நெட்ஃபிக்ஸ் அதிகாரபூர்வமாக கைப்பற்றிய புதிய தமிழ் படங்களின் பட்டியல்!

0
256

நெட்ஃபிக்ஸ் அதிகாரபூர்வமாக கைப்பற்றிய புதிய தமிழ் படங்களின் பட்டியல்!

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம், பல்வேறு மொழிகளில் இணைய தொடர்களை வெளியிட்டு வருகிறது. உலகளவில் பெரும் நிறுவனமாக இருந்தாலும் இந்தியாவில் தொடர் போட்டிகளை சமாளிக்க முடியாமல் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் திணறி வருகிறது.

இதனிடையே இந்தியா போன்ற பெரிய மார்க்கெட் கொண்ட நாட்டை இழக்கமாட்டோம் எனவும், தொடர்ந்து அங்கு இயங்குவோம் என்றும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ரசிகர்களை கவர ஏராளமான முக்கிய திரைப்படங்களை அந்த நிறுவனம் வாங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அது நடந்துள்ளது.

ரஜினி நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட்டான சந்திரமுகியின் இரண்டாவது பாகமாக ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகி வருகிறது சந்திரமுகி 2. இப்படத்தை தற்போது நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்நடிப்பில் உருவாகவுள்ள அஜித் 62 திரைப்படத்தையும் வாங்கியுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிவிட அதனை குறிப்பிட்டு ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் ,ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி ஹிட்டான கட்டா குஸ்தி ஆகிய படத்தையும் நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது.

அதோடு, ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம், உதயநிதி மற்றும் பஹத் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படம், கார்த்திக் நடிப்பில் உருவாக் வரும் ஜப்பான் திரைப்படம், விஷ்ணுவிஷால் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்யன் திரைப்படம், பா.ரஞ்சித் இயக்கத்தில் பார்வதி, விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான், நாய் சேகர், கீர்த்தி சுரேஷின் ரிவோல்வர் ரீட்டா, சமுத்திரக்கனியின் தலைக்கோதல் ஆகிய திரைப்படங்களின் ஓடிடி உரிமையையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

தமிழ் படங்களின் ஸ்ட்ரீமிங் உரிமை தலைப்புகளின் பட்டியல்.

ஏகே 62
ஆரியன்
சந்திரமுகி 2
இறைவன்
இருகபற்று
ஜப்பான்
ஜிகர் தண்டா: டபுள் எக்ஸ்
மாமன்னன்
நாய் சேகர்
ஐஸ்வர்யா ராஜேஷின் பெயரிடப்படாத படம்
யோகி பாபுவின் பெயரிடப்படாத படம்
அருள்நிதியின் பெயரிடப்படாத படம்
ரிவால்வர் ரீட்டா
தலைகூத்தல்
தங்காளன்
வாத்தி
வரலாறு முக்கியம்
இறைவன்

இந்த படங்கள் அனைத்தும் திரையரங்கில் வெளியான சில வாரங்களுக்குப் பிறகு நெட்ஃபிக்ஸ் (Netflix) OTT தளத்தில் ஸ்ட்ரீம் செய்யும்.