5-வது கணவரையும் விவாகரத்து செய்த பிரபல ஹாலிவுட் நடிகை

0
76

5-வது கணவரையும் விவாகரத்து செய்த பிரபல ஹாலிவுட் நடிகை

பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சனுக்கு 54 வயது ஆகிறது. இவர் பே வாட்ச் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 2010-ல் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இசைக்கலைஞர் டோமி லீ என்பவரை பமீலா 1995-ல் காதலித்து திருமணம் செய்து 3 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து செய்து பிரிந்தார்.

2006-ல் கிட் ராக் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்து அவரையும் விவாகரத்து செய்தார். 2007-ல் ரிக் சாலமன் என்ற விளையாட்டு வீரரை மணந்த திருமணமும் நிலைக்கவில்லை. அடுத்த வருடமே அவரை விவாகரத்து செய்தார். ஆனால் 2014-ல் மீண்டும் ரிக் சாலமனை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடத்துக்கு பிறகு ரிக்கை 2-வது தடவையாக விவாகரத்து செய்தார்.

பமீலா ஆண்டர்சன் – டேன் ஹேஹர்ஸ்ட்டை

2020-ல் ஹாலிவுட் தயாரிப்பாளரும் சிகை அலங்கார நிபுணருமான ஜான் பீட்டர்ஸை திருமணம் செய்து 12 நாட்களில் விவாகரத்து பெற்றார். பின்னர் தனது பாதுகாவலர் டேன் ஹேஹர்ஸ்ட்டை காதலித்து வான்கூவர் தீவில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இப்போது டேன் ஹேஹர்ஸ்டையும் விவாகரத்து செய்துள்ளார்.