Jaguar Studios சார்பில் B. வினோத் ஜெயின் வழங்கும் “கோல்மால்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!

0
41

Jaguar Studios சார்பில் B. வினோத் ஜெயின் வழங்கும் “கோல்மால்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!

Jaguar Studios சார்பில் B. வினோத் ஜெயின் தயாரிக்க, அறிமுக இயக்குநர் பொன் குமரன் இயக்கத்தில், நடிகர் ஜீவா, மிர்ச்சி சிவா, தான்யா ஹோப், பாயல் ராஜ்புத் நடிப்பில் காமெடி கலாட்டாவாக உருவாகும் புதிய திரைப்படம் “கோல்மால்”. முழுக்க முழுக்க மொரிஷியஸ் தீவில் படமாக்கப்படவுள்ள இப்படத்தில் ஆடுகளம் நரேன், பாடகர் மனோ சோனியா அகர்வால், சஞ்சனா சிங், சாது கோகுல் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

இன்று 10.10.2021 காலை, விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் RB சௌத்திரி, தயாரிப்பாளர் தனஞ்செயன், உட்பட தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. பின்னர் பத்திரிக்கையாளர்களை படக்குழுவினர் சந்தித்து உரையாடினர்.

இந்நிகழ்வில் கிரியேட்டிவ் புரடியூசர் நரேஷ் ஜெயின் பேசியதாவது…

இங்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. நாங்கள் ஆரம்பித்துள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என நம்புகிறோம். இயக்குநர் பொன் குமரன் இயக்கத்தில் நடிகர் ஜீவா, மிர்ச்சி சிவா, தான்யா ஹோப், பாயல் ராஜ்புத் நடிப்பில் காமெடி கலாட்டாவாக இந்தப்படத்தை மொரிஷியஷில் படமாக்குகிறோம். முழுப்படத்தையும் ஒரே கட்டமாக படமாக்க திட்டமிட்டுள்ளோம். அனைவரும் ஆதரவு தர வேண்டும் நன்றி.

தயாரிப்பாளர் B. வினோத் ஜெயின் பேசியதாவது…

கோல்மால் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. முழுக்க முழுக்க வெளிநாட்டில் இப்படத்தை எடுக்கவுள்ளோம். இயக்குநர் பொன் குமரன் இயக்கத்தில் நடிகர் ஜீவா, மிர்ச்சி சிவா, தான்யா ஹோப், பாயல் ராஜ்புத் நடிக்கிறார்கள். மிருகா படத்திற்கு தந்த ஆதரவை போல் இப்படத்திற்கும் உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…

கலகலப்பு 2 சிவா ஜீவா இணைந்து ஜோடியாக ஹிட் கொடுத்தார்கள். இப்போது மீண்டும் ஜோடி சேர்ந்து ஹிட் கொடுக்க போகிறார்கள். கண்டிப்பாக இந்த ஜோடி அனைவரும் கவரும் ஜோடியாக இருக்கும். கோல்மால் டைட்டில் வைத்துள்ளார்கள். என்ன கோல்மாலாவது செய்து மால் கொட்டுமாறு படத்தை எடுத்துவிடுங்கள் என சௌத்திரி சார் சொன்னார். இப்படம் நல்ல பொழுதுபோக்கு படமாக வரும் என நம்பிக்கை உள்ளது நன்றி.

நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது…

என் கண்ணுக்கு இது பூஜை மாதிரி தெரியவில்லை சக்ஸஸ் பார்டி மாதிரி தெரிகிறது. இந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும். ஜீவா, சிவா இரு ஹீரோக்களையும் தெரியும் நல்ல படங்களை தருபவர்கள். தயாரிப்பாளர் என் குடும்ப நண்பர், அவர் படத்தை, எவ்வாறு வியாபாரம் செய்வார் என தெரியும். நான்கு ஹீரோயின்கள் இருக்கிறார்கள். கண்டிப்பாக இப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையும் வாழ்த்துக்கள்

தயாரிப்பாளர் RB சௌத்திரி பேசியதாவது..

இந்த கோல்மால் பட இயக்குநரிடம் என்ன கோல்மாலாவது செய்து, தயாரிப்பாளருக்கு மால் சம்பாதித்து கொடு என சொன்னேன். ஜீவா, சிவாவுக்கு இப்படம் பெரிய வெற்றிப்படமாக இருக்கும். இந்தப்படம் இந்தியில் பெரிய வெற்றிப்படம். அதே போல் தமிழிலும் வெற்றி பெறும் அனைத்து கலைஞர்களுக்கும் இப்படம் வெற்றிப்படமாக அமைய வாழ்த்துக்கள்.

ஆடுகளம் நரேன் பேசியதாவது…

கோல்மால் ரொம்ப சுவாரஸ்யமான படம் இப்படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

நடிகர் சுப்பு பஞ்சு பேசியதாவது…

பொன்குமரன் உடன் வேலை செய்வது மகிழ்ச்சி. சிவா,ஜீவா உடன் வேலைபார்க்க ஆவலாக இருக்கிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

நடிகை சோனியா அகர்வால் பேசியதாவது…

சிவா,ஜீவா உடன் வேலைபார்க்க ஆவலாக இருக்கிறேன். இந்தப்படம் வெற்றி பெறும் என நம்புகிறேன். தோழி சஞ்சனாவும் இருக்கிறார் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் நன்றி.

நடிகை சஞ்சனா சிங் பேசியதாவது…

இயக்குநர் கதை சொன்ன போதே வித்தியாசமாக இருந்தது. ஜீவா உடன் வேலை செய்துள்ளேன். மீண்டும் வேலை செய்ய ஆவலாக இருக்கிறேன். நீங்கள் ஆதரவு தந்தால் தான் படம் ஜெயிக்கும் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் சாது கோகிலா பேசியதாவது…

தமிழில் இது எனது முதல் படம். முடிஞ்சா என்ன புடி படத்தில் ஒரு சின்ன பாத்திரம் செய்தேன். பொன்குமரன் எனக்கு பெரிய இடம் தந்துள்ளார். என் தாய் தந்தை தமிழகத்தில் தான் இருந்தார்கள். இந்தப்படம் ஜீவா, சிவா நடிப்பில் நிறைய மால் சம்பாதித்து தரும் நன்றி.

நடிகர் சித்தார்த் விபின் பேசியதாவது…

இப்படத்தில் ஒரு சூப்பரான கதாப்பாத்திரம் செய்கிறேன். ஜீவா,சிவா இந்தப்படத்தில் கலக்குவார்கள். படத்தை ஒரு தீவில் படமாக்குகிறார்கள். ஒரு காமெடி கலாட்டாவாக இருக்கும். என் ஹீரோயின் யார் என்று இயக்குநர் சொல்லவில்லை. அதற்காக தான் காத்திருக்கிறேன். படம் வெற்றி பெறும் நன்றி.

நடிகை பாயல் ராஜ்புத் பேசியதாவது…

நீங்கள் ஒன்றை மனதார நேசித்தால், இந்த பிரபஞ்சம் அதை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். தமிழில் அறிமுகம் ஆக வேண்டுமென நான் கனவு கண்டேன் இப்போது நடந்துள்ளது. தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இருவருக்கும் நன்றி. ஜீவா சாருடன் வேலை பார்க்க ஆவலாக உள்ளேன் நன்றி.

நடிகை தான்யா ஹோப் பேசியதாவது…

தமிழ் சினிமாவில் இது எனது மூன்றாவது படம் இப்படத்தில் வேலை செய்ய ஆவலாக உள்ளேன். பொன்குமரன் சாருக்கு நன்றி. என்னை தேர்ந்தெடுத்த குழுவுக்கு நன்றி.

இயக்குநர் பொன்குமரன் பேசியதாவது…

நான் முதல் படம் பண்ணுவது போன்ற உணர்வு உள்ளது. சாருலதா படத்தை கர்நாடகாவிலேயெ முடித்துவிட்டேன். பல காலம் தமிழில் படம் செய்ய ஆசைப்பட்டேன். கொரோனா காலத்தில் இந்த தயாரிப்பாளரை சந்தித்தேன். அவரை பயமுறுத்தும்படி சின்ன பட்ஜெட்டில் கதை சொல்லி ஓகே செய்து விடலாம் என சொன்னேன். ஆனால் அவர் பயப்படவில்லை. அவரிடம் அவரை சிரிக்க வைக்க காமெடி கதை சொன்னேன். தயாரிப்பாளர் இதை செய்யலாம் என்று சொன்னார். ஜீவா சாரின் அன்புக்கு நன்றி. அவர் என்னை பெரிய இயக்குநர் போல் தான் மதித்தார். பாக்யராஜ், கே.எஸ் ரவிக்குமார் இருவரிடமும் வேலை செய்தேன் அவர்களுக்கு என் நன்றி. இந்தப்படத்தை பெரிய வெற்றி பெறச் செய்யுங்கள் நன்றி.

நடிகர் மிர்ச்சி சிவா பேசியதாவது….

ஜீவா உண்மையிலேயே எனக்கு நெருக்கமான சகோதரர். அவர் தான் இந்தப்படத்தின் கதை கேட்க சொன்னார். அவர் சொன்ன மாதிரி கோல்மால் 2 லண்டன், கோல்மால் அமெரிக்கா என தொடர்ந்து செய்யலாம். வினோத் ஜெயின் சார் இந்த கொரோனா காலத்தில் பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை திட்டமிடுவதற்கு நன்றிகள். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. கொரோனா காலத்தில் பொன்குமரன் திரைக்கதையில் சூப்பராக வேலை செய்துள்ளார். ஜீவா என் டார்க்கெட்டை உடைத்து கொண்டே இருக்கிறார். போன படத்தில் அவர் ரன்வீர் சிங் உடன் நடித்தார் இப்போது என்னுடன் நடிக்கிறார், நாம் தான் அகில உலக ஸ்டார் என்பதால் பிரச்சனையில்லை. தயாரிப்பாளர் அழகாக அவரது டிவின்ஸ் குழந்தைகள் பிறந்த நாளை இங்கு கொண்டாடிவிட்டார். இதே போல் திட்டமிட்டு நிறைய படங்கள் செய்ய வேண்டும் நன்றி.

நடிகர் ஜீவா பேசியதாவது…

சிவா உள்ள வரும்போதே கல்யாண விழா மாதிரி இருக்குனு சொன்னார். இந்தப்படமே ஒரு விழா மாதிரி தான் இருக்கும். சிவா உடன் நடிக்கும் போது சாதாரணமாகவே கலாய்ப்பார். சிவாவுக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருக்கிறது. கலகலப்பு மாதிரி இப்படமும் ஒரு காமெடி கலாட்டவாக இருக்கும். தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்தப்படம் வெற்றி பெற்றால் கோல்மால் தொடர்ந்து சீரிஸாக செய்யலாம் என முடிவெடுத்துள்ளோம். சக்ஸஸ் மீட்டில் இன்னும் நிறைய சொல்கிறோம் நன்றி.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

தயாரிப்பு – B. வினோத் ஜெயின்
இயக்கம் – பொன்குமரன்
ஒளிப்பதிவு – சரவணன் S
இசை – அருள்தேவ்
படத்தொகுப்பு – டான் பாஸ்கோ
கலை இயக்கம் – சிவகிருஷ்ணா
டிசைனர் – சுமா
லைன் புரடியூசர் – லால் தாஸ்
புரடக்சன் எக்சிக்யூட்டிவ்- செந்தில் M
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் – ரவிகுமார்
கிரியேட்டிவ் புரடியூசர் – நரேஷ் ஜெயின்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்