கமலி from நடுகாவேரி விமர்சனம்

0
22

கமலி from நடுகாவேரி விமர்சனம்

அபண்டு பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கே.துரைசாமி தயாரிப்பில் உருவான கவலி கசழஅ நடுகாவேரி படத்தை கதை எழுதி இயக்கியிருக்கிறார் ராஜசேகர் துரைசாமி.

இதில் ஆனந்தி, பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், ரேகா சுரேஷ், இமான் அண்ணாச்சி, ஸ்ரீஜா, அபிதா வெங்கட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
தொழில்நுட்பகலைஞர்கள்:-இசை-தீனதயாளன், ஒளிப்பதிவு-ஜெகதீசன் லோகையன், கலை-தியாகராஜன், பாடல்கள்-யுகபாரதி, மதன் கார்க்கி, கார்த்தி நேதா, எடிட்டிங்-ஆர்.கோவிந்தராஜ், நடனம்-பாப்பி, சதீஷ் கிருஷ்ணன், உடை-தோஃபி,தயாரிப்பு மேற்பார்வை-பாபுராவ், தயாரிப்பு நிர்வாகி-ஜெய் சம்பத், மக்கள் தொடர்பு-ஜான்சன்.

நடுக்காவேரியில் பதினொன்றாம் வகுப்பு அரசு பள்ளியில் படிக்கும் குறும்புத்தனமான பெண் ஆனந்தி(கமலி). பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற ரோகித்தின் பேட்டியை தொலைக்காட்சியில் பார்க்கும் ஆனந்தி, அவர் போல் படித்து அவரை காதலிக்க ஐஐடியில் சேர ஆசைப்படுகிறார். இதற்காக தஞ்சை, திருச்சி ஆகிய நகரங்களில் ஐஐடி படிக்க தேடி அலைகிறார். ஆனந்தி சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தவிக்க ஆசிரியர் இமான் ஒய்வு பெற்ற பேராசிரியர் பிரதாப் போத்தனிடம் பெரு முயற்சி செய்து சேர்த்து விடுகிறார். பிரதாப் போத்தன் ஆனந்தியின் புத்திசாலித்தனத்தை புரிந்து கொண்டு ஐஐடி எழுதும் பயிற்சியை கொடுக்கிறார். பிரதாப்பின் முயற்சியில் ஆனந்தி ஐஐடி சென்னையில் இடம் கிடைக்கிறது. ஆனந்தி மகிழ்ச்சியோடு படிக்க செல்ல அங்கே பல அவமானங்களை எதிர் கொள்ள நேரிடுகிறது. அந்த இடத்தில் படிக்கும் ரோகித்தையே சுற்றி வருவதால் படிப்பில் சரியான கவனம் செலுத்தாமல் இருக்கிறார் இதனால் மதிப்பெண் குறைவாக எடுக்கிறார். விரக்தியில் இருக்கும் ஆனந்தி நடுக்காவேரிக்கு திரும்பி வருகிறார். அதன் பின் ஆனந்தி ஐஐடி திரும்பி சென்று படிப்பில் கவனம் செலுத்தினாரா? காதல் கனவில் இருக்கும் ஆனந்தி விழித்துக் கொண்டாரா? இறுதியில் ஆனந்தியின் படிக்கும் ஆசை வெற்றி பெற்றதா? என்பதே மீதிக்கதை.

இதில் கயல் ஆனந்தி கமலி ஆனந்தியாக அழைக்கும் அளவிற்கு நடிப்பில் மெருகேற்றி தன் அழகான கண்களால் உணர்ச்சிகளை காண்பித்து அசத்தியுள்ளார்.

பேராசிரியர் பிரதாப் போத்தன் அளவான பேச்சு, கண்டிப்பான பார்வை நேர்த்தியான கற்பிக்கும் திறன் என்று அளவான நடிப்பை ஆங்கிலம் கலந்த தமிழில் பேசி மனதில் நிற்கிறார்.

மேலும் அழகம் பெருமாள், ரேகா சுரேஷ், இமான் அண்ணாச்சி, ஸ்ரீஜா, அபிதா வெங்கட் முக்கியமான கதாபாத்திரங்கள் படத்தின் இயல்பான சம்பவங்களுக்கு துணையாக நிற்கின்றனர்.

இசை-தீனதயாளன், ஒளிப்பதிவு-ஜெகதீசன் லோகையன்ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு பெரிய பலம் மட்டுமில்லாமல் உயிரோட்டமாக கொடுத்துள்ளனர்.

கதை,இயக்கம்- ராஜசேகர் துரைசாமி. கிரமாத்து பெண்கள் நகரத்தில் உயர் படிப்பு படிக்க எத்தனை தடைகளை தாண்டி ஜெயிக்க வேண்டும் என்பதையும் நட்பு, காதல், செண்டிமெண்ட் கலந்து திறம்பட இயக்கியுள்ளார் ராஜசேகர் துரைசாமி. படிப்பா? காதலா? என்ற கல்லூரி வயதில் ஏற்படும் சலனப் போராட்டத்தில் தெளிவாக முடிவெடுத்து மீண்டு வந்தால் ஜெயிக்கலாம் என்பதையும், பெண்களின் படிப்பை வலியுறுத்தி உணர்வுபூர்வமாக சொல்லும் படம் கமலி கசழஅ நடுக்காவேரி.

மொத்தத்தில் மனதில் உறுதி இருந்தால் பெண்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தும் படம் கமலி from நடுக்காவேரி.