வெங்கட் பிரபுவின் ‘மன்மத லீலை’: நிபந்தனையுடன் வெளியிட உயர்நீதிமன்றம் அனுமதி

0
75

வெங்கட் பிரபுவின் ‘மன்மத லீலை’: நிபந்தனையுடன் வெளியிட உயர்நீதிமன்றம் அனுமதி

‘மன்மதலீலை’ படத்தை நிபந்தனையுடன் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

’மாநாடு’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு ‘மன்மத லீலை’ படத்தினை இயக்கி முடித்துள்ளார். அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் மணிவண்ணன் கதையை எழுதியுள்ளார். ராக்ஃபோர்டு எண்டெர்டைன்மெண்ட் சார்பில் டி முருகானந்தம் தயாரித்துள்ளார். வெங்கட் பிரபுவின் 10-வது படமாக உருவாகியுள்ள ’மன்மத லீலை’ வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

இந்த நிலையில், ’இரண்டாம் குத்து’ பட வினியோக உரிமைக்கான தொகையில் ரூ. 2 கோடி பாக்கிவைத்துவிட்டு ’மன்மத லீலை’ படத்தை தயாரித்துள்ள ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட்க்கு தடை விதிக்கக்கோரி ப்ளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில், ’மன்மதலீலை’ படத்தை நிபந்தனையுடன் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ரூ. 30 லட்சத்தை 4 வாரங்களில் வங்கியில் செலுத்த வேண்டுமெனவும் நிபந்தனை விதித்தார் நீதிபதி எம்.சுந்தர். மேலும், ’குருதி ஆட்டம் ’ மற்றும் ’மன்மதலீலை’ படங்களின் விவகாரங்களை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி உத்தரவிட்டார்.