப்பாளர்: நிவாஸ் கே பிரசன்னா
ஒளிப்பதிவு இயக்குனர்: கணேஷ் சந்திரா
தொகுப்பாளர்: ஜெரோம் ஆலன்
கலை இயக்குனர்: எஸ்.ஜெயச்சந்திரன்
பாடலாசிரியர்: மோகன் ராஜன்
நடன இயக்குனர்: தஸ்தா
ஆடை வடிவமைப்பாளர்: பிரவீன் ராஜா
ஒப்பனை: பி.எஸ்.குப்புசாமி
ஒலிப்பதிவு : ஜி.தரணிபதி
ஸ்டில்ஸ் : டி.ராமமூர்த்தி
VFX & DI : கலசா ஸ்டுடியோஸ்
வண்ணம் : ரகுராமன்
SFX : ராஜசேகர்.கே
வடிவமைப்பு : நவின் குமார்
தயாரிப்பு நிர்வாகி : டி.கணேசன்
தயாரிப்பு: எம்.திருமலை
VFX : நரேஷ்குமார் பாபு
பத்திரிக்கை தொடர்பு : சதீஷ் AIM
ஆண் மற்றும் பெண் நண்பர்களுடன் ஜாலியாக வலம் வரும் உமாசங்கர் (அசோக் செல்வன்) திரைப்பட உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். அவர் பணியாற்றிய ஒரு படம் மாபெரும் தோல்வி அடைகிறது. அவரது நண்பர்களும் மற்றவர்களும் படத்தை பற்றி கிண்டல் அடிக்கிறார்கள். தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரியும் லியோவைக் (அவந்திகா) கண்டதும் காதல் வயப்படுகிறார்.இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாக மகிழ்ச்சியாகச் இவர்களது காதல் செல்லும் போது, உமாவின் பெண் தோழிக்கு ஒரு பிரச்னை வர, அவருக்கு உதவ முடிவு செய்யும் போது உமாசங்கர் மீது தவறுதலான அபிப்பிராயம் ஏற்பட்டு லியோ அவரை விட்டு விலகி செல்லுகிறார். அந்த பிரச்னை என்ன? அதை எப்படி உமாபதி சமாளித்தார்? இருவரும் மீண்டும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
இது போன்ற கதைகளம் அசோக் செல்வனுக்கு லட்டு சாப்பிடுற மாதிரி. உமாசங்கர் கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். ரொமான்டிக் காட்சிகள் குறைவு என்பதால் வழக்கம் போல் அவரது காதல் லீலைகளை வெளிப்படுத்த வாய்ப்பு அமையவில்லை. என்றாலும், காதலியிடம் உண்மையை சொல்ல தவிக்கும் காட்சிகளில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்கிறது.
அவந்திகா மிஸ்ரா, நாயகனுக்கு இணையான கதாபாத்திரம். எமோஷனல் காட்சிகளில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
பகவதி பெருமாள் மற்றும் ஊர்வசி ஓர் அளவுக்கு பார்வையாளர்களை கலகலப்பாக வைத்துள்ளனர்.
அழகம் பெருமாள், படவா கோபி, விஜய் வரதராஜ், எம்.எஸ்.பாஸ்கர். உட்பட அனைவரும் அவர்களுக்குண்டான ஸ்டைலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை மற்றும் பின்னணி இசை, கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவும், ஜெரோம் ஆலனின் படத்தொகுப்பும் ரொமான்டிக் கதைகளத்திற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.
பழைய கதையாக இருந்தாலும், இன்றைய சினிமா ஆர்வலர்களின் எண்ணத்திற்கு ஏற்ப, இயக்குனர் பாலாஜி கேசவன் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி, சுவாரஸ்யத்தைக் கூட்டியிருந்தால், சில காட்சிகள் குறைவில்லாமல் ரோலர் கோஸ்டர் காதல் கதையாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் டி கிரியேஷன்ஸ் சார்பில் எம்.திருமலை தயாரித்திருக்கும் எமக்கு தொழில் ரொமான்ஸ் – ஒரு டைம்பாஸ் படம்.