அலங்கு சினிமா விமர்சனம் : அலங்கு நட்பு மற்றும் பாசத்தை காப்பாற்ற போராடும் சர்வைவல் த்ரில்லர் | ரேட்டிங்: 3.5/5
நடிகர்கள் :
தர்மன் – குணாநிதி
மலையன் – காளி வெங்கட்
அகஸ்டின் – செம்பன் வினோத்
பிலிப் – சரத் அப்பானி
பச்சை – சவுந்தர்ராஜா
தங்கம் – ஸ்ரீரேகா
காவல் ஆய்வாளர் – சண்முகம் முத்துசாமி
சாக்கோ – ரெஜின் ரோஸ்
கருப்பு – இதயக்குமார்
சிலுவை – மாஸ்டர் அஜய்
மலர் – கொட்ரவை
ஏஞ்சல் – தீக்ஷா
முருகன் – மஞ்சுநாதன்
கான்ஸ்டபிள் தர்மலிங்கம் – ஆவுடை நாயகம்
எஸ்.ஐ. ஜார்ஜ் – அப்புனி சசி
கிளி – தீபம் பிலிபோஸ்
கந்தவேல் – அற்புதநாத்
மல்லி – கங்காதரணி
கனகன் மாமா – சக்தி
வன அதிகாரி – குமார்
உண்ணி – ஜோஃபி
தோழர் – ஆனந்த்
பள்ளி முதல்வர் – கலை
கல்வி அதிகாரி – தசரதன்
கஞ்சாகாரன் – கிரிஷ்
மலையன் மனைவி – நிரோஷா
கருப்பு மனைவி – அர்ச்சனா
தர்மன் – தீதன்
அதிகாரி – ரென்ஸி
செய்தி நிருபர் – ம.இலையமாறன்
ஊர்காரன் 1 – சரவணபுதியவன்
ஊர்காரன் 2 – மதுரவீரன்
ஊமையன் – தாமரை
தொழில்நுட்பக் கலைஞர்கள் :
தயாரிப்பு நிறுவனம் : டி.ஜி.பிலிம் கம்பெனி, மேக்னஸ் புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் : சபரிஷ், சங்கமித்ரா சௌமியா அன்புமணி
விநியோகஸ்தர் : சக்தி பிலிம் பேக்டரி பி.சக்திவேலன்
இயக்குனர் : எஸ்.பி.சக்திவேல்
இசை : அஜீஷ்
ஒளிப்பதிவு : பாண்டிக்குமார்
படத்தொகுப்பு : சான் லோக்கேஷ்
கலை இயக்குனர் : ஆனந்த்
சண்டை : தினேஷ் காசி
நிர்வாக தயாரிப்பாளர் : ஷங்கர் பாலாஜி
பத்திரிக்கை தொடர்பு : இரா.குமரேசன்
மலைவாழ் மக்களில் இருந்து முதல் தலைமுறை பட்டதாரி என்கிற கனவுடன் கல்லூரிக்குச் செல்லும் தர்மன் (குணாநிதி) எல்லா உயிர்க்கும் மதிப்பளிக்க வேண்டும் என நினைக்கும் குணம் படைத்தவன். கல்லூரியில் நடக்கும் ஏற்றத்தாழ்வுககளுக்கு குரல் கொடுத்ததால் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். கணவனை இழந்து தனி ஒரு பெண்மணியாக மகன் தர்மனை படிப்புக்காக வீட்டை அடமானம் வைத்து கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார். தர்மன் புறக்கணிக்கப்பட்ட நாயை தத்தெடுத்து காளி என்று பெயர் சூட்டி பாசத்துடன் வளர்த்து வருகிறார். இந்நிலையில் குடும்பச் சூழல் காரணமாக தாய்மாமன் மலையன் (காளி வெங்கட்) உதவியால் தன் நண்பர்களுடன் கேரளாவில் நகராட்சித் தலைவராக இருக்கும் அகஸ்டின் (செம்பன் வினோத்) ரப்பர் தோட்டத்தில் கூலி வேலைக்கு செல்கிறார். கூடவே காளியையும் தன்னுடன் அழைத்து செல்கிறார். அகஸ்டினின் ஒரே அன்பு மகள் ஏஞ்சலை (தீக்ஷா) ஒரு நாய் கடித்து விடுகிறது. நீண்ட வருடங்களுக்கு பிறகு பிறந்த ஏஞ்சல் தான் தன் உலகம் என வாழும் அகஸ்டின், மகளுக்கு ஏற்பட்ட இந்த அசாம்பாவிதத்தால் ஆத்திரமடைந்து ஒரு விபரீத முடிவு எடுக்கிறார். சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து நாய்களையும் கொல்லுமாறு தனது உதவியாளர் பிலிப்பிடம் (சரத் அப்பானி) கட்டளையிடும் போது சுற்றி இருக்கும் ஒட்டுமொத்த கிராமத்தையும் அலற வைக்கிறது. வெறி பிடித்தது போல் அடியாட்கள் நாய்கள் வேட்டையாட ஆரம்பிக்கிறார்கள். அவருடைய இரக்கமற்ற செயல்கள் தர்மன் மற்றும் அவரது தோழர்களுக்கு காளி காணாமல் போகும் போது அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. காளி கடத்தப்பட்டதை அறிந்து காளியை காப்பாத்த பிலிப்பிடம் நடக்கும் போராட்டத்தில் எதிர்பாராத விதமாக பிலிப்பின் ஒரு கை துண்டிக்கப் படுகிறது. தொடர்ந்து பதட்டங்கள் அதிகரிக்கிறது. தர்மனையும் அவரது நண்பர்களையும் வேட்டையாட அந்த கும்பல் துரத்துகிறது. அதன் பின் தர்மன் தனது செல்ல நாய் காளி மற்றும் நண்பர்களுடன், பிலிப் மற்றும் செம்பன் வினோத்திடம் இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் கிராமத்துக்குச் செல்ல முடிவு செய்கிறார்கள். இருப்பினும், அவர்கள் தப்பிக்கும் போது எதிர்கொள்ளும் பல தடைகளை எதிர்த்து ஜெயித்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
குணாநிதி பாத்திரத்திற்கு தேவையான உணர்ச்சி ஆழத்தை திறம்பட உள்வாங்கி இதயப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அம்மா தங்கமாக வரும் ஸ்ரீரேகா, செம்பன் வினோத்தின் வலதுகரமாக வரும் ஷரத் அப்பானி மற்றும் தர்மனின் நண்பர்களாக நடித்திருக்கும் மாஸ்டர் அஜய், இதயக்குமார் ஆகியோர் நேர்த்தியான நடிப்பை வழங்கி கவனம் பெறுகிறார்கள்.
காளி வெங்கட், சண்முகம் முத்துசாமி, ரெஜின் ரோஸ், சவுந்தர்ராஜா, கொட்ரவை, தீக்ஷா, மஞ்சுநாதன், ஆவுடை நாயகம், அப்புனி சசி, தீபம் பிலிபோஸ், அற்புதநாத், கங்காதரணி, சக்தி, குமார், ஜோஃபி, ஆனந்த், கலை, தசரதன், கிரிஷ், நிரோஷா, அர்ச்சனா, தீதன், ரென்ஸி, ம.இலையமாறன், சரவணபுதியவன், மதுரவீரன், தாமரை உட்ட அனைவருமே தங்களது திரை இருப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இசை – அஜீஷ், ஒளிப்பதிவு – பாண்டிக்குமார், படத்தொகுப்பு – சான் லோக்கேஷ், கலை இயக்குனர் – ஆனந்த், சண்டை – தினேஷ் காசி ஆகியோர் கடின உழைப்பு படத்தை விறுவிறுப்பாகவும், டென்ஷனுடன் இறுதிவரை நகர்த்த பெரும் பங்கு வகித்துள்ளது.
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான பிணைப்பு ஆழமாக எதிரொலிக்கும் என்பதை கதையின் அடிப்படை பதட்டத்துடன் திரைக்கதை அமைத்து தமிழ்நாடு-கேரள எல்லையின் அழகிய பின்னணியில் உணர்வுப்பூர்வமான படைப்பாக தந்துள்ளார் இயக்குனர் எஸ்.பி.சக்திவேல்.
மொத்தத்தில் டி.ஜி.பிலிம் கம்பெனி, மேக்னஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சபரிஷ், சங்கமித்ரா சௌமியா அன்புமணி இணைந்து தயாரித்திருக்கும் அலங்கு நட்பு மற்றும் பாசத்தை காப்பாற்ற போராடும் சர்வைவல் த்ரில்லர்.