அக்கரன் சினிமா விமர்சனம் : அக்கரன் பாசமிகு ஒரு அன்பான தந்தையின் பழிவாங்கும் நாடகம் | ரேட்டிங்: 2.5/5

0
358

அக்கரன் சினிமா விமர்சனம் : அக்கரன் பாசமிகு ஒரு அன்பான தந்தையின் பழிவாங்கும் நாடகம் | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள் :
எம்.எஸ்.பாஸ்கர் – வீரபாண்டி
கபாலி விஸ்வந்த் – சிவா
நமோ நாராயணா – பரந்தாமன்
வெண்பா – தேவி
ஆகாஷ் பிரேம்குமார் – அர்ஜுன்
பிரியா தர்ஷினி – பிரியா
கார்த்திக் சந்திரசேகர் – செல்வம்
தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பாளர் – கே.கே.டி
தயாரிப்பு நிறுவனம் – குன்றம் புரொடக்ஷன்ஸ்
இயக்குனர் – அருண் கே பிரசாத்
ஒளிப்பதிவு – எம்.ஏ.ஆனந்த்
இசை – எஸ்.ஆர்.ஹரி
எடிட்டர் – பி.மணிகண்டன்
ஸ்டண்ட் – சரவெடி சரவணன்
தயாரிப்பு நிர்வாகி – சொக்கலிங்கம்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
தமிழ் சினிமாஸ் மூலம் தமிழ்நாடு திரையரங்கு வெளியீடு (தனபால் கணேஷ் மற்றும் ஷிவானி செந்தில்)
வீரபாண்டி (எம்.எஸ்.பாஸ்கர்) தேவி (வெண்பா) மற்றும் பிரியா (பிரியதர்ஷினி) என்ற இரு மகள்களுடன் மதுரையில் வசிக்கிறார். மூத்த மகள் வெண்பாவுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். ஆனால் அவருக்கு ஏற்கனவே கபாலி விஸ்வந்துடன் திருமணப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருந்த நிலையில், ஏதோ காரணத்துக்காக சிறை சென்று வந்ததால் அந்த திருமணத்துக்கு வீரபாண்டி எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால் வெண்பா அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருக்கிறார். இளைய மகள் பிரியதர்ஷினி மருத்துவம் படிக்க, ஒரு முன்னாள் எம்.பி.யின் மைத்துனரால் நடத்தப்படும் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்குத் தயாராகி கொண்டிருக்கும் போது, பயிற்சி மையத்தில் மறைமுகமாக மிரட்டி பணம் பறிக்கும் திட்டத்தில் ஈடுபட இந்த அப்பட்டமான மோசடியை பிரியா எதிர்க்கிறார், அடுத்து அந்த பயிற்சி மையத்தில் இருந்து அந்த சம்பவத்திற்குப் பிறகு பிரியா காணாமல் போகிறார். விசாரணையின் போது அவள் கொலை செய்யப்பட்டது தெரிய வருகிறது. அதைத் தொடர்ந்து அவளது வயதான அப்பா வீரபாண்டி உண்மையை கண்டறிந்து தனது பாணியில் கொடூரமாக சித்திரவதை செய்து பழிவாங்கும் போது சஸ்பென்சான திருப்பத்துடன் கதை முடிகிறது. அது என்ன என்பதை விவரமான கதையை வெள்ளித்திரையில் காண்க.
எம்.எஸ்.பாஸ்கர் பாசமிகு தந்தையாகவும், வில்லன்களை பழி வாங்கும் போது அதிரடி ஆக்சன் ஹீரோவாகவும், இரண்டு விதமான நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
கபாலி விஸ்வந்த் (சிவாவாக), நமோ நாராயணா (பரந்தாமனாக), வெண்பா (மூத்த மகள் தேவியாக), பிரியா தர்ஷினி (இளையமகள் பிரியாவாக), வில்லன்களாக கார்த்திக் சந்திரசேகர் (ஒரு கவுன்சிலராகவும் பினாமியாகவும் செல்வம்) மற்றும் அகாஷ் பிரேம்குமார் (அர்ஜுனாக) உட்பட அனைத்து நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களை நேர்த்தியாக கையாண்டு சிறப்பான நடிப்பை பதிவு செய்துள்ளனர்.
ஒளிப்பதிவு – எம்.ஏ.ஆனந்த், இசை – எஸ்.ஆர்.ஹரி, எடிட்டர் – பி.மணிகண்டன், ஸ்டண்ட் – சரவெடி சரவணன் உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் த்ரில்லர் ஜானருக்கு என்ன தேவையோ அதை ஓர் அளவுக்கு பூர்த்தி செய்து  இருக்கிறார்கள்.
த்ரில்லர் ஜானர் கதை களத்தில், கொலை குறித்து வில்லன்கள் இருவரும் கூறும் வெவ்வேறு வெர்ஷன்கள் நம்பகத்தன்மையுடன் நகரும் வகையில் திரைக்கதை அமைத்து கடைசியில் ஒரு ட்விஸ்ட்டுடன் படைத்துள்ளார் அறிமுக இயக்குனர் அருண் கே பிரசாத்.
மொத்தத்தில் குன்றம் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.கே.டி தயாரித்திருக்கும் அக்கரன் பாசமிகு ஒரு அன்பான தந்தையின் பழிவாங்கும் நாடகம்.