நெட்ஃபிளிக்ஸ், தனது தயாரிப்பில் முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவகதைகள்” டீஸரை வெளியிட்டது!

0
82

நெட்ஃபிளிக்ஸ்- தனது தயாரிப்பில் முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவகதைகள்” டீஸரை வெளியிட்டது!

இயக்குநர்கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள “பாவகதைகள்” ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகிறது.

மும்பை, நவம்பர் 27, 2020 : நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவகதைகள்” டீஸரை இன்று வெளியிட்டது. இந்த ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகவுள்ளது. இயக்குநர்கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இப்படத்தினை இயக்கியுள்ளனர்.

“பாவக்கதைகள்” காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை கூறும் நான்கு அழகான கதைகளை ஆந்தாலஜி வகையில் சொல்லும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலா வின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம் தங்களது தளத்தில் 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது.

தமிழின் புகழ்மிகு பெரு நட்சத்திரங்களான அஞ்சலி, பவானி ஶ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, கல்கி கொச்சிலின், பதம் குமார், பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி, மற்றும் சிம்ரனுடன் மேலும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

நடிகர்கள் & தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

இயக்கம் – சுதா கொங்கரா

எழுத்து – ஷான் கருப்பசாமி, சுதா கொங்கரா

நடிகர்கள் – பவானிஶ்ரீ, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு பாக்கியராஜ்.

இயக்கம் – விக்னேஷ் சிவன்

எழுத்து – விக்னேஷ் சிவன்

நடிகர்கள் – அஞ்சலி, கல்கி கொச்சிலின், பதம் குமார்

இயக்கம் -வெற்றி மாறன்

எழுத்து – வெற்றி மாறன்

நடிகர்கள் – ஹரி, பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி.

இயக்கம் – கௌதம் வாசுதேவ் மேனன்

எழுத்து – கௌதம் வாசுதேவ் மேனன்

நடிகர்கள் – கௌதம் வாசுதேவ் மேனன் சிம்ரன்.