அந்தகன் சினிமா விமர்சனம் : அந்தகன் மெல்லிய நகைச்சுவையுடன் கூடிய ஒரு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் | ரேட்டிங்: 4/5
தியாகராஜன் இயக்கத்தில் ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’.
நடிகர்கள்: பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா, லீலா சாம்சன், பூவையார், செம்மலர் அன்னம், மோகன் வைத்யா, பெசன்ட் ரவி, ஆதேஷ் பாலா, லஷ்மி பிரதீப்.
தொழில்நுட்ப கலைஞர்கள்: ரவி யாதவ் – ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணன் – இசை, செந்தில் ராகவன் – கலை இயக்கம், சதீஷ் சூர்யா – படத்தொகுப்பு, வசனம் பட்டுக்கோட்டை பிரபாகர்.
ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் திருமதி சாந்தி தியாகராஜன் தயாரித்திருக்கிறார், பிரீத்தி தியாகராஜன் வழங்குகிறார்.
மக்கள் தொடர்பு -நிகில்முருகன்.
பாண்டிச்சேரியில் வசித்துவரும் கிருஷ் (பிரஷாந்த்), ஒரு திறமையான பியானோ கலைஞர், அவர் பார்வையற்றவராக நடிக்கிறார், ஏனெனில் அது அவரது கலையை மேம்படுத்த உதவும் என்று அவர் கருதுகிறார். லண்டனுக்குச் சென்று பெரிய இசைக் கலைஞர் ஆக வேண்டும் என்பது கனவு. எதிர்பாராத விபத்து ஒன்றில், ஜூலியுடன் (பிரியா ஆனந்த்) நட்பாகி, அவரது ரெஸ்ட்ரோ பாரில் க்ரிஷுக்கு பியானோ வாசிக்கும் பணிக்குச் செல்கிறார். அந்த ஊதியத்தை வைத்து லண்டன் செல்ல திட்டமிடுகிறார். இந்நிலையில், அவ்உணவகத்தில், உணவருந்தும் முன்னாள் கதாநாயகருமான கார்த்திக்கிற்கு (கார்த்திக்) கிருஷ்ஷின் இசை திறன் பிடித்துப்போகிறது. மேலும் அவரது குரலால் கார்த்திக்கை அடையாளம் காண முடிந்தது கண்டு நெகிழ்கிறார். அதனால், மறுநாள் தன் திருமண நாள் என்பதால் தன் வீட்டிற்கு வந்து தன் மனைவி சிமி (சிம்ரன்) முன்பு பிரத்யேகமாக இசைக்க வேண்டும் என்று கிருஷ் இடம் கோரிக்கை வைத்து முன்பணம் கொடுத்து விட்டு செல்கிறார். அதே இரவில், அடுத்த நாள் வேலை நிமித்தமாக பெங்களூரு செல்வதாக சிமியிடம் கூறுகிறார் கார்த்திக். சிமியை ஆச்சர்ய படுத்துவதும், பிறகு கிருஷ்ஷின் இசை நிகழ்ச்சியை நடத்துவதும் அவரது திட்டம் என்பதால் அவர் வேண்டுமென்றே பொய் சொல்கிறார். கார்த்திக்கின் அழைப்பை ஏற்று, அவர் வீட்டுக்குச் செல்லும் கிருஷ், வீட்டில் பியானோ இசைக்கும் போது கார்த்திக் கொல்லப்பட்டு இருப்பதும், மேலும் அங்கே மூன்றாம் மனிதன் ஒருவன் இருப்பதை காண்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து கார்த்திக் உடலை அப்புறப்படுத்துவதைக் காண்கிறார்.அங்கே ஒரு பெரிய பிரச்சனையில் தேவையில்லாமல் மாட்டிக்கொள்ளும் கிருஷ் குற்றவாளிகள் பிடியில் இருந்து தப்பிக்க தனது குறைபாடு அவருக்கு உதவப் போவதில்லை என்பதை அவர் விரைவில் கண்டுபிடிக்கிறார். அதிலிருந்து தப்பிக்க கிருஷ் என்ன செய்தார், க்ரிஷின் இசை கனவு கலைந்ததா, உயிர்பெறச் செய்ததா, என்பதே இயக்குநர் தியாகராஜனின் ‘அந்தகன்’.
முக்கிய வேடத்தில் பிரசாந்த் சித்தரிக்கும் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் எமோஷனல், பதற்றம், பயம், ஆக்ஷன், காதல், வஞ்சம் என சிரமமில்லாமல் எளிமையாக காண உடல்மொழியை நெருக்கமாகவே கொண்டு வந்திருக்கிறார் பிரஷாந்த். அதே வேளையில், இதுவரை அவரது வாழ்க்கையில் மிகவும் உறுதியான பாத்திரம். இது அவரது பன்முகத்தன்மையை நிரூபிக்கிறது. ஆரவாரத்துடன் மீண்டும் நடிக்க வரவேற்கிறோம் டாப் ஸ்டார்.
இந்த ரேசிங் எட்ஜ் மையப்புள்ளி சிம்ரன். ஒவ்வொரு திருப்பத்திலும் முரண்பட்ட பாத்திரத்தில் வசீகரத்துடன் மிரட்டி, ஒரு சிறந்த நடிகை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார்.
கார்த்திக் ஒரு மறக்க முடியாத தோற்றத்தை உருவாக்குகிறார்.
பிரியா ஆனந்த் மிகக் குறைவான இருப்பை நேர்த்தியுடன் செய்துள்ளார்.
போலீஸ் அதிகாரியாக சமுத்திரக்கனி திருப்புமுனையை ஏற்படுத்தும் முக்கியமான வில்லன் பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவர் கண்களால் மிரட்டும் போது அவரது உடல் அமைப்பு மற்றும் பயத்தில் நடுங்கும் போது உடல் மொழியும், மனைவியிடம் மாட்டிக் கொள்ளும் சூழலில் மிகவும் புத்திசாலித்தனமாக தனது கியரை மாற்றி சிறப்பாகக் கையாண்டு அசத்தி உள்ளார்.
ஒரு ஊழல் டாக்டர் ஸ்வாமியாக கே.எஸ்.ரவிக்குமார், திருட்டுத்தனமாக குறி சொல்லி லாட்டரி சீட்டு விற்கும் ஊர்வசி, அவரது கூட்டாளி ஆட்டோ டிரைவர் யோகி பாபு, மூவரும் சேர்ந்து அவர்கள் காட்சிகளில் நகைச்சுவை கலந்த வில்லத்தனம் கூடுதல் மசாலா சேர்க்கிறது.
சமுத்திரகனி மனைவியாக வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா, லீலா சாம்சன், பூவையார், செம்மலர் அன்னம், மோகன் வைத்யா, பெசன்ட் ரவி, ஆதேஷ் பாலா, லஷ்மி பிரதீப் ஆகியோர் தங்கள் இருப்பை நன்றாக பதிவு செய்துள்ளனர்.
இசையின் வழியாக நகரும் கதையில் சந்தோஷ் நாராயணனின் இசை மெல்லிசையாகவும், பின்னணி இசை கதைக்கு ஏற்றதாகவும் மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது மற்றும் பல காட்சிகளில் தாக்கத்தை அதிகரிக்கிறது.
ரவி யாதவ் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு வசீகர உணர்வைத் தருகிறது.
பல திருப்பங்களுடன் கதையோடு பயணிக்க விறுவிறுப்புடன் எடிட் செய்துள்ளார் படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா.
கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ திருப்பம் நிறைந்த விறுவிறுப்பான கதை என்பதால் தமிழ் ரசிகர்களுக்கு போரடிக்காமல் இருக்க திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டி, நடிகர்கள் தேர்வு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வில் அதிக கவனம் செலுத்தி தேர்ந்தெடுத்து ரீமேட் படமாக கொடுத்துள்ளார் இயக்குனரும் நடிகருமான தியாகராஜன்.
மொத்தத்தில் ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் திருமதி சாந்தி தியாகராஜன் தயாரித்து, பிரீத்தி தியாகராஜன் வழங்கும் அந்தகன் மெல்லிய நகைச்சுவையுடன் கூடிய ஒரு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர்.