உழைக்கும் கைகள் விமர்சனம்: உழைக்கும் கைகள் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு ட்ரீட் | ரேட்டிங் – 2.5|5

0
91

உழைக்கும் கைகள் விமர்சனம்: உழைக்கும் கைகள் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு ட்ரீட் | ரேட்டிங் – 2.5|5

டாக்டர் குமரகுருபரன் வழங்க கே. எம்பையர் மூவீஸ் சார்பில் டாக்டர் கே. சூர்யா தயாரிப்பில் நாமக்கல் எம்.ஜி.ஆர்., நாயகனாக நடித்துள்ள படம் உழைக்கும் கைகள்.கிரண்மை, போண்டாமணி, பிரேம்நாத், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சங்கர்கணேஷ் இசையையும், ஜாகுவார் தங்கம் சண்டை பயிற்சியையும் கவனித்துள்ள இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இயக்கி உள்ளார் நாமக்கல் எம்.ஜி.ஆர்.

படத்தொகுப்பை எஸ்.ஜே.பாரதி, ஒளிப்பதிவை சிவா, தயாரிப்பு வடிவமைப்பை சதாசிவ மூர்த்தி, மற்றும் செங்கோட்டை கணேஷ் பண்ணையார் ஆகியோர் கவனித்துள்ளனர். மக்கள் தொடர்பு : விஜயமுரளி, கிளாமர் சத்யா.
தயாரிப்பு – டாக்டர் மு. சூர்யாகுமரகுருபரன்; திரைக்கதை – வசனம் – இயக்கம் -நாமக்கல் எம்.ஜி.ஆர்..

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மறைந்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அரசியலிலும், சினிமாவிலும் அவரது தாக்கம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.  சினிமாவில் எம்.ஜி.ஆர் படங்களை டிஜிட்டலில் வெளியிட்டால் அதற்கும் வரவேற்பு கிடைக்கிறது.
இப்போது உழைக்கும் கைகள் என்ற படம் எம்.ஜி.ஆர் பாணியில் விவசாயிகளின் வாழ்வுரிமை, தொழில் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக தனது திரைப்படங்கள் மூலம் எம்.ஜி.ஆர் குரல் கொடுத்து வந்தார். அதன் பிறகு யாரும் அப்படி குரல் கொடுக்கவில்லை. 50 வருடங்களுக்குப் பிறகு நாடெங்கும் பற்றி எரியும் விவசாயிகள் பிரச்சனையை மையமாக வைத்து விவசாயிகளின் வாழ்வியலைக் கூறும் படமாகவும், நகைச்சுவை, ஆக்ஷன் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாகவும் உழைக்கும் கைகள் உருவாகியுள்ளது.

பார்ப்பதற்கு எம்.ஜி.ஆர் போல் இருக்கும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான நாமக்கல் எம்.ஜி.ஆர் கதையின் நாயகனாக காதல், பாசம் ஆக்ஷன் என தன்னால் முடிந்த பங்களிப்பை கொடுத்துள்ளார். நடித்திருப்பதோடு படத்தை இயக்கி இருக்கிறார். இக்;கத்தில் இன்றைய காலகட்டத்தில் உள்ள டெக்னாலஜியை பயன்படுத்தவில்லை என்பது மட்டும் குறை. மற்றப்படி அவரது முயற்றியை பாராட்டலாம்.

நாயகியாக நடித்திருக்கும் கிரண்மை,  நடிகர்கள் போண்டா மணி, ஷர்மிளா, விஜயலட்சுமி, மோகன், பிரேம்நாத், செந்தில்நாதன் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஜாக்குவார் தங்கம், அவரே டப்பிங் பேசி இருக்கலாம்.

எம்.ஜி.ஆரின் விவசாயி படத்தின் மாபெரும் வெற்றி பெற்ற  நல்ல நல்ல நிலம் பார்த்து…, இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள…, காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது….,  கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி .. விவசாயி..அனைத்து பாடல்களையம்  புதுப் பொலிவுடன் பாடல்களை கொடுத்து எம்.ஜி.ஆர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறார் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.

ஒளிப்பதிவாளர் சிவா இயற்கையின் அழகை அற்புதமாக படம்பிடித்து காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளார்.

மொத்தத்தில் கே.எம்பையர் மூவீஸ் சார்பில் டாக்டர் கே. சூர்யா தயாரித்திருக்கும் உழைக்கும் கைகள் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு ட்ரீட்.