ஷாங்-சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்க்ஸ் விமர்சனம்

0
14

ஷாங்-சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்க்ஸ் விமர்சனம்

(Shang-Chi And The Legend Of The Ten Rings)

ஷாங் சியின் அப்பாவான வென்வு டென் ரிங்ஸ் என்ற சக்திவாய்ந்த ஆயுதத்தைக் கொண்டு பல ஆயிரம் வருடங்கள் உலகையே தன் கட்டுக்குள் வைக்க யுத்தம் செய்யும் போது பல அற்புத சக்திகள் நிறைந்த ஒரு கிராமத்தை அவர் பிடிக்க நினைக்க அவருக்கு எதிராக அவரின் மகனும் மகளுமே வந்து நிற்கிறார்கள். மகன் ஷாங்க் சி, மகள் மற்றும் தோழி என மூவரில் கதை பின்னணியில் யுத்தத்தில் வெற்றி யார் பக்கம் சாய்ந்தது, இந்தக் குடும்பத்தின் பின்னணி என்ன? என்பதைச் சொல்லும் படம்.

ஷாங்க் சியின் தந்தை வென்வூ என்னும் மேண்டரினாக டோனி லியூங். எமோஷனல் மற்றும் மிரட்டல் இரண்டையும் கச்சிதமாக கொடுத்திருக்கிறார்.

இதில் சிமு லியு, டோனி லியுங், ஆவ்க்வாஃபினா, ஃபலா சென், மெங்கர் ஜாங், ஃப்ளோரியன் முன்டீனு, மைக்கேல்p யேவ், ரோனி சியேங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக காமெடியில் கலக்கியிருப்பது ஷாங்க் சியின் தோழி கேட்டியாக வரும் அக்வாஃபினா (Awkwafina)

படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் டெஸ்டின் டேனியல் கிரெட்டன்.

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் 25-வது படத்தை கெவின் ஃபைஜ், ஜொனாதன் ஸ்வார்ட்ஸ் ஆகியோர் தயாரிக்க டேவ் கல்லஹம், டெஸ்டின் டேனியல் கிரெட்டன், ஆண்ட்ரூ லான்ஹாம் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர்.

ப்ளாஸ்மேக் பின்னணியில் நிகழ்காலக்கதை என்று இரண்டையும் இணைத்து நக்கல், நையாண்டி, அதிரடி சண்டைக் காட்சிகள் எனக் கலந்து விறுவிறு காட்சிகளோடு சில சமயங்களில் எமோஷனல் காமெடி ஆக்ஷனோடு ஆசியத் தற்காப்புக் கலைகள் படத்துக்கு பெரும்பலமாக வந்து அமைந்திருக்கின்றன. அதே சமயம், புதிய உலகம், வித்தியாச மிருகங்கள், மாறுபட்ட கலாசாரம் என காட்டும் மாய உலகின் கிராமம் என்று பிரமாண்டமாக காட்சிப்படுத்திய விதம் அசத்துகிறது.

மொத்தத்தில் ஷாங்-ஜி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்க்ஸ் பிரமிக்க வைக்கும் மாயாஜாலம்.