எண்ணித் துணிக விமர்சனம் : எண்ணித் துணிக காதலும், கொள்ளையும்; கலந்த துரத்தல் நாடகம் | ரேட்டிங்: 2.5/5

0
189

எண்ணித் துணிக விமர்சனம் : எண்ணித் துணிக காதலும், கொள்ளையும்; கலந்த துரத்தல் நாடகம் | ரேட்டிங்: 2.5/5

ரெயின் ஆஃப் எரோஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியம் கதை எழுதி தயாரித்து க்ரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் வழங்க படத்தில் ஜெய், அதுல்யா ரவி, அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணாh, வித்யா பிரதீப் சுனில் ஷெட்டி, சாம் சுரேஷ், சரண்யா ரவி நடித்துள்ளனர்.

படத்தின் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.கே.வெற்றிச் செல்வன். இசை – சாம் சிஎஸ், ஒளிப்பதிவு -தினேஷ் குமார் , படத் தொகுப்பு -சாபு ஜோசப், சண்டை- முருகன், பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா, ரேகா.

சர்வதேச கொள்ளை கும்பல் தலைவன் சுரேஷ் சுப்ரமணியம், 2000 கோடி மதிப்புள்ள வைரங்கள் தமிழகத்தில் உள்ள அமைச்சரிடம் இருப்பதை கேள்விப்பட்டு அங்கிருக்கும் கொள்ளையன் வம்சி கிருஷ்ணாவிடம் வைரத்தை கொள்ளையடித்து தருமாறு டீல் பேசுகிறார். இதனை ஏற்கும் வம்சி கிருஷ்ணா தன் கும்பலுடன் நகைக்கடையில் கொள்ளையடிக்க செல்கின்றனர். அங்கு திருமணத்திற்காக நகை வாங்க வரும் காதலர்கள் ஜெய்-அதுல்யாரவி மற்றும் பலர் இருக்க கொள்ளை சம்பவம் நடக்கும் போது அதுல்யா ரவி கொல்லப்படுகிறார். அதே சமயம் வைரங்களையும், நகைகளையும் கொள்ளையடித்து செல்லும் வம்சி கிருஷ்ணாவிற்கு பெரும் அதிர்ச்சியாக வைரங்கள் காணாமல் போகிறது. வைரத்தை தேடும் வம்சி, அவரை கொல்ல புறப்படும் ஜெய், இருவரும் சந்தித்து மோதிக் கொண்டார்களா? ஜெய் பழி வாங்கினாரா? வம்சியை தேடி வரும் சுரேஷ் சுப்ரமணியத்திடம் வைரம் கிடைத்ததா? என்பதே மீதிக்கதை.

ஜெய், அதுல்யா ரவி, அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணாh, வித்யா பிரதீப் சுனில் ஷெட்டி, சாம் சுரேஷ், சரண்யா ரவி ஆகியோர் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.

இசை – சாம் சிஎஸ், ஒளிப்பதிவு -தினேஷ் குமார் , படத் தொகுப்பு -சாபு ஜோசப், சண்டை- முருகன் அனைவரும் கச்;சிதமாக செய்துள்ளனர்.

கொள்ளை, கொலை, காதல், கடத்தல், சூழ்ச்சி, பழிக்கு பழி என்று ஆக்ஷனுடன் திரைக்கதையமைத்து சிறப்பாக இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.கே.வெற்றிச் செல்வன். படத்தில் சில இடங்களில் கோர்வையாக இல்லாமல் தனித்தனியாக இருப்பது போல் தெரிவதை தவிர்த்திருக்கலாம். இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் முடிந்த வரை படத்தை விறுவிறுப்பாக கொடுக்க நினைத்திருப்பதற்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ரெயின் ஆஃப் எரோஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியம் தயாரித்திருக்கும் எண்ணித் துணிக காதலும், கொள்ளையும்; கலந்த துரத்தல் நாடகம்.