எண். 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு திரைப்பட விமர்சனம் : ‘எண்-6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ ஒடுக்கப்பட்டவர்களின் உண்ர்வுகளை பேசும் படம் | ரேட்டிங்: 3/5

0
269

எண். 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு திரைப்பட விமர்சனம் : ‘எண்-6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ ஒடுக்கப்பட்டவர்களின் உண்ர்வுகளை பேசும் படம் | ரேட்டிங்: 3/5

எஸ்.ஹரி உத்ரா இயக்கத்தில் சரத், அய்ரா, கஞ்சா கருப்பு, சோனா ஹைடன், மதன், மகேந்திரன், இளையா, கஜராஜ், ராசி அழகப்பன், தஸ்மிகா லட்சுமணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எண் 6. வாத்தியார் கால்பந்தாட்ட குழு’.

ஒளிப்பதிவு – வினோத் ராஜா, இசை – ஏஜே அலிமிர்சாக் , படத் தொகுப்பு -கிஷோர், பாடல்கள் –  வித்யாசாகர்(குவைத்), பா. இனியவன், செ. ஹரி உத்ரா, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி.ஒன்.
கிராமங்களில் இருந்து இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் கால்பந்து விளையாட்டில் முத்திரை பதிக்க வாய்ப்பைத் தேடி துடிக்கும் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த கர்ணாவும் அவரது நண்பர்கள் ஒவ்வொருவரும் தனித்திறமை உடையவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் விளையாட்டு திறமையால் முன்னுக்கு வர லட்சியதோடு இருக்கும் அவர்களுக்கு முன்னாள் கால்பந்தாட்ட வீரரான மதன் தட்சிணாமூர்த்தி பயிற்சி அளித்து அவர்களின் நிலையை உயர்த்த அவர்களுக்கு ஆதராவாக இருக்கிறார். இந்நிலையில் கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள் தேர்வின் போது, கால்பந்து கமிட்டியில் இவர்களில் சிலரை தேர்ந்தெடுக்கிறார்கள். அப்போது மரக்கடை வைத்திருக்கும் ரத்னம் கால்பந்து தேர்வு குழு கமிட்டியிடம் தன் அதிகாரவர்க்கத்தால் அவர்களை மிரட்டி இளைஞர்களை தேர்ந்தெடுக்கவிடாமல் தடுத்து ஒடுக்கப்பட்டவர்களின் திறமைகளை ஒடுக்கி அவர்கள் தங்களுடைய மேல் நிலையை அடைய விடாமல் தடுத்து விடுகிறார். இதனால் கோபமடைந்த கர்ணா, கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் தங்கள் திறமையால் முன்னுக்கு வராமல் அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்று எண்ணிய ரத்னத்தின் தம்பி இளையாவின் தலையை வெட்டி கொன்று விடுகிறார். இந்த சம்பவம் இவர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பதே படத்தின் மீதிக்கதை.
அறிமுக கதாநாயகனாக சரத் இறுக்க முகத்துடன் ஒரே முகபாவனையை கொடுத்ததை தவிர்த்திருக்க வேண்டும்.
கால்பந்தாட்ட பயிற்சியாளராக மதன் தக்‌ஷிணா மூர்த்தி நேர்த்தியான நடிப்பும், வழக்கமாக எல்லா படங்களிலும் மொக்க காமெடி செய்யும் கஞ்சா கருப்புக்கு இந்த படத்தில் உணர்வுபூர்வமான நடிப்பை கொடுத்து திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளார்.
நாயகியாக ஐரா, ரத்தினம் என்ற பாத்திரத்தில் வில்லனாக நரேன், காவல்துறை அதிகாரியாக மற்றும் வில்லனின் அடியாளாக முத்து, ஆதேஷ் பாலா, தேர்வு குழு தலைவராக கஜராஜ், அவரது உதவியாளராக இயக்குநர் ராசி அழகப்பன், சோனா, ஜெயின், இளையா, தஸ்மிகா லட்சுமணன் என அத்தனைப் பேரும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கதையோட்டத்துக்கு தேவையான நடிப்பின் மூலம் பலம் கூடுதல் சேர்த்துள்ளனர்.
வித்யாசாகர், பா. இனியவன், செ. ஹரி உத்ரா, பாடல் வரிகளுக்கு ஏஜே அலிமிர்சாக் இசை ஓகே.
உணர்ச்சிகரமான கதைகளத்துக்கு வினோத் ராஜா ஒளிப்பதிவு பலம்.
காட்சிகள் விறுவிறுப்பாக நகர திரும்ப திரும்ப ரிப்பீட் ஆகும் ஒரு சில காட்சிகளை படத்தொகுப்பாளர் இ.கிஷோர் தவிர்த்திருக்கலாம்.
வாழ்க்கையையும், குடும்ப நிலையையும் உயர்த்துவதற்காகக் கால்பந்தாட்டத்தில் தங்களுக்கான இடங்களை திறமையின் மூலம் முத்திரை பதிக்க முயலும் ஏழை இளைஞர்களின் போராட்டமும், திறமை இருந்தும் கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் வாழ்க்கையில்  உயர்வதை விரும்பாத மேல் மட்ட வர்கத்தின் அரசியலை திரைக்கதை அமைத்து படத்தை இயக்கியுள்ளார் எஸ்.ஹரி உத்ரா.
மொத்தத்தில்  பிஎஸ்எஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் உத்ரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘எண்-6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ ஒடுக்கப்பட்டவர்களின் உண்ர்வுகளை பேசும் படம்.