அன்னபூரணி விமர்சனம் : அன்னபூரணி ஒரு தொழில்முறை சமையல் கலைஞராக வேண்டும் என்று கனவு காணும் நெஞ்சங்களின் இதயத்தைத் தூண்டும் | ரேட்டிங்: 3.5/5
நடிகர்கள் :
நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர்.
நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்கம் – நிலேஷ் கிருஷ்ணா
தயாரிப்பு – ஜீ ஸ்டுடியோஸ், NAAD Studios மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்
இசை – தமன் எஸ்;
ஒளிப்பதிவு – சத்யன் சூரியன்
எடிட்டர் – பிரவீன் ஆண்டனி
கலை ஜி துரைராஜ்
வசனங்கள் – அருள் சக்தி முருகன்
கூடுதல் திரைக்கதை – பிரசாந்த் எஸ்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – சஞ்சய் ராகவன்
நிர்வாக தயாரிப்பாளர் – லிண்டா அலெக்சாண்டர்
விளம்பர வடிவமைப்பாளர் – வெங்கி
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா – ரேகா டி ஒன்.
இயக்கம் – நிலேஷ் கிருஷ்ணா
தயாரிப்பு – ஜீ ஸ்டுடியோஸ், NAAD Studios மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்
இசை – தமன் எஸ்;
ஒளிப்பதிவு – சத்யன் சூரியன்
எடிட்டர் – பிரவீன் ஆண்டனி
கலை ஜி துரைராஜ்
வசனங்கள் – அருள் சக்தி முருகன்
கூடுதல் திரைக்கதை – பிரசாந்த் எஸ்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – சஞ்சய் ராகவன்
நிர்வாக தயாரிப்பாளர் – லிண்டா அலெக்சாண்டர்
விளம்பர வடிவமைப்பாளர் – வெங்கி
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா – ரேகா டி ஒன்.
ஸ்ரீரங்கத்து ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்தவர் அன்னபூரணி (நயன்தாரா) பிறப்பிலேயே சுவைகளை மிக நுணுக்கமாக உணரக்கூடிய திறனுடன் பெற்றவர். அவரின் தந்தை ரங்கராஜன் (அச்யுத் குமார்) பொறியியல் பட்டதாரியாக இருந்தும், ரயில்வே வேலையை விட்டுவிட்டு ரங்கநாதனுக்கு சேவை செய்வதற்காக கோவில் பிரசாதம் சமைப்பவராகப் சேவை செய்கிறார். அன்னபூரணி கண்ணைக் கட்டிக் கொண்டு முகர்ந்து, சாப்பிடும், உணவின் பெயர் சொல்வார். அந்த உணவை அதே சுவையுடன் சமைத்தும் கொடுப்பார். அவருடைய ரோல் மாடல் இந்தியாவின் சிறந்த செஃப்பாக திகழும் ஆனந்த் சுந்தர்ராஜன் (சத்யராஜ்). அன்னபூரணிக்கு ஆனந்த் சுந்தர்ராஜன் போல இந்தியாவின் சிறந்த ‘கார்ப்பரேட் செஃப்’ ஆக வேண்டும் என்பது கனவு. இதனால் அன்னபூரணி சமையல் சார்ந்த பட்டப்படிப்பில் சேர ஆர்வம் கொள்ள, அவரின் தந்தை ரங்கராஜன் அதனைத் தடுக்கிறார். காரணம் அன்னபூரணி பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர். செஃப் ஆக வேண்டும் என்றால், அசைவம் சமைக்க வேண்டும், சாப்பிட வேண்டும், இறைச்சிக்கு அருகில் இருப்பதே பாவம் எனக் கருதி மகளின் கனவுக்கு தடை போடுகிறார். மேலும் ஸ்ரீரங்கம் கோவிலில் பிரசாதம் சமைக்கும் ரங்கநாதனின் மகள் அசைவம் சமைப்பார் என்றால் ஊர் என்ன சொல்லும் என்று கூறி எதிர்ப்பு தெரிவிக்கிறார். இருந்தாலும், தான் நினைத்தது போலவே எம்.பி.ஏ படிக்கிறேன் எனப் பொய் சொல்லி ஹோட்டல் மேனேஜ்மன்ட் படிப்பில் சேர்கிறார் அன்னபூரணி. எதிர்பாராத சூழலில் ரங்கநாதன் தன் மகள் ஹோட்டல் மேனேஜ்மன்ட் படிக்கிறாள் என்பதை நேரில் காண்கிறார். அதன் பின் படிப்பை தொடர்வதை நிறுத்தி திருமண ஏற்பாடு நடக்கிறது. அன்னபூரணி தன் நண்பன் ஜெய்யின் கட்டாயத்தின் பேரில் தனது கனவு நிறைவேற வீட்டில் இருந்து வெளியேறி சென்னை சென்று தான் நினைத்தது போலவே ஒரு சில கஷ்டங்களை சமாளித்து ஆனந்த் சுந்தர்ராஜன் தலைமையில் நடக்கும் ஹோட்டலில் செஃப்வாக சேர்கிறார். அதன் பிறகு ஹோட்டலில் நடக்கும் ஒரு விபத்தில், அன்னபூரணிக்கு பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. அது இந்தியாவின் சிறந்த ‘கார்ப்பரேட் செஃப்’ ஆக வேண்டும் என்ற அவரது கனவை பாதிக்கிறது. அதன் பிறகு அவர் பலவிதமான சவால்கள் சந்திக்கிறார். அது என்ன? அன்னபூரணிக்கு ஏற்பட்டது விபத்தா அல்லது சதி திட்டமா? அவரது கனவு நிறைவேறியதா? தந்தை ரங்கராஜன் கௌரவம் என்ன ஆயிற்று? இவை அனைத்திற்கும் விடை சொல்வது தான் படத்தின் மீதிக்கதை.

ரங்கநாதருக்கு சேவை செய்வதற்காக கோயிலில் பிரசாதம் சமைப்பவராகப் ஆச்சார பிராமணரும் அன்னபூரணியின் தந்தை ரங்கராஜன் கதாபாத்திரத்தில் அச்யுத் குமார் கச்சிதமாக பொருந்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார். அவருக்கு டப்பிங் பேசியவர் ஜெயபிரகாஷ் குரல் அந்த கதாபாத்திரத்திற்கு ஆழம் சேர்த்துள்ளது.
சத்யராஜ், ஜெய், இருவரும் அன்னபூரணியை ஊக்குவிக்கும் கதாபாத்திரங்களாக குறைவான காட்சிகளில் தோன்றினாலும் மனதில் நிற்கிறார்கள்.
அன்னபூரணி மீது பொறாமை கொண்ட ஒரு செஃப்பாகவும் கதையின் முக்கிய வில்லனாக கார்த்திக்குமார் கவனம் பெறுகிறார்.
கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, குமாரி சச்சு ரேணுகா, சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட அனைத்து நடிகர்கள் உறுதியான ஆதரவு வழங்கி திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு மற்றும் தமன் எஸ் இன் இசை, பின்னணி இசை அன்னபூரணியின் கனவையும், கதையின் ஓட்டத்தையும் முழுமைப்படுத்துகிறது,
பிரவீன் ஆண்டனி விறுவிறுப்பான படத்தொகுப்பை தந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படங்களும் வாழ்வைப் பற்றியோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றியோ அல்லது ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி பேசும். ஒரு தொழில்முறை சமையல் கலைஞராக வேண்டும் என்ற தனது கனவை துணிச்சலுடன் தொடரும் அன்னபூரணி என்ற கதாபாத்திரத்தின் மூலம் நகைச்சுவை, உணர்ச்சி, சவால்கள் மற்றும் நெகிழ்ச்சி ஆகியவற்றை பாரம்பரியம், அபிலாஷை மற்றும் சமையல் கலை ஆகியவற்றின் கூறுகளை புத்திசாலித்தனமாக திரைக்கதையில் அமைத்து வாழ்க்கை, சமூகம் என இரண்டையும் ஒருசேர பேசியுள்ளார் முயன்றிருக்கிறார் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா.
மொத்தத்தில் ஜீ ஸ்டுடியோஸ், NAAD Studios மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் அன்னபூரணி ஒரு தொழில்முறை சமையல் கலைஞராக வேண்டும் என்று கனவு காணும் நெஞ்சங்களின் இதயத்தைத் தூண்டும்.