ஆன்மீகப் பயணத்துடன் புத்தாண்டை தொடங்கிய சிம்பு
ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சிம்புவின் ‘ஈஸ்வரன்’ வெளியாகிறது.
காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று இந்த புத்தாண்டை தொடங்கியுள்ளார் நடிகர் சிம்பு. தனது உடல் எடையை 30 கிலோ குறைத்து படு பிஸியான நடிகராக வலம் வருகிறார் சிம்பு. இயக்குநர் சுசீந்திரனின் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர், ‘மாநாடு’ மற்றும் ‘பத்து தல’ ஆகிய படங்களின் படபிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.
https://www.instagram.com/p/CJfgeA6lwHA/?utm_source=ig_embed
இதற்கிடையே ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சிம்புவின் ‘ஈஸ்வரன்’ வெளியாகிறது. இந்நிலையில் அந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக, சிம்புவும் அவரது நண்பர் மஹத்தும் காசிக்கு சென்று, புத்தாண்டு தினத்தில் விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபாடு நடத்தியுள்ளனர். தான் வழிபாடு செய்யும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கும் சிம்பு, “இறைவன் ஈஸ்வரனுடன் புத்தாண்டு வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தவிர, இயக்குநர் ராமின் புதிய படத்தில் சிம்பு நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் எழுந்துள்ளது. அந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஏற்கனவே நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.