இங்க நான் தான் கிங்கு விமர்சனம் : இங்க நான் தான் கிங்கு குடும்பத்துடன் பார்க்க கூடிய மாஸ் காமெடி என்டர்டெய்னர் | ரேட்டிங்: 3/5

0
408

இங்க நான் தான் கிங்கு விமர்சனம் : இங்க நான் தான் கிங்கு குடும்பத்துடன் பார்க்க கூடிய மாஸ் காமெடி என்டர்டெய்னர் | ரேட்டிங்: 3/5

கோபுரம் பிலிம்ஸ் ஜி.என். அன்புச்செழியன் வழங்க சுஷ்மிதா அன்புச்செழியன் தயாரித்த இங்க நான் தான் கிங்கு படத்தை இயக்கியிருக்கிறார் ஆனந்த் நாராயண்
வெற்றிவேல், ப்ரியாலயா – தேன்மொழி, தம்பி ராமையா – விஜயகுமார் (ஜமீன்), பாலா சரவணன் – பாலா (சின்னா ஜமீன்), விவேக் பிரசன்னா – அமல்ராஜ், முனிஷ்காந்த் – பாடி பல்ராம், சுவாமிநாதன் – சுவாமி, மாறன் – ரோலக்ஸ், சேசு – வினோத் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – ஓம் நாராயண், இசையமைப்பாளர் – டி.இமான், எடிட்டர் – எம்.தியாகராஜன், எழுத்தாளர் – எழிச்சூர் அரவிந்தன், கலை இயக்குனர் – சக்தி வெங்கட்ராஜ்.எம், நடன இயக்குனர் – பாபா பாஸ்கர், கல்யாண், ஃபைட் மாஸ்டர் – மிராக்கிள் மைக்கேல், பாடலாசிரியர் – விக்னேஷ் சிவன், முத்தமிழ், தயாரிப்பு நிர்வாகி – எம்.செந்தில் குமார், தயாரிப்பு மேற்பார்வை – எம்.பச்சியப்பன், ஆடை வடிவமைப்பாளர் – ஆர்.கே. நவதேவி ராஜ்குமார், உடை – ஆர்.முருகானந்தம், சவுண்ட் மிக்ஸ் – டி.உதயகுமார், நாக் ஸ்டுடியோ, ஷேட் 69 ஸ்டுடியோஸ், மேக்கப் மேன் – அ.கோதண்டபாணி, ஸ்டில்ஸ் – எஸ்.முருகதாஸ், வண்ணக்கலைஞர் – பிரசாத் சோமசேகர்,வடிவமைப்புகள் – என்.டி. பிராதூல், கிரியேட்டிவ் எக்ஸிகியூட்டிவ் – ஜெயவேல்முருகன், தலைமை தயாரிப்பு நிர்வாகி – அனில் குமார்.எம்.கே, பிஆர்ஒ – நிகில் முருகன்.

வெற்றி (சந்தானம்) சொந்த வீடு இல்லாததால் திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது. ஒரு திருமண நிறுவனத்தை நடத்தி வரும தன் நண்பன் அமல்ராஜிடம் (விவேக் பிரசன்னா) வேலை பார்த்துக்கோண்டே 25 லட்சத்தை கடன் பெற்று வீடு வாங்குகிறார். வீடு வாங்கியும் கடன் இருப்பதால் திருமணம் தடைபடுகிறது. மேலும் அவர் தனது அமல்ராஜிடம்  வாங்கிய கடனுக்காக கடனில் மூழ்கியுள்ளார். ஒரு பொருத்தமான துணைக்கான அவரது தேடலானது, அவரை நேராக ஒரு பெருங்களிப்புடைய பேரழிவு தரும் திருமணத் திட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார் திருமண தரகர் (மறைந்த மனோபாலா). அவரை ஒரு பணக்கார ரத்னபுரி ஜமீன் விஜய்குமார் (தம்பி ராமையா) மகள் தேன்மொழியை (பிரியாலயா) வெற்றிக்குத் திருமணம் செய்து வைக்கிறார். ஆனால், திருமணத்துக்குப் பிறகுதான் ஜமீன் குடும்பம் ஏற்கனவே கோடியில் கடனை வைத்து இருப்பதும் தெரிய வர, தேன்மொழியோடு ஜமீன் விஜய்குமாரும் அவரது மகன் பாலாவும் (பால சரவணன்) வெற்றியின் வீட்டில் ‘வீட்டோடு மாமனார், மச்சானாக’ சென்னைக்கு வந்து விடுகிறார்கள். இருவரையும் ஆகியோரை சமாளிக்க வேண்டியிருந்த நிலையில் ஒரு கம்பெனி பார்ட்டி இவர்களுக்கு ஒரு பேரழிவாக மாறுகிறது. அதாவது, சென்னையில் வெடிகுண்டு வைத்து நாசவேலைகளில் ஈடுபட ஒரு தீவிரவாத கும்பல் வர, அந்த கும்பலைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் அமல்ராஜ் (விவேக் பிரசன்னா) போல் இருக்க, வெற்றியின் வீட்டில் எதிர்பாராமல் வந்து மாட்டிக்கொண்டு கரண்ட் ஷாக் அடித்து இறந்து விடுகிறார். இதனால் அதிர்ச்சியாகும் வெற்றியின் குடும்பம் என்ன செய்வதென்று தெரியாமல் (முனிஷ்காந்த்) பாடி பல்ராமிடம் அந்த உடலை ஒப்படைக்கின்றனர். அமல்ராஜ் தான் இறந்து விட்டதாக வெற்றி நினைக்க, உயிருடன் இருக்கும் அமல்ராஜை பார்த்தவுடன் உருவ ஒற்றுமை உண்மையை தெரிந்து கொள்கிறார். பயங்கரவாதியைப் பிடிப்பவருக்கு ₹50 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்ற முக்கிய செய்தி வர வெற்றியும் அவரது குடும்பமும் சேர்ந்து பாடி பல்ராமை தொடர்பு கொள்கின்றனர். ஆனால் அந்த தீவிரவாதி உடல் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியாகும் வெற்றி, தன் நண்பர் அமல்ராஜை வைத்து அந்த தீவிரவாத கும்பலை பிடித்து தர வியூகம் அமைக்கிறார். அதே போல பல தரப்பினரும் அந்த சடலத்தை கோர விரும்புகிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

சந்தானம், பால சரவணன், தம்பி ராமையா ஆகியோரின் காம்போ படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது. சந்தானம் அனைத்து நகைச்சுவை நடிகர்களுக்கு அவர்களின் நகைச்சுவைகளை வழங்குவதற்கு சரிசமமான இடம் கொடுத்துள்ளார். இருந்தும் சந்தானம் தனது தனித்துவமான நடிப்பால் ஜொலிக்கிறார்.

விவேக் பிரசன்னா இரட்டை வேடத்தில் சிறப்பாக செய்துள்ளார். புதுமுகம் ப்ரியாலயா தேன்மொழியாக அழகாகவும் நடனமாடுகிறார். மேலும், முனிஷ்காந்த், சுவாமிநாதன், மாறன், மறைந்த மனோபாலா, மறைந்த சேசு ஆகியோர் சில காட்சிகளில் தோன்றி நேர்த்தியான நடிப்பை தந்துள்ளனர்.

டி.இமான் இசையில் பாடல்கள், பின்னணி இசை இளைஞர்களுக்கு பிடித்த மாதிரி போதுமானவையாக உள்ளது. ஓம் நாராயண் நல்ல கேமராவொர்க்கை வழங்கியுள்ளார். எடிட்டர் – எம்.தியாகராஜன், கலை இயக்குனர் – சக்தி வெங்கட்ராஜ்.எம், நடன இயக்குனர் – பாபா பாஸ்கர், கல்யாண், ஃபைட் மாஸ்டர் – மிராக்கிள் மைக்கேல் ஆகியோரின் கணிசமான பங்களிப்பு விறுவிறுப்பை கூட்டியுள்ளது.

எழிச்சூர் அரவிந்தனின் புத்திசாலித்தனமான ஸ்கிரிப்ட் மற்றும் சூழ்நிலை நகைச்சுவையில் படம் செழிக்கிறது. கடன் வாங்கி, அதை அடைக்க தவிக்கும் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஆனந்த் நாராயண்.

மொத்தத்தில் கோபுரம் பிலிம்ஸ் ஜி.என். அன்புச்செழியன் வழங்க சுஷ்மிதா அன்புச்செழியன் தயாரித்த இங்க நான் தான் கிங்கு குடும்பத்துடன் பார்க்க கூடிய மாஸ் காமெடி என்டர்டெய்னர்.