எக்ஸ்ட்ரீம் சினிமா விமர்சனம்: எக்ஸ்ட்ரீம் இன்றைய நவீன, நாகரீக சமூகத்தை எச்சரிக்கும் ஒரு க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 2.5/5
சீகர் பிக்சர்ஸ் சார்பில் கமலா குமாரி , ராஜ்குமார்.என் தயாரித்திருக்கும் எக்ஸ்ட்ரீம் படத்தை எழுதிய இயக்கியிருக்கிறார் ராஜவேல் கிருஷ்ணா.
இதில் ரக்சிதா மஹாலஷ்மி – ஸ்ருதி (காவல் அதிகாரி), அபி நக்ஷத்ரா – திவ்யா, ராஜ் குமார் நாகராஜ் – சத்திய சீலன், அனந்த் நாக் – ஜெய்,அமிர்தா ஹல்டர் – ஸ்ரேயா, சிவம் தேவ் – திரு ,ராஜேஸ்வரி ராஜி – சுகா, சரிதா – அலமேலு, பரோட்டா முருகேசன் – முருகேஷ், ராஜசேகர் – சேகர்,ஜெயராஜ் ஜெய- ஜெயராஜ், குட்டி கமலாத்மிகா – ஸ்ரீ,மாஸ்டர் கோகுல், தன சேகர் – தனா, ஓட்டேரி சிவா – சிவா,சந்திர மௌலி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவாளர் – டிஜே பாலா, எடிட்டர் – ராம்கோபி, இசை – ஆர்.எஸ்.ராஜ்பிரதாப், நடன இயக்குனர – பி.ராக் ஷங்கர், ஸ்டண்ட் மாஸ்டர் – சிவம் எஸ்இவி, அசோசியேட் ஒளிப்பதிவாளர் – கிஷோர், ராமச்சந்திரன், ஸ்டில்ஸ் – சுரேந்தர், பத்திரிக்கை தொடர்பு – புவன்.
சென்னை அம்பத்தூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் கட்டுமான பணி நடைபெறுகிறது. கட்டிட வேலையில் ஈடுபட்டு வரும் கூலி ஆட்கள் அங்கிருக்கும் கான்கிரீட் தூண் ஒன்றில் தகடை பிரிக்கும் போது ஒரு இளம்பெண், கொலை செய்யப்பட்டு கான்கிரீட் கொண்டு நிரப்பப்பட்டு இருப்பதைக் கண்டு தொழிலாளர்கள் அதிர்ச்சியாகின்றனர். கொலை செய்யப்பட்ட இளம் பெண் யார் என காவல்துறை அதிகாரி சத்தய சீலான் (ராஜ் குமார் நாகராஜ்) விசாரணையை தொடங்குகிறார்கள். விசாரிக்கும் போது அந்த பெண் அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில் வீட்டு வேலை செய்யும் பெண் திவ்யா (அபி நட்சத்திரா) என தெரியவருகிறது. மேலும் திவ்யா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, இருப்பதை அறிந்து தீவிரமாக கொலை குற்றவாளியை தேடும் போது இந்தக் கொலையை யார் செய்தார்கள் என அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது. இந்த கொலை குற்றவாளிகள் யார்? ஏன்? எதற்காக இந்த கொலை நடந்தது? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது எக்ஸ்ட்ரீம் படத்தின் மீதிக்கதை
லீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் ராஜ்குமார் நாகராஜ் சத்தய சீலான் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி கோபம், பாசம் என நடிப்பில் வித்தியாசம் காட்டி சிறப்பாக நடித்துள்ளார்.
ஃபேஷன் என்ற பெயரில் அதீத கவர்ச்சியாக உடை உடுத்தி பார்வையாளர்களின் உணர்ச்சிகளை தூண்டும் ஸ்ரேயாவாக கதையின் துருப்புச் சீட்டாக தனது வசீகரத்தால் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் அம்ரிதா ஹல்டர்.
எஸ்.ஐ.ஸ்ருதியாக ரக்சிதா மஹாலஷ்மி போலீஸ் உடையில் நச்சுன்னு உள்ளார்.
பாதிக்கப்பட்ட ஏழை பெண் திவ்யாவாக அபி நக்ஷத்ரா உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஜெயாக அனந்த் நாக், திருவாக சிவம் தேவ், சுகாவாக ராஜேஸ்வரி ராஜி, அலமேலுவாக சரிதா, முருகேஷாக பரோட்டா முருகேசன், சேகராக ராஜசேகர், ஜெயாவாக ஜெயராஜ் ஜெய, ஸ்ரீயாக குட்டி கமலாத்மிகா, மாஸ்டர் கோகுல், தனா, சிவா, சந்திர மௌலி ஆகியோர் அழுத்தமான நடிப்பு வெளிப்படுத்தி கதைக்கு வலு சேர்த்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் – டிஜே பாலா, எடிட்டர் – ராம்கோபி, இசை – ஆர்.எஸ்.ராஜ்பிரதாப், நடன இயக்குனர – பி.ராக் ஷங்கர், ஸ்டண்ட் மாஸ்டர் – சிவம் எஸ்இவி, ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் க்ரைம் த்ரில்லர் கதைக்கு தேவையான பங்களிப்பை தந்துள்ளனர்.
நவீன நாகரிகம் என்ற பெயரில் இளம் பெண்கள் அணியும் கவர்ச்சியான ஆடைகளால் நடக்கும் பாலியல் துன்புறுத்தல், கொலைகள், பொது வெளியில் காதல் என்ற பெயரில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்த கதைக்களத்தில், அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிந்திக்க வைக்கும் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா.
மொத்தத்தில் சீகர் பிக்சர்ஸ் சார்பில் கமலா குமாரி, ராஜ்குமார்.என் தயாரித்திருக்கும் எக்ஸ்ட்ரீம் இன்றைய நவீன, நாகரீக சமூகத்தை எச்சரிக்கும் ஒரு க்ரைம் த்ரில்லர்.