ஃபயர் சினிமா விமர்சனம் : ‘ஃபயர்’ பெண்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இன்வெஸ்டிகேஷன் க்ரைம் திரில்லர் | ரேட்டிங்: 3/5
நடிகர்கள் :
பாலாஜி முருகதாஸ் – காசி
சாந்தினி தமிழரசன் – துர்கா
சாக்ஷி அகர்வால் – பிரியா
ரச்சிதா மகாலட்சுமி – மீனாட்சி
காயத்ரி ஷான் – அனிதா
ஜேஎஸ்கே – சரவணன்
சிங்கம்புலி – திருமூர்த்தி
எஸ்.கே.ஜீவா – ஆறுமுகம்
சுரேஷ் சக்ரவர்த்தி – கர்ணன்
அனு விக்னேஷ் – தமிழ்
குழந்தை மனோஜ் – விஜயகுமார்
தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பு : ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன்
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் – ஜே.எஸ்.கே
வசனம் – எஸ்.கே.ஜீவா
ஒளிப்பதிவு- சதீஷ்.ஜி
எடிட்டர் – சிஎஸ் பிரேம்குமார்
ஸ்டண்ட் – தினேஷ் காசி
கலை இயக்குனர் – சுசீதேவராஜ்
நடனம் – மானஸ்
இசையமைப்பாளர் – டி.கே
பாடலாசிரியர் – மதுர கவி (டும் டும் கல்யாணம்)
பாடலாசிரியர் – ரா (மெது மெதுவாய்)
பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்
காசி (பாலாஜி முருகதாஸ்) என்ற ஒரு பிசியோதெரபிஸ்ட் காணாமல் போகிறார். தனது மகன் காசி காணவில்லை என்று அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளிக்கிறார்கள். இன்ஸ்பெக்டர் சரவணன் (ஜே எஸ் கே.) போலீஸ் விசாரணையை துவங்குகிறார். அவருடைய க்ளீனிக் மற்றும் வீட்டில் சோதனை செய்து லேப்டாப், மொபைல் போன்களை மட்டும் அடுத்த கட்ட விசாரணைக்காக எடுத்துச் செல்கிறார். அதன் மூலம் ஏதேனும் துப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் காசியை பற்றி அவர் சம்மந்தப்பட்டவர்களிட்ம் தீவிரமாக விசாரணை நடத்தும் போதும் அவரைப்பற்றி அனைவரிடம் இருந்து நல்லபடியே தகவல்கள் கிடைக்கிறது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த பல்வேறு நபர்கள் விசாரணையில் கொண்டு வரப்படுகிறார்கள். அவர்களிடமிருந்தும் அவரைப்பற்றி நல்லபடியே தகவல்கள் கிடைக்கிறது. இதனிடையே எம்.எல்.ஏ திருமூர்த்தி (சிங்கம் புலி) இன்ஸ்பெக்டர் சரவணனிடம் தொலைபேசி மூலம் காசி பற்றிய விசாரணையில் கிடைக்கும் முதல் தகவலை தன்னிடம் தான் முதலில் கூற வேண்டும் என்று மிரட்டும் தொணியில் எச்சரிக்கை விடுகிறார். காணாமல் போன காசியை பற்றி எந்த துப்பும் கிடைக்காததால் குழப்பத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணையை மீண்டும் வேறு கோணத்தில் அணுக காணாமல் போன காசியின் மர்மத்தில் தொடர்புடைய நபர்களிடமிருந்து அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் கிடைக்கிறது. ஆனால் காசி என்ன ஆனார் என்று தெரியவில்லை. இதனிடையே காசியை தான்தான் கொலை செய்ததாக பண்ணை பங்களாவில் காவலாளியாக வேலை பார்க்கும் முதியவர் ஒருவர் போலீஸிடம் சரணடைகிறார். அதே நேரத்தில் தங்கள் மகன் உயிரோட இருப்பதாகவும் அவன் தங்களிடம் போனில் பேசியதாகவும் காசியின் பெற்றோர் போலீஸிடம் கூறுகின்றனர். காணாமல் போன காசி என்ன ஆனார்? அவரது மர்மமான பின்னணி என்ன? எம்.எல்.ஏ திருமூர்த்திக்கும் காசிக்கும் என் தொடர்பு? இன்ஸ்பெக்டர் சரவணனிடம் கிடைக்கும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் ஆதாரங்கள் என்ன? விசாரணையின் முடிவில் அவருக்கு என்ன நடந்தது? அவர் காணாமல் போனாரா? அல்லது அவர் கொலை செய்யப்பட்டாரா? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதுடன், க்ளைமேக்ஸில் யாரும் எதிர்பார்க்காத திருப்பத்துடன் மர்மத்தை உடைக்கிறது படத்தின் மீதிக் கதை.
இளம் பெண்களை தன் காதல் வலையில் சிக்க வைத்து ஏமாற்றி பின் அவர்களின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் பறிக்கும் பிசியோதெரபிஸ்ட் காசி கதாபாத்திரத்தில் பாலாஜி முருகதாஸ் வில்லனாக நடித்துள்ளார். ஆனால் அவருடைய திடகாத்திரமான உடலமைப்பு இருப்பது போல் வில்லத்தனத்தில் அவரது உடல் மொழி பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் கதாபாத்திரத்தில் ஜே எஸ் கே, கதையின் நாயகனாக புலன் விசாரணையின் போது அவரது முகவெளிப்படுகளில் மிடுக்கான போலீஸின் தோனி சற்று குறைவாகவே இருக்கிறது.
படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், ரச்சிதா மகாலட்சுமி மற்றும் காயத்ரி ஷான் ஆகியோர் தங்களை அறியாமல் உணர்ச்சி வசப்பட்டு ஏமாறும் பெண்களாக கவர்ச்சி கலந்த அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். திரைக்கதைக்கு வலு சேர்க்க படுக்கை அறைக்காட்சியில் நெருக்கமாக நடித்த அவர்களின் துணிச்சலை பாராட்ட வேண்டும்.
சிங்கம்புலி, எஸ்.கே.ஜீவா, சுரேஷ் சக்ரவர்த்தி, அனு விக்னேஷ், குழந்தை மனோஜ் உட்பட அனைத்து துணை கதாபாத்திரங்கள் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு விறுவிறுப்பை கூட்டி உள்ளனர்.
வசனம் – எஸ்.கே.ஜீவா, ஒளிப்பதிவு- சதீஷ்.ஜி, எடிட்டர் – சிஎஸ் பிரேம்குமார், ஸ்டண்ட் – தினேஷ் காசி, கலை இயக்குனர் – சுசீதேவராஜ் உட்பட அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒரு முழுநீள புலனாய்வு திரில்லர் படத்துக்கான தரமான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
கடந்த காலத்தில் தமிழ்நாட்டையே உலுக்கிய பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. பல இளம் பெண்கள் காதலித்து ஏமாற்றப்பட்டு, அவர்களின் தனிப்பட்ட வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் பறிக்கப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் இன்றும் தொடர்கின்றன. இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜே.எஸ்.கே., தொடக்கக் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை நான்கு பெண்களைப் பற்றிய ஒரு கதையை வழங்கியுள்ளார். இந்த சமூகத்தில் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் போது அவர்கள் எவ்வாறு விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதைக் சுட்டிக்காட்டி, க்ளைமேக்ஸில் யாரும் எதிர்பார்க்காத திருப்பத்துடன் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து இயக்குனராக முத்திரை பதித்துள்ளார் ஜே.எஸ்.கே.
மொத்தத்தில் ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள ஃபயர் பெண்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இன்வெஸ்டிகேஷன் க்ரைம் திரில்லர்.