தனுஷ், செல்வராகவன், யுவன்சங்கர் ராஜா கூட்டணி உறுதியானது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
47

தனுஷ், செல்வராகவன், யுவன்சங்கர் ராஜா கூட்டணி உறுதியானது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் செல்வராகவன். இவருடைய இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இவர்கள் இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்.ஜி.கே படத்தில் இணைந்தனர்.

அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அன்பே பேரன்பே’ பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது. தற்போது 8-வது முறையாக செல்வராகவன் – யுவன் சங்கர் ராஜா இணைந்து பணியாற்ற இருக்கின்றனர்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் செல்வராகவன், “8-வது முறையாக யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார். தனுஷ் நடிக்கும் இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க இருக்கிறார்.