#BoycottRRRinKarnataka : ஆர்.ஆர்.ஆர்.க்கு எதிர்ப்பு – என்ன காரணம்?
இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டாக உருவாகியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை கர்நாடக மாநிலத்தில் புறக்கணிக்குமாறு, கன்னட சினிமா ரசிகர்கள் ஆவேசம் காட்டி வருகின்றனர்.
பிரபாஸ் நடிப்பில் உருவான ‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட படத்திற்குப் பிறகு, இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. பான் இந்தியா படமாக, 3டி தொழில்நுட்பத்திலும் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், உலகம் முழுவதும் நாளை மறுதினம் வெளியாக உள்ளது.
சமீபத்தில் கர்நாடக மாநிலம் சிக்பல்லாபூரில் பிரமாண்டமான பிரீரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் பசவராஜு பொம்மை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, RRR தேசமே பெருமைப்படும் படம் என்று பாராட்டினார்.
ஆனால் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் RRR படத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு முக்கிய காரணம் கன்னடத்தில் RRR வெளியாகாததுதான்!
இவ்வளவு பெரிய ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு கர்நாடகாவில் நடைபெற்றது ஆனால் படத்தை கன்னட மொழியில் வெளியிட மறந்துவிட்டார்கள்.
RRR தெலுங்கு மற்றும் தமிழ் மற்றும் ஹிந்தியில் கிடைக்கும் என்பதால் கன்னட பதிப்பு பற்றி என்ன? அப்பகுதி மக்கள் கொதிப்படைந்துள்ளனர். ஒருவகையில் இது கன்னட மொழிக்கு அவமானம் என்று ஆத்திரம் அடைந்துள்ளனர்.
இதனால் மொழிபற்றால் பொங்கியெழுந்த அம்மாநில சினிமா ரசிகர்கள், இந்தப் படத்தை கன்னட மொழியில் வெளியிடாவிட்டால் இந்தப் படத்தைப் பார்க்க மாட்டேன் என்று #BoycottRRRinKarnataka என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, ட்விட்டரில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை புறக்கணியுங்கள் என்று ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
Telugu hindi shows in ka not kannada shows
Why @ssrajamouli
Your speech only for interviews..? #BoyCottRRR#BoyCottKVNproduction#BoycottRRRinKarnataka pic.twitter.com/NmvSucitEy— Rocky ⚡Agastya (@ELDorado_Mughor) March 23, 2022
Promise broken…. #BoycottRRRinKarnataka pic.twitter.com/NcrNUDnuwe
— Manoj Gowda (@ManojGo83410034) March 23, 2022
We want RRR release in Kannada !!! https://t.co/Xyy1h4dGzr
— NR (@NrOpines) March 22, 2022