விஜய்யின் 66-வது படத்தை இயக்கும் பிரபல தெலுங்கு பட இயக்குநர் வம்சி

0
46

விஜய்யின் 66-வது படத்தை இயக்கும் பிரபல தெலுங்கு பட இயக்குநர் வம்சி

நடிகர் விஜய்யின் 66 வது படத்தை தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தோழா’ படத்தை இயக்கிய இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்க உள்ளார். தெலுங்கு ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்தத்தகவலை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறும்போது, ‘’நான் விஜய் படத்தை இயக்க இருப்பது உண்மைதான். இதனை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். படத்தை தில்ராஜூ தயாரிக்கிறார். தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் முடிவடைந்த பின்னர், விஜய் 66 படத்திற்கான பணிகள் தொடங்கும் என்றும் படத்தில் பணிபுரியும் கலைஞர்களின் விவரம் ஊரடங்கிற்கு பின்னர் அறிவிக்கப்படும், நான் இதுவரை எடுத்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் விஜய் படம் தயாராகிறது’’ என்றும் அவர் கூறினார்.