OTT-யில் நேரடியாக வெளியாகும் ராகவா லாரன்ஸின் அடுத்த படம்

0

OTT-யில் நேரடியாக வெளியாகும் ராகவா லாரன்ஸின் அடுத்த படம்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்களை குறி வைக்கும் ஓடிடி தளங்கள் அவற்றை கைப்பற்றி நேரடியாக ரிலீஸ் செய்து வருகின்றன. தமிழில் ’பொன்மகள் வந்தாள்’ ’பெண்குயின்’ ஆகிய திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் பாலிவுட் உட்பட பல மொழிகளிலும் பல முன்னணி நடிகர் நடிகைகளின் திரைப்படங்கள் ஒடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் ஆகி வருகிறது.
2011-ம் ஆண்டு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான படம் லக்‌ஷ்மி பாம் என்ற பெயரில் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அக்‌ஷ்ய்குமார் நாயகனாகவும், கியாரா அத்வானி நாயகியாகவும் நடித்துள்ளார்கள். இந்தப் படம் மே 22-ம் தேதி திரைக்கு வருவதாக இருந்த நிலையில், தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.