67-வது தேசிய திரைப்பட விருது: அசுரனுக்கு தேசிய விருது – மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்ததாக தனுஷ் நெகிழ்ச்சி

0
62

67-வது தேசிய திரைப்பட விருது: அசுரனுக்கு தேசிய விருது – மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்ததாக தனுஷ் நெகிழ்ச்சி

67-வது தேசிய திரைப்பட விருது வென்றவர்கள் யார்…. யார்? – முழு பட்டியல்

ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய திரைப்பட துறைக்கு உயரிய விருதாக கருதப்படும் இவ்விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால், 2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படவில்லை. ஆதலால், 2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதன் பட்டியலை பார்ப்போம்

சிறந்த தமிழ் படம் – அசுரன்

சிறந்த நடிகர் – தனுஷ் (அசுரன்)

சிறந்த நடிகர் – மனோஜ் பாஜ்பாய் (போன்ஸ்லே, இந்தி)

சிறந்த நடிகை – கங்கனா ரணாவத் (பங்கா, மணிகர்னிகா)

சிறந்த இயக்குனர் – சஞ்சய் பூரண் சிங் சவுகான் (பாத்தர் ஹூரைன் – இந்தி)

சிறந்த படம் – மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் (மலையாளம்)

சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் – விக்ரம் மோர்(கன்னடம்)

சிறந்த நடன அமைப்பாளர் – ராஜு சுந்தரம் (மகாராசி, தெலுங்கு)

சிறந்த இசையமைப்பாளர் – டி.இமான் (விஸ்வாசம்)

சிறந்த துணை நடிகர் – விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்)

சிறந்த துணை நடிகை – பல்லவி ஜோசி (தி தாஸ்கென்ட் பைல்ஸ், இந்தி)

சிறந்த குழந்தை நட்சத்திரம் – நாகா விஷால் (கே.டி. எனும் கருப்புதுரை)

சிறந்த வசனகர்த்தா – விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி

சிறந்த ஒளிப்பதிவு – கிரிஷ் கங்காதரன் (ஜல்லிக்கட்டு, மலையாளம்)

சிறந்த ஒலிக்கலவை – ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு)

சிறந்த அறிமுக இயக்குனர் – மதுக்குட்டி சேவியர் (ஹெலன், மலையாளம்)

சிறந்த குழந்தைகள் படம் – கஸ்தூரி (இந்தி)

சிறந்த படத்தொகுப்பு – நவீன் நூலி(ஜெர்சி, தெலுங்கு)

சிறந்த பாடகர் – பி.பராக்(கேசரி, இந்தி)

சிறந்த பாடகி – சவானி ரவீந்திரா (பார்டோ, மராத்தி)

சிறப்பு பிரிவு, ஜூரி விருது – ஒத்த செருப்பு (தமிழ்)

வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் தனுஷ் அதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இவ்விருதை பெறுவது இது இரண்டாவது முறை. ஏற்கனவே ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதை வென்றுள்ளார்.

இந்நிலையில், தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியை நடிகர் தனுஷ் அறிக்கை மூலம் வெளிப்படுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அசுரன் படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்தேன். சிறந்த நடிகராக ஒரு தேசிய விருதை வென்றதே கனவு போல் இருந்தது. ஆனால், தற்போது இரண்டாவது முறையாக அவ்விருதை வென்றிருப்பது உண்மையிலேயே ஆசிர்வாதம்தான். நான் இந்த அளவுக்கு வருவேன் என நினைத்துப் பார்த்ததில்லை.

நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டி உள்ளது. முதலில் அம்மா, அப்பா, என்னுடைய குருவான என் அண்ணனுக்கு நன்றிகள். ‘சிவசாமி’ கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி.

வெற்றிமாறன், நான் உங்களை முதன்முறையாக பாலுமகேந்திரா அவர்களின் அலுவலகத்தில் சந்தித்தபோது, நீங்கள் என் நண்பனாக, துணைவனாக, சகோதரனாக மாறுவீர்கள் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. உங்களுடைய இயக்கத்தில் நான்கு படங்களில் நடித்ததற்காகவும், இரண்டு படங்களை உங்களோடு சேர்ந்து தயாரித்ததற்காகவும் மிகவும் பெருமைப்படுகிறேன்

மத்திய அரசின் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ் படமாக தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த நடிகர் என்ற விருதினையும் தட்டிச்சென்றுள்ளார் . இன்று வெற்றிமாறனை தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் . தேசிய விருது என்பது பெரிய ஊக்கம் என வெற்றிமாறன் கூறியுள்ளார் .

நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், நான் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் அளவிட முடியாதது. எனக்காக அடுத்து என்ன கதை எழுதியிருக்கிறீர்கள், என்பதை அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்..

மேலும், தேசிய விருது ஜூரிகளுக்கும், தயாரிப்பாளர் தாணுவுக்கும், அசுரனில் தன்னுடன் நடித்தவர்களுக்கும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கும், ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள தனுஷ், ”எண்ணம்போல் வாழ்க்கை” என்று குறிப்பிட்டு அறிக்கையை முடித்திருக்கிறார்.