83 விமர்சனம்: 83 உலககோப்பையின் மெய் சிலிர்க்கும் தருணத்தை 2021ல் இன்றைய கிரிக்கெட் ரசிகர்களை உணர்ச்சி பட வைத்து வெற்றி வாகை சூடியுள்ளது
கபில்தேவ் (ரன்வீர் சிங்) தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இங்கிலாந்து பயணிக்கிறது. இந்திய அணி முதல் இரண்டு மேட்ச்களில் வெற்றிபெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. தொடர்ந்து ஒவ்வொரு ஆட்டமாக முன்னேறி இறுதி ஆட்டத்தில் 1983-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்திய அணிகளுக்கு எதிராக இந்தியா பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அடிப்படையாகக் கொண்ட படம் 83.
கபில்தேவின் இன்னிங்ஸ் இந்தியாவை காப்பாற்றியது மட்டுமல்லாமல், அவர்கள் அணிக்கு மேசையில் ஒரு இடத்தையும், பெரிய அளவிலான மரியாதையையும் சம்பாதித்து கொடுத்தார்.அதுவரை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டில், சர்வதேச மற்றும் உள்நாட்டு பத்திரிகைகள் மற்றும் ஏற்கனவே விளையாட்டில் முத்திரை பதித்தவர்களிடமிருந்து ஒவ்வொரு மூலையில் இருந்தும் மரியாதையும் கௌரவமும் கிடைக்காமலிருந்தது. உலகக் கோப்பையை வெல்லும் கேப்டனின் நோக்கத்தை யாரும் பெரிதாக கண்டு கொள்ளாமல் இருப்பதும் படத்தின் வெவ்வேறு தருணங்களில் காட்சிகளின் வாயிலாக வெளிப்படுகிறது, இது இறுதியில் அணியை அதன் சிறந்த ஆட்டத்திற்கு வழிவகுத்து முன்னோக்கி வீரத்துடன் இறுதிப்போட்டிக்குள் வைராக்கிமாக நுழைய வைத்த தருணத்தையும் பதிவு செய்துள்ளனர். சிறிய சந்தோஷங்கள், துக்கங்கள், மகத்தான வெற்றிகள், வேதனையான தோல்விகள், ஒவ்வொரு வீரரும் அனுபவிக்கும் உள் எழுச்சிகள், அவர்களின் தனிப்பட்ட பயணங்கள், ஜென்டில்மேன் விளையாட்டில் வலிமைமிக்கவர்களைத் தோற்கடிக்க தன்னை நம்பக்கூடிய அணியாக மாறுவதற்கான பயணம் இதுவே கபீர் கானின் வியத்தகு 83 பற்றியது. அதன் பின் கிரிக்கெட் இந்தியாவில் வலிமைமிக்க அனைவரும் விரும்பப்கூடிய விளையாட்டாக மாறியது என்பதே உண்மை.
சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் பிரியர்களும் பிடித்தவாறு வரலாற்று பெருமை கொண்ட ஒரு தருணத்தை பெரிய சவாலான விஷயத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் கபீர்கான். படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், கபீர் உண்மையான படங்களை ரீல்களுடன் இணைத்து கொடுத்திருப்பது அவர் எந்தளவு ஆராய்ச்சி செய்து தெளிவாக கொடுத்திருக்கிறார் என்பது புரியும்.டீம் இந்தியாவின் 1983 உலகக் கோப்பை பயணத்தின் வரையறுக்கப்பட்ட தருணங்கள் படம் முழுக்க ஜாலியான விளையாட்டு அல்ல கடினமான உழைப்பு, இழப்பு, பாதிப்பு அனைத்தும் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியில் ஒரு பெரிய அளவிற்கு வெற்றி கிட்டியதை சொல்லியிருக்கிறார்.
கிரிக்கெட்டை வைத்து மதக்கலவரத்தை கட்டுப்படுத்துவது, இளவயது சச்சின், உண்மையான கபில் தேவ் கேமியோ என பல சுவாரஸ்யமான காட்சிகள் மூலம் படத்தை போரடிக்காமல் கொண்டு சென்றுள்ளார் இயக்குநர். இந்திய கேப்டன் கபில்தேவ் மங்கூஸ் மட்டையால் சரித்திரம் படைத்த போட்டியாகும், மேலும் இது கேமராவில் பதிவு செய்யப்படாத அந்த புகழ்பெற்ற இன்னிங்ஸ் ஆகும்.
முதலில் ரன்வீர் சிங். படத்தில் எந்தக் காட்சியிலும் திரையில் இருப்பவர் ரன்வீர் என்ற உணர்வே பார்வையாளர்களுக்கு எழாமல் நகலெடுத்தது போல் கபில் தேவாகவே வாழ்ந்திருக்கிறார். ஸ்ரீகாந்தாக ஜீவா, சாகிப் சலீம், தாஹிர் ராஜ் பாசின், அம்மி விர்க், ஹார்டி சந்து, ஜதின் சர்னா, பங்கஜ் திரிபாதி, போமன் இரானி மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் இந்தப் படத்திற்கு மேலும் வலு சேர்க்கின்றனர்.
கிரிக்கெட் விளையாட்டு சம்பந்தப்பட்ட காட்சிக்கோணங்களின் கச்சிதமான ஒளிப்பதிவை அசீம் மிஸ்ராவின் கேமரா அற்புதமாக படமாக்கியுள்ளது. ஒரு கிரிக்கெட் போட்டியை பார்க்கும் பார்வையாளனின் உணர்வோடு கொடுத்துள்ளார். மேற்கிந்திய அணியின் பவுலிங் காட்சிகள் மிரட்டலாகவும் பதிவு செய்துள்ளார். ஜூலியஸ் பக்கியத்தின் இசை, எடிட்டிங் என டெக்னிக்கல் அம்சங்கள் அனைத்தும் படத்தை தூக்கி நிறுத்த கைகொடுத்துள்ளன.
மொத்த்தில் 83 உலககோப்பையின் மெய் சிலிர்க்கும் தருணத்தை 2021ல் இன்றைய கிரிக்கெட் ரசிகர்களை உணர்ச்சி பட வைத்து வெற்றி வாகை சூடியுள்ளது.