வெனோம் 2 (Venom 2) விமர்சனம்

0
75

வெனோம் 2 (Venom 2) விமர்சனம்

நாயகன் டாம் ஹார்டி ரிப்போர்ட்டராக இருக்க அவரின் செய்தியால் சீரியல் கில்லராக இருக்கும் வில்லனுக்கு மரண தண்டனை கிடைக்கிறது. டாம் ஹார்டி உடலுக்குள் இருக்கும் வெனம் உதவியாக செயல்பட்டு வருகிறது. தன் கடைசி ஆசையாக வில்லன், டாம் ஹார்டியை சந்திக்க அழைக்க சிறைக்கு செல்லும் டாமிற்கும் வில்லனுக்கும் மோதல் ஏற்பட சீரியல் கில்லர் டாமின் கையை கடித்து விடுகிறார். அங்கிருந்து வெளியே வரும் டாம் வெனோமிடம் சண்டை போட, அவரின் உடலை விட்டு வெனோம் சென்று விடுகிறது. அதன்பின் வில்லனுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் நேரத்தில் கார்னேஜ் என்னும் வேறொரு ஆளாக மாறி அனைவரையும் கொல்கிறார். வில்லனை கட்டுப்படுத்த தன் முன்னால் காதலியின் உதவியை டாம் நாடுகிறார். வெனோமை அழைத்து கொண்டு வரும் முன்னால் காதலி, டாமின் உடலுக்குள் செல்ல உதவுகிறார். டாமும், வெனோமும் சேர்ந்து வில்லனான சீரியல் கில்லரை கொன்றார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் டாம் ஹார்டி, வில்லனாக வரும் வூடி ஹாரெல்சன் ஆகியோரின் ஆக்ரோஷமான நடிப்பும், வெனமின் கிராபிக்ஸ் காட்சிகள், சண்டைக்காட்சிகள் பிரம்மாண்டமாகவும்,ஆச்சர்யமாகவும் வடிவமைக்கப்பட்டு அசத்தியுள்ளனர்.

கார்னேஜ் மற்றும் வெனோம் தோற்றமும் இறுதி மோதலும் சிறந்த தொழில்நுட்பம் நிறைந்த ஆக்ஷன் காட்சிகளுக்கு உத்தரவாதம்.

வில்லனின் காதலியாக நவோமி ஹாரிஸ், டாமின் எக்ஸாக மிச்சல் வில்லியம்ஸ் நடிப்பு அற்புதம்.

2018ல் வெளியான வெனோமின் தொடர்ச்சியாக இந்த வெனோம் 2 ஆக்ஷன் பிரியர்களுக்கு செம விருந்து படைக்கும். இப்படம் விறுவிறுப்புக்கும், வித்தியாசத்திலும் மிரட்சியை ஏற்படுத்திடும். திரைக்கதையிலும், காட்சிபடுத்துதலிலும் ரசிக்கும்படி இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஆண்டி செர்கிஸ்.

மொத்தத்தில் வெனோம் 2 ஆக்ரோஷமான சண்டையில் அசத்தல் ரகம்.