அஸ்வின்ஸ் சினிமா விமர்சனம் :  அஸ்வின்ஸ் ஒரு அழுத்தமான உளவியல் ஹாரர் த்ரில்லர் | ரேட்டிங்: 4/5

0
584

அஸ்வின்ஸ் சினிமா விமர்சனம் :  அஸ்வின்ஸ் ஒரு அழுத்தமான உளவியல் ஹாரர் த்ரில்லர் | ரேட்டிங்: 4/5

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின்(SVCC) BVSN பிரசாத் தயாரித்திருக்க, பாபிநீடு பி வழங்கும் அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி நடித்திருக்கும் படம் ‘அஸ்வின்ஸ்’.நடிகர்கள் :
அர்ஜுனாக வசந்த் ரவி
ஆர்த்தியாக விமலா ராமன்
ரித்விகாவாக சரஸ்வதி மேனன்
வருணாக முரளிதரன் எஸ்
ராகுலாக உதயதீப்
பப்ளிசிட்டி டிசைனர் (போஸ்டர்கள்) – சிவா
ஆடை வடிவமைப்பாளர் – காஞ்சன்
சவுண்ட் டிசைனர் – சின்க் சினிமா (சச்சின் மற்றும் ஹரி)
கலை – டான் பாலா
எடிட்டர் – வெங்கட் ராஜன்
இசை – விஜய் சித்தார்த்
ஓளிப்பதிவு – ஏ.எம் எட்வின் சகே
வழங்குபவர் – பாபிநீடு.பி
இணைத் தயாரிப்பாளர் – பிரவீன் டேனியல்
தயாரிப்பாளர் – பிவிஎஸ்என் பிரசாத்
எழுதி இயக்கியவர்: தருண் தேஜா

நான்கு நியமன இந்து வேத நூல்களில் ஒன்றான ரிக்வேதத்தில், அஸ்வின்ஸ் என்பது மருத்துவம், ஆரோக்கியம், விடியல் மற்றும் அறிவியல் ஆகியவற்றைக் குறிக்கும் இரட்டைக் கடவுள்களை குறிக்கிறது. உலகில் தீமையை கட்டவிழ்த்துவிடும் 1500 ஆண்டு பழமையான இரட்டை கடவுள்களான அஸ்வின்ஸ் (ASVINS) ஒரு தீமையை தற்செயலாக மனித உலகிற்குக் கட்டவிழ்த்துவிட்ட யூடியூபர்களின் கூட்டத்தைச் சுற்றி படம் சுழல்கிறது.

பிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆர்த்தி ராஜகோபாலுக்கு (விமலா ராமன்) ஓரு கடல் சூழ்ந்த தனிமையான சொந்தமான ஆடம்பரமான பங்களா ஒன்றில் வாழ்ந்த அவர் அங்கிருந்த 15 ஊழியர்களை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொள்கிறார். ஆனால் கைப்பற்றப்பட்ட அவருடைய சடலம் திடீரென்று மாயமாகி விடுகிறது. அவரது சடலம் எப்படி மாயமானது எங்கே இருக்கிறது என்பது புரியாத புதிராக இருப்பதோடு அந்த பங்களாவில் பல அமானுஷ்ய விஷயங்கள் இருப்பதாக பேசப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து யூடியூபர்கள், அர்ஜுன், ரித்விகா, வருண், கிரேஸ் மற்றும் ராகுல், பிளாக் டூரிசத்தில் ஒரு திட்டத்திற்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த தனித்தீவில் அமைந்துள்ள ஆர்த்தி ராஜகோபாலுக்கு (விமலா ராமன்) சொந்தமான ஆடம்பரமான மர்ம பங்களாவுக்கு செல்ல, கடல் நடுவே சில மணி நேரங்கள் பாதை உருவாகும் பின்னர் அந்தப் பாதை கடலால் மூழ்கடிக்கப்படும். பின்பு அடுத்த 12 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் இந்த பாதை உருவாகும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் தான் அந்த பாதை வழியே செல்ல முடியும். இப்படிப்பட்ட தீவில் அமைந்துள்ள பங்களாவையும் அதன் முழு விபரத்தையும் ஒரு வீடியோ படமாக எடுத்துக் கொடுக்க கூடிய வேலைக்காக  இந்த யூடியூப் பார்ட்டிகளுக்கு அசைன்மென்ட், மற்றும் பெரிய தொகையும் கிடைக்க அதற்கு அவர்கள் அங்கே வருகின்றனர். பங்களாவுக்குள் நுழைந்ததும் அவர்கள் எதிர்கொள்ளும் அமானுஷ்ய விஷயங்களும் அதனால் அவர்கள் உயிர் போகும் அளவுக்கு பல சிக்கல்களை சந்திக்கிறார்கள். அவர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யங்களை எதிர் கொண்டு அதை அடக்க முடியுமா? பிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆர்த்தி ஏன் தற்கொலை செய்துக் கொண்டார்? அதற்கான விடை அரிய பேய் மாளிகையில் அந்த யூடியூப் பார்ட்டி களுடன் நாமும் சேர்ந்து பயத்துடன் பயணிக்க வேண்டும்..!
சைக்காலஜிக்கல் த்ரில்லரில், ஒரு உறுதியான புலனாய்வாளர் தீய அமானுஷ்யத்தில் ஏற்படும் பயங்கரமான சம்பவங்களை எதிர்கொண்டு, இந்த மர்மத்தை உடைத்து உடல் மொழியின் மூலம் உணர்வுபூர்வமான நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்திழுத்திருக்கிறார் நடிகர் வசந்த் ரவி. தீய சக்தியாக தோன்றும் உருவத்தில் நிச்சயம் அனைவரையும் ஒரு கணம் பயமுறுத்துகிறார்.
விமலா ராமன், முரளிதரன், சரஸ் மேனன், உதய தீப் மற்றும் சிம்ரன் பரீக் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்கள். இவர்கள் அனைவரும் கதையோடு ஒன்றி ஹாரர் திரில்லருக்கு தேவையான பயம் கலந்த நடிப்பை முகத்தில் வெளிப்படுத்தி அசத்தலான நடிப்பு வழங்கி பார்வையாளர்களை திரைக்கதையோடு பயணிக்க வைத்துள்ளனர்.
உளவியல் திகில் திரைப்படத்தில் ஒளிப்பதிவு பங்களிப்பு தனித்தன்மை வாய்ந்தது, அதன் செயல்முறை முழுவதும் மிகவும் துல்லியமாக ஒளிப்பதிவாளர் ஏ.எம்.எட்வின் சகே கையாண்டுள்ளார். பார்ப்பவர்களை படம் முழுக்க ஒரு வித பயத்தில் அதிரவைத்துள்ளது அவருடைய காட்சி கோணங்கள்.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை கச்சிதமாக கோர்த்துள்ளார் எடிட்டர் வெங்கட் ராஜன்.
சிறந்த ஒலிக்கலவை ஒரு உயர் தொழில்நுட்ப கைவினை ஆகும், இது நம்பமுடியாத ஆக்கப்பூர்வமான மிக்ஸிங் என்பது திரைப்படத்தை இசைவானதாகவும், யதார்த்தமாகவும், கூர்மையாகவும் ஒலிக்கும் வகையில் ஒவ்வொரு ஒலியின் ஆடியோ அளவைப் பொருத்தும் செயல்முறையாகும். ஒலி கலவைகள் கதைக்கு உயர் தரமான பங்களிப்பை சேர்க்கின்றன.
இசையமைப்பாளர் விஜய் சித்தார்த்தின் பின்னணி இசையும் சச்சின் மற்றும் ஹரி ஆகியோரது ஒலிக்கலவையும் சேர்ந்து படத்தை வேற லெவலுக்கு எடுத்து சென்றுள்ளது.
இசை அமைப்பாளரும், சவுண்ட் டிசைன்கள் மற்றும் ஒளிப்பதிவாளரும் தான் இந்த படத்தின் உண்மையான ஹீரோ என்பதை படத்தை பார்க்கும் போது நம்மால் உணர முடியும்.தனது சிந்தனையைத் தூண்டும் குறும்படங்களுக்காக பாராட்டுகளைப் பெற்றுள்ள இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளருமான தருண் தேஜா தனது 20 நிமிட பைலட் படத்தை அடிப்படையாகக் கொண்ட ‘அஸ்வின்ஸ்’ மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். திகில், மர்மம் மற்றும் உளவியல் பதற்றம் ஆகியவற்றின் கூறுகளை திரைக்கதையில் புகுத்தி, பேய் மற்றும் வளிமண்டல விவரிப்பு அதன் தொடர்ச்சியான அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகள், நட்சத்திர தேர்வு மற்றும் மறக்க முடியாத க்ளைமாக்ஸ் மூலம் பார்வையாளர்களை மூழ்கடிக்க வைத்துள்ளார் இயக்குனர் தருண் தேஜா. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அருமையான ஹாரர் திரில்லர் படத்தை நொடிக்கு நொடி திகிலடைய செய்யும் விதத்தில் சிறந்த தொழில் நுட்பத்தை துல்லியமாக பயன்படுத்தி படைத்த அவரது திறனை பாராட்டியே ஆக வேண்டும்.

மொத்தத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (SVCC) BVSN பிரசாத் தயாரித்திருக்கும் அஸ்வின்ஸ் ஒரு அழுத்தமான உளவியல் ஹாரர் த்ரில்லர்.