6 ஆஸ்கர் விருதுகளை குவித்த டியூன் திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

0
129

6 ஆஸ்கர் விருதுகளை குவித்த டியூன் திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

ஆஸ்கர் விருது விழாவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது `டியூன்’ என்ற திரைப்படம். இப்படத்தின் பின்னணி பற்றிய முழுமையான விவரங்களை இக்கட்டுரை வழியாக தெரிந்துக்கொள்ளுங்கள்.

94ஆவது ஆஸ்கர் விழாவில் பலரது கவனத்தையும் ஈர்த்த படமாக விளங்குகிறது டியூன் என்ற படம். பரிந்துரைக்கப்பட்ட 10 பிரிவுகளில் ஆறு விருதுகளை (சிறந்த ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, விஷுவல் எஃபெக்ட், சிறந்த பின்னணி இசை, தயாரிப்பு வடிவமைப்பு) அள்ளி வந்துள்ளது இப்படம். சுமார் 1,200 கோடி ரூபாய் செலவில் பிரபல வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம், 3 ஆயிரம் கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்தாண்டு தயாரான இப்படத்தை டெனிஸ் வில்நியூ விறுவிறுப்பாக இயக்கியுள்ளார்.

`ஃப்ராங்க் ஹெர்பர்ட்’ என்பவர் எழுதிய நாவல் அடிப்படையில் எடுக்கப்பட்ட இப்படம் முதல் பாகமாக வெளியாகியுள்ளது. அறிவாற்றல் மிகுந்த இளைஞனான பால் அட்ரீட்ஸ், தனது குடும்பத்தையும் சக மனிதர்களையும் காக்க ஒரு கிரகத்தில் இருந்து கொண்டு மற்றொரு கிரகத்தின் மீது நடத்தும் போரே டியூன் படத்தின் அடிப்படை கதையாகும். பாலைவனத்தில் மிரட்டும் ராட்சத மண்புழு போன்ற கற்பனைக்கு எட்டாத காட்சியமைப்புடன் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் பிரமாண்ட வகையில் எடுக்கப்பட்ட இப்படம், தற்போது விருதுகளை அள்ளி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தின் அடுத்த பாகமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் அதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

https://twitter.com/Variety/status/1508265089312378883