‘ஒருதலை ராகம்’ பட தயாரிப்பாளர் இ.எம்.இப்ராஹிம் காலமானார்..! டி.ராஜேந்தர் கண்ணீர் மல்க இரங்கல்…..!

0
63

‘ஒருதலை ராகம்’ பட தயாரிப்பாளர் இ.எம்.இப்ராஹிம் காலமானார்..! டி.ராஜேந்தர் கண்ணீர் மல்க இரங்கல்…..!

இயக்குனர் டி.ராஜேந்தரை, ஒரு இயக்குனராக ‘ஒருதலை ராகம்’ படத்தில் அறிமுகம் செய்த, தயாரிப்பாளர் இப்ராஹிம் வயது மூப்பு காரணமாக காலமாகியுள்ளார். இவரது மறைவிற்கு டி.ராஜேந்தர் அறிக்கை மூலம் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

1980ம் ஆண்டு வெளியான என் முதல் படமான ‘ஒரு தலை ராகம்’ படத்தின் தயாரிப்பாளர் திரு E.M.இப்ராஹிம் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி என் இதயத்தில் ஈட்டியாய் பாய்கிறது.

மீளா அதிர்ச்சிக்கு உள்ளானேன்,
காரணம் அவர் அரங்கக்குடியில் பிறந்தவர்
என்னை திரையுலகிற்கு அரங்கேற்றம் செய்தவர்
வடகரை பக்கத்தில் வாழ்ந்தவர்
என் திரையுலக வாழ்க்கை படகை கரை சேர்த்தவர்

இன்று ஏன் மறைந்தார்
இந்த உலகை விட்டு பிரிந்தார்

கண்ணீர் கண்களை நனைக்கிறது
என் மனம் கடந்த காலத்தில் அவரோடு வாழ்ந்த காலத்தை நினைக்கிறது

அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இப்படிக்கு,
டி. ராஜேந்தர் M.A,
தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர்,
தலைவர்,
சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்.
கௌரவ ஆலோசகர்,
தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம்.