C/O காதல் விமர்சனம்
ஸ்ரீசிருத்தி சாய் மூவிஸ், பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ராஜசேகர், ஜீவன், கார்த்திகேயன் தயாரித்து சக்தி பிலிம் பாக்டரி வெளியீட்டில் தீப்ன், சோனியா கிரி, வெற்றி, மும்தாஜ் சர்க்கார், கார்த்திக் ரத்னம், ஐரா, நிஷேஷ், ஸ்வேதா ஆகியோர் நான்கு விதபருவ காதல் கதைக்குள் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஹேமம்பார் ஜஸ்டி.இசை-சுவீகர் அகஸ்தி, ஒளிப்பதிவு-குணசேகரன், எடிட்டர்-ஸ்ரீகர் பிரசாத், துணை தயாரிப்பு-மதன், வசனம்-நீலன் கே.சேகர், கதை-மகா.
பள்ளிப்பருவத்தில் ஏற்படும் காதல், பதின்ம காலக்காதல், நடுத்தரக்காதல், நாற்பது வயதிற்கு மேல் ஏற்படும் காதல் என்று நான்கு சம்பவங்கள் நான்கு கோணங்கள். நான்கு வித பருவ நிலையில் ஏற்பட்ட காதலில் வெற்றி பெற்ற காதல் எது? தோல்வியடைந்த காதல் எது? இந்த நான்கு காதலுக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன? இறுதியில் ஒரே நேர்கோட்டில் இணைந்து நமக்கு தரும் திருப்புமுனை முடிவு என்ன? என்பதே படத்தின் விறுவிறுப்பான கதைக்களம்.
தீப்ன், சோனியா கிரி, வெற்றி, மும்தாஜ் சர்க்கார், கார்த்திக் ரத்னம், ஐரா, நிஷேஷ், ஸ்வேதா ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து அச்சு அசலாக வாழ்ந்திருக்கின்றனர்.
இசை-சுவீகர் அகஸ்தி, ஒளிப்பதிவு-குணசேகரன், எடிட்டர்-ஸ்ரீகர் பிரசாத் ஆகிய மூவரின் பங்களிப்பு படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கிறது.
ஒட்டுமொத்தப் படத்தையும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியான ஒரு திருப்பம் கொடுத்து சஸ்பென்சை தூக்கிப் பிடித்து சந்தேகங்கள், கேள்விகள் என அத்தனையையும் இறுதிக் காட்சியில் ஒரே வசனத்தில் தீரத்து வைக்கும் அசல் கதையை எழுதிய வெங்கடேஷ் மஹாவுக்கு பாராட்டுக்கள்.
எல்லா காதலும் சுமூகமாக இருப்பது போல தோன்றினாலும் பிரச்சனைகள் வெவ்வேறு ரூபங்களில் பூதாகரமாக தோன்றினாலும் நான்கு காதல்களில் சீனியர்களின் காதல் வெகுளித்தனத்தால் ஈர்க்கிறது.இந்தப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் இதில் உள்ள ஏதோ ஒரு காதலர்களுடன் தங்களை நிச்சயமாக பொருத்தி பார்த்துக்கொள்ளும் அளவிற்கு சமூகத்திற்கான நல்ல கருத்துக்களையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார். கடவுளை நம்புவதை விட மனிதர்களை நம்பலாம். நல்லது கெட்டது அனைத்தையும் செய்பவர்கள் மனிதர்கள் தான், மனிதர்கள் தான் கடவுள் என்று சொல்லி அனைத்து மதத்தையும் ஒருங்கிணைத்த கதாபாத்திரங்களாக இதில் கொடுத்து அசத்தியதோடு நல்லதொரு படைப்பை கொடுத்து கை தட்டல் பெறுகிறார் இயக்குனர் ஹேமம்பார் ஜஸ்டி.
மொத்தத்தில் c/o காதல் படம் காதலர் தினத்தில் வெளிவந்திருக்கும் வெற்றிக்காதல் பூங்கொத்து.