இந்த க்ரைம் தப்பில்ல விமர்சனம் : இந்த க்ரைம் தப்பில்ல கதை களம் நல்லா இருக்கு ஆனா கவரவில்லை | ரேட்டிங்: 2/5

0
313

இந்த க்ரைம் தப்பில்ல விமர்சனம் : இந்த க்ரைம் தப்பில்ல கதை களம் நல்லா இருக்கு ஆனா கவரவில்லை | ரேட்டிங்: 2/5

மதுரியா புரொடக்ஷன்ஸ் சார்பில் மனோஜ் கிருஷ்ணசாமி தயாரித்திருக்கும் இந்த க்ரைம் தப்பில்ல திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தேவகுமார்.

இதில் ஆடுகளம் நரேன், பாண்டி கமல், மேக்னா ஏலன், முத்து​க்காளை, வெங்கட் ராவ், கிரேசி கோபால், காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவாளர் – ஏஎம்எம் கார்த்திகேயன், இசை- பரிமளவாசன், படத்தொகுப்பாளர்-ராஜேஷ்,கண்ணன், அஜிக்குமார், சண்டை-கணேஷ்,உடை-என்.முரளிதரன், மேக்கப் – போபன் வரப்புழா, மக்கள் தொடர்பு – ஏய்ம் சதீஷ்.

நகரில் செல்போன் கடை வைத்திருக்கும் இளைஞர் கிராமத்திலிருந்து வந்த மேக்னா ஏலன் வேலைக்கு அமர்த்துகிறார்.அவளுடைய நடை உடை பாவனைகள் என அனைத்திலும் நவீன கால பெண்ணாக மாற்றி விடுகிறார். அப்போது, அவளை பல்வேறு இடங்களில் 3 இளைஞர்கள் அவளின் அழகில் மயங்கி அவளை காதலிக்கிறார்கள். இந்த மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள். ஆனால் அவர்கள் மூவரும் ஒரே பெண்ணை காதலிப்பதை அவர்கள் மூன்று பேருக்கும் தெரியாது. இந்த மூன்று பேரையும் வெவ்வேறு பெயரில் காதலிப்பது போல் தன் பின்னால் சுற்ற வைக்கிறார் மேக்னா. இன்னொரு பக்கம் பெண்களுக்கு நடக்கும் பாலியல் சம்பவங்களை தடுக்கும் விதமாக முன்னாள் ராணுவ வீரர் ஆடுகளம் நரேன் போராடுகிறார். பாலியல் குற்றத்தில் இருந்து தப்பிக்கும் குற்றவாளிகளையும், அந்த குற்றத்தை செய்பவர்களை தானே தண்டிக்க திட்டம் போட்டு செயல்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் இந்த 3 இளைஞர்களை ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் மேக்னா ஏலனை சந்திக்க வருகிறார்கள். அப்போது அவர்கள் மூவரும் சிக்கலில் மாட்டுகிறார்கள். யார் இந்த மேக்னா? அவள் ஏன் 3 இளைஞர்களை வெவ்வேறு பெயரில் காதலிக்கிறாள்? செல்போன் கடை வைத்திருக்கும் இளைஞருக்கும் மேக்னாவுக்கும் என்ன தொடர்பு? ஆடுகளம் நரேன் என் எதற்காக  பாலியல் குற்றம் செய்பவர்களை தண்டிக்க துடிக்கிறார்? 3 இளைஞர்கள், மேக்னா மற்றும் ஆடுகளம் நரேனுக்கு என்ன தொடர்பு? இது போன்ற கேள்விகளுக்கு இந்த க்ரைம் தப்பில்ல பதில் சொல்லும்.

ஆடுகளம் நரேன், பாண்டி கமல், மேக்னா ஏலன், முத்துக்காளை, வெங்கட் ராவ், கிரேசி கோபால், காயத்ரி என அனைவரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு செயற்கைத்தனமாக நடிப்பை தான் வழங்கியுள்ளனர்.

பலவீனமான திரைக்கதையால் ஒளிப்பதிவாளர் – ஏஎம்எம் கார்த்திகேயன், இசையமைப்பாளர் – பரிமளவாசன், படத்தொகுப்பாளர்-ராஜேஷ், கண்ணன், அஜிக்குமார், ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு வீணடிக்க பட்டுள்ளது.

சமகால பிரச்சினையான பாலியல் குற்றத்தை கருவாக இருக்கும் போது திரைக்கதை மற்றும் காட்சி அமைப்பை சிறப்பாக கையாள வேண்டும். ‘இந்த க்ரைம் தப்பில்ல’ நல்ல கதை களம். ஆனால் இயக்குனர் தேவகுமார் பலவீனமான திரைக்கதை அமைத்ததுடன் காட்சிகளையும் கோர்வையாக அமைக்க தவறிவிட்டார். இதனால் தொழில் நுட்ப கலைஞர்கள் இடமிருந்து சரியான வேலையை அவர் வாங்க முடியவில்லை. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் கண்டிப்பாக சிறப்பாக காட்சி படுத்தப்பட்டு இருக்க முடியும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இடமிருந்து சிறந்த பலனை பெற்றிருக்கலாம்.

மொத்தத்தில் மதுரியா புரொடக்ஷன்ஸ் சார்பில் மனோஜ் கிருஷ்ணசாமி தயாரித்திருக்கும் இந்த க்ரைம் தப்பில்ல கதை களம் நல்லா இருக்கு ஆனா கவரவில்லை.