NEPOTISM: ‘இவர்கள்தான் ஊக்குவிக்கிறார்கள்..’ – ராம் சரண் குறித்து டோலிவுட்டில் பரபரப்பு ஏற்படுத்திய நானியின் கருத்து!
தெலுங்கில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் நானி. இவர் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான அஷ்ட சம்மா என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். முதல் படம் இவருக்கு ஒரு பெயரை பெற்றுக்கொடுக்க தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
தமிழில் இவர் வெப்பம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘ஈகா’ என்ற தெலுங்கு படம் தமிழில் ‘நான் ஈ’ என்ற பெயரில் வெளியானது. நானிக்கு இது மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுக்கவே தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
425-க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ள இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஷ்யாம் சிங்கா ராய்’ படம் ஹிட் கொடுத்தது. தொடர்ந்து ‘அன்டே சுந்தரநிக்கி’ என்ற படமும் வெளியானது. எதிர்பார்த்த அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ஹிட் அடித்தது. தொடர்ந்து தற்போது கைவசம் 4 படங்கள் வைத்துள்ளார்.
இந்த நிலையில் நானியும், பாகுபலி பட வில்லன் ராணா டகுபதியும் தெலுங்கில் ஒளிபரப்பாகும் ‘நிஜம் வித் ஸ்மிதா’ என்ற ஷோவில் கலந்துகொண்டனர். அப்போது நெறியாளர் இவர்களிடம் கேள்வி கேட்டார். அதற்கு இரண்டு பெரும் முறையாக பதிலளித்து வந்தனர். அந்த சமயத்தில் நெறியாளர் திரைத்துறையில் நெபோடிசம் (Nepotism – வாரிசு) குறித்து கேள்வி எழுப்பினார்.
Nepotism మీద ఒపీనియన్ చెప్పడానికి నాని , రానా కంటే బెస్ట్ పర్సన్స్ ఎవరు మరి వాళ్ళు ఏమన్నారో ఎపిసోడ్ లో చూడండి
Watch Nijam with Smita streaming now on Sony LIV#Nijam #SonyLIV #NijamOnSonyLIV #NijamWithSmita @smitapop @nameisnani @ranadaggubati pic.twitter.com/1rJys3OQop— Sony LIV (@SonyLIV) February 27, 2023
இதற்கு பதிலளித்த நானி, தன்னையும் நடிகர் ராம் சரணையும் ஒப்பிட்டு பதிலளித்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது, “இந்த விஷயத்தில் என்னை நான் நடிகர் ராம் சரணுடன் ஒப்பிட்டு பார்க்கிறேன். நான் நடித்த முதல் படத்தை ஒரு லட்சம் பேர் மட்டுமே பார்த்துள்ளனர். ஆனால் ராம் சரணின் முதல் படத்தை கோடிக்கணக்கான பேர் பார்த்துள்ளனர்.
இதிலிருந்து பார்வையாளர்கள் எப்போதும் தங்கள் நட்சத்திர நடிகர்களை திரையில் பார்க்க விரும்புகிறார்கள் என்று தெரிகிறது. பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்த நட்சத்திரக் குழந்தைகளின் (மகன்கள் / மகள்கள்) படங்களை தியேட்டரில் பார்க்க விரும்புகிறார்கள். இதுபோன்றவையை பார்வையாளர்கள்தான் ஊக்குவிக்கிறார்கள்” என்றார்.
நானி திரைத்துறை சார்ந்த பின்புலத்தில் இருந்து வந்தவர் அல்ல. அதே போல் நடிகர் ராம் சரண், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். எனவே ராம் சரண் பின்புலத்தில் திரைத்துறை சார்ந்தவர்கள் உள்ளனர். அதோடு ராம் சரணின் உறவினர்கள் பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், அல்லு சிரிஷ், வருண் தேஜ் என பல பேர் திரைத்துறையில் உள்ளனர்.
நெப்போடிசம் குறித்து நடிகர் நானி தன்னை ராம் சரணுடன் ஒப்பிட்டு பேசியது ராம் சரணின் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் நானி பேசியதில் தவறில்லை என்றும், அவர் எதார்த்தமாகதான் கூறியதாகவும் நானி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நானியின் அடுத்த படம் ‘தசரா’ வரும் மார்ச் 30-ம் தேதி திரையரங்கில் வெளியாகிவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.