கமலுக்காக ஓட்டு கேட்கும் ‘கில்லி’ ஜெனிபர்

0
75

கமலுக்காக ஓட்டு கேட்கும் ‘கில்லி’ ஜெனிபர்

மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக கமல் போராடுகிறார் என்று கூறியுள்ள ஜெனிபர், அதற்காக் அவரது இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன் என்றார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன் தற்போது ஒரு பிஸியான அரசியல்வாதியாக வலம் வருகிறார். தேர்தல் நெருங்கி வருவதால், தனது அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் கோவை சரளா, கமீலா நாசர், ஸ்ரீ பிரியா போன்ற பல திரையுலக பிரமுகர்கள் உள்ளனர். இப்போது விஜய் பட நடிகை ஒருவரும் கமலின் வலுவான ஆதரவாளராக மாறியுள்ளார்.

கில்லி படத்தில் விஜய்யின் சகோதரியாக நடித்த நடிகை ஜெனிபர், விரும்பம்பாக்கத்தில் கமல்ஹாசனுக்காக வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக கமல் போராடுகிறார் என்று கூறியுள்ள ஜெனிபர், அதற்காக் அவரது இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன் என்றார். மேலும் கமல் நடிப்பின் ரசிகராக இருந்து வருவதாகவும், இப்போது அவர் நடிக்காமல் மக்களுக்காக வேலை செய்து வரும் போது அவரை வலுவாக ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.