ஃபேமலி படம் சினிமா விமர்சனம் : ஃபேமிலி படம் – படம் நிச்சயமாக உங்களை ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கும் | ரேட்டிங்: 3/5
யு.கே. கிரியேஷன்ஸ் சார்பில் கே.பாலாஜி தயாரித்திருக்கும் ஃபேமிலி படம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் செல்வகுமார் திருமாறன்.
இதில் தமிழாக உதய் கார்த்திக், சரத்குமாராக விவேக் பிரசன்னா, யமுனாவாக சுபிக்ஷா காயாரோஹணம், விஜியாக ஸ்ரீPஜா ரவி, பார்த்திபன் குமார் பார்த்தியாக, ஏழுமலையாக மோகனசுந்தரம், டி.கே.சத்யனாக அரவிந்த் ஜானகிராமன், பிரேமாவாக ஆர்ஜே பிரியங்கா, தவகுமாராக சந்தோஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்: ஒளிப்பதிவு – மெய்யேந்திரன், இசை – அன்வீ, எடிட்டர்- சுதர்சன் பின்னணி இசை – அஜேஷ்ஆர்ட் – கேபி நந்து ஸ்டண்ட் – சுகன் ஆடை வடிவமைப்பாளர் – போர்ச்செழியன் பாடலாசிரியர் – அஹமத ஷ்யாம், அன்வீ, பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்.
தமிழ் (உதய கார்த்திக்) ஒரு ஆர்வமுள்ள திரைப்பட இயக்குனர். அவர் இயக்குனராகும் கனவுகளுடன் வாழ்கிறார். தமிழின் தாத்தா ஏழுமலை (மோகன்சுந்தரம்), அவரது அப்பா தவகுமார் (சந்தோஷ்), அம்மா விஜி (ஸ்ரீஜா ரவி), மூத்த சகோதரர்கள் சரத்குமார் (விவேக் பிரசன்னா) ஒரு வழக்கறிஞர், பார்த்தி (பார்த்திபன் குமார்) ஐடி ஊழியர் என ஒரு அன்பான குடும்பம். அவர்கள் தமிழின் ஆர்வத்தைப் நன்கு புரிந்து அவருடைய இயக்குனராகும் கனவுகளை ஆதரிக்கிறார்கள். தமிழ் பல தயாரிப்பாளர்களிடம் கதை கூறியும் அதை பலரும் அவரை அலக்கழித்ததுடன், அவருடைய கதையை கேட்க்க யாரும் தயாரிக்க முன் வரவில்லை. ஒரு நாள் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் இவரது கதையை கேட்டு அந்த கதை அவருக்கு பிடிக்க படத்தை தயாரிக்க முன் வருகிறார். மகிழ்ச்சியில் பட வேலைகளை தொடங்கும் தமிழுக்கு சில பிரச்சனைகள் வருவதோடு, அந்த தயாரிப்பாளரின் சில சூழ்ச்சிகளால் அவரது வாய்ப்பு நிராகரிக்கப்படுவதோடு, அவரது கதையும் திருடப்படுகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பும் தமிழ், தனது வாழ்க்கையே பறிபோய்விட்டதை நினைத்து மனவேதனை படுகிறார். இந்நிலையில், தங்கள் இளைய சகோதரரின் படைப்பு அபிலாஷைகளால் ஈர்க்கப்பட்டு, அவரது சகோதரர்கள் சரத்குமார் மற்றும் பார்த்தி, தமிழின் கனவை நிறைவேற்ற அதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்கிறார்கள். மனம் தளராத சரத்குமார் மற்றும் பார்த்தி புதிய ஸ்கிரிப்டை எழுத தமிழை தூண்டி, படத்தை தாங்களே தயாரிப்பதாக உறுதியளிக்கின்றனர். ஓட்டு மொத்த குடும்பம் தங்கள் சொந்த திரைப்படத்தை உருவாக்கும் ஒரு லட்சியத் திட்டத்தில் இறங்குகிறது. இவர்களது அப்பா தனது பிரியமான உடற்பயிற்சி கூடத்தை விற்று, மகனின் வெள்ளித்திரை லட்சியத்திற்காக அம்மா தனது சிறிய நிலத்தை விற்றும், தமிழின் காதலி யமுனா (சுபிக்ஷா) சில நகைகளை அடகு வைத்தும் படம் தயாரிப்புக்கு உதவுகிறார்கள். அதன் பின் சில பிரச்சனைகள் மற்றும் சவால்களை இவர்கள் சந்திக்க நேர்கிறது. அது என்ன? தமிழின் இயக்குனர் கனவு நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
தமிழ் கதாபாத்திரத்தில் உதய் கார்த்திக், பட வாய்ப்புக்காக பல போராட்டங்களை சந்திக்கும் இளைஞராக நடிப்பில் அசத்தியுள்ளார். சரத்குமாராக விவேக் பிரசன்னாவும், பார்த்தியாக பார்த்திபன் குமாரும் கச்சிதமான நடிப்புடன் குடும்ப இயக்கவியலில் ஆழத்தையும் நகைச்சுவையையும் கொண்டு வருகிறார்கள். பட்த்தில் உதய் கார்த்திக், விவேக் பிரசன்னா, பார்த்திபன் குமார் ஆகியோருக்கிடையே நல்ல கெமிஸ்ட்ரி ஓர்க் அவுட் ஆகி உள்ளது.
தாத்தா ஏழுமலையாக மோகன்சுந்தரம், அப்பா தவகுமாராக சந்தோஷ், அம்மா விஜியாக ஸ்ரீஜா ரவி, காதலி யமுனாவாக சுபிக்ஷா, டி.கே.சத்யனாக அரவிந்த் ஜானகிராமன், பிரேமாவாக ஆர்ஜே பிரியங்கா, தவகுமாராக சந்தோஷ் உட்பட அனைத்து நடிகர்களும் தங்களுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நேர்த்தியான நடிப்பை வழங்கி உள்ளனர்.
குடும்பத்தின் ஒவ்வொரு தருணத்தையும் உணர்ச்சிகரமான உச்சகட்டமாக மாற்றியதில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன், இசையமைப்பாளர் அன்வீ, எடிட்டர் சுதர்சன், பின்னணி இசை அமைத்த அஜேஷ்ஆர்ட் மற்றும் கேபி நந்து, ஸ்டண்ட் இயக்குனர் சுகன், ஆடை வடிவமைப்பாளர் போர்ச்செழியன், பாடலாசிரியர்கள் அஹமத ஷ்யாம், அன்வீ, ஆகியோரின் பங்களிப்பு பெரும் பங்கு வகிக்கிறது.
அனைத்து இயக்குனர்களின் திரைப்படக் கனவுகளைப் பற்றியும், மனித உறவுகளை மையமாகக் கொண்ட கதையை, குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் எப்படி ஒரு தனிப்பட்ட வளைவைக் கொண்டு போராடுகிறார்கள் என்பதை முக்கியமான சம்பவங்களுடன் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் செல்வகுமார் திருமாறன்.
மொத்தத்தில் யு.கே. கிரியேஷன்ஸ் சார்பில் கே.பாலாஜி தயாரித்திருக்கும் ஃபேமிலி படம் – படம் நிச்சயமாக உங்களை ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கும்.