36 வருட கனவை நினைவாக்கிய கபில்தேவ் – கிச்சா சுதீப் பெருமிதம்!

0
101

36 வருட கனவை நினைவாக்கிய கபில்தேவ் – கிச்சா சுதீப் பெருமிதம்!

நடிகர் கிச்சா சுதீப் கிரிக்கெட் வீரருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தனது 36 வருட கனவு நினைவானதாக கருத்து பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் உலக கோப்பையை இந்திய அணிக்காக முதன்முதலில் வென்று கொடுத்தவர் கபில்தேவ். அவரது தலைமையிலான இந்திய அணி கடந்த 1983-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலககோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. இந்த நிலையில் கபில்தேவின் வாழ்க்கையையும், அவரது கிரிக்கெட் வாழ்க்கையையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு இந்தி படம் உருவாகி உள்ளது.

அந்த படம் கன்னடம் உள்பட பல மொழிகளில் உருவாகி இருக்கிறது. அந்த திரைப்படத்தை கன்னடத்தில் வெளியிடும் விழா பெங்களூருவில் நடந்தது. இதில் கபில்தேவ், நடிகர் கிச்சா சுதீப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கபில்தேவை நேரில் பார்த்ததும் நடிகர் கிச்சா சுதீப், கபில்தேவிடம் சென்று மகிழ்ச்சி பொங்க உரையாடினார். பின்னர் அவர் கபில்தேவுடன் நிறைய புகைப்படங்களையும், செல்பி புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். அதையடுத்து அவர் அந்த புகைப்படங்களை தனது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் தனது கருத்தையும் பதிவிட்டு இருக்கிறார்.

அவர் பதிவிட்டுள்ள கருத்தில், ‘‘ 36 ஆண்டுகளாக நான் அவரை பார்க்க முயற்சித்தேன். ஆனால் அது நடக்கவில்லை. 36 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நான் அவரை நேரில் பார்ப்பது மட்டுமல்லாமல் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். எனது 36 வருட கனவு தற்போது நினைவாகி உள்ளது. இது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியை தருகிறது’’ என்று பதிவிட்டு உள்ளார்.